உள்ளடக்கத்துக்குச் செல்

இம்மானுவேல் மாக்ரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இம்மானுவேல் மாக்ரோன்
Emmanuel Macron
2017 இல் மக்ரோன்
பிரான்சின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 மே 2017
பிரதமர்
  • எட்வர்ட் பிலிப்
  • சான் காஸ்டெக்ஸ்
முன்னையவர்பிரான்சுவா ஆலந்து
பொருளாதார, தொழில்துறை, இலக்கமுறை அலுவல்கள் அமைச்சர்
பதவியில்
26 ஆகத்து 2014 – 30 ஆகத்து 2016
பிரதமர்மனுவேல் வால்ஸ்
முன்னையவர்ஆர்னாடு மொன்டெபூர்க்
பின்னவர்மைக்கேல் சபின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இம்மானுவேல் ழீன்-மிக்கேல் பிரெடெரிக் மாக்ரோன்

21 திசம்பர் 1977 (1977-12-21) (அகவை 46)
அமீன்சு, பிரான்சு
அரசியல் கட்சிமுன்னோக்கி கட்சி (என் மார்ஷ்) (2016–இன்று))
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்பிரிஜிட் துரோணோ (2007–இன்று)
வாழிடம்எலிசெ அரண்மனை
முன்னாள் கல்லூரிபாரிசு மேற்கு பல்கலைக்கழகம்
அரசியல் கல்விக்கான பாரிசுக் கல்விக்கழகம்
கையெழுத்து
இணையத்தளம்எலிசெ அரண்மனைத்தின் வலைத்தளம்

இம்மானுவேல் சான்-மிக்கேல் பிரெடெரிக் மாக்ரோன் (Emmanuel Jean-Michel Frédéric Macron, பிரெஞ்சு மொழி: [ɛmanɥɛl makʁɔ̃]; பிறப்பு: 21 டிசம்பர் 1977) பிரெஞ்சு அரசியல்வாதியும் மூத்த குடியியல் பணியாளரும் முன்னாள் முதலீட்டு வங்கியாளரும் ஆவார். இவர் 2017 மே 14 முதல் பிரான்சின் அரசுத்தலைவராக உள்ளார். கொள்கையளவில் இவர் நடுநிலையாளராகவும் தாராளமயக் கொள்கையராகவும் கருதப்படுகிறார்.

வடமேற்கு பிரான்சிலுள்ள அமியின் நகரில் பிறந்த இவர் பாரிசு நான்ட்ரே பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் பட்டம் பெற்றார். பின்பு முதுகலைப் பட்டத்தை மக்கள் தொடர்பியலில் 2004-இல் பெற்றார். பின்பு இவர் வணிக ஆய்வாளராக வணிக ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார், பின்பு ரோத்சைல்டு வங்கியில் முதலீட்டு வங்கியாளராகப் பணி புரிந்தார்.

சோசலிசுடு கட்சியின் உறுப்பினராக 2004 முதல் 2009 வரை இருந்தார். 2012-இல் பிரான்சுவா ஆலந்து அமைச்சரவையில் துணைப் பொதுச்செயலாளராக இருந்தார், இதன் மூலம் ஆலந்தின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவராக இவர் விளங்கினார். 2014-இல் பிரதமர் மனுவேல் வால்சின் அமைச்சரவையில் தொழில், வணிக, மின்னிம விவகாரம் போன்ற துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது வணிகத்து ஏதுவான பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். 2017-இல் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட வசதியாக அமைச்சரவையில் இருந்து 2016 ஆகத்து மாதத்தில் விலகினார். மக்ரோன் 2006 முதல் 2009 வரை சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தபோதிலும், 2016 நவம்பரில் அரசுத்தலைவர் பதவிக்கு நடுநிலையாளராக போட்டியிடப்போவதாக அறிவித்தார். மாக்ரோன் 2006 முதல் 2009 வரை சோசலிசக் கட்சியின் உறுப்பினராக இருந்தபோதிலும், 2016 ஏப்ரலில் நிறுவிய மையவாத, ஐரோப்பிய சார்பு அரசியல் இயக்கமான En Marche! இன் பதாகையின் கீழ் தேர்தலில் போட்டியிட்டார்.[1]

பில்லோன் விவகாரத்தின் காரணமாக, முதற்சுற்று வாக்கெடுப்பில் மெக்ரோன் முதலிடம் பிடித்தார்,[2] 2017 மே 7 அன்று நடந்த இரண்டாவது சுற்றில் 66.1% வாக்குகளைப் பெற்று தீவிர வலதுசாரி வேட்பாளர் மரீன் லெ பென்னைத் தோற்கடித்து பிரான்சின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 39-வது அகவையில், மக்ரோன் பிரான்சின் வரலாற்றில் மிக இளைய வயது அரசுத்தலைவரானார். மாக்ரோன் வெற்றி பெற்ற அடுத்த மாதத்தில் நடந்த 2017 பிரெஞ்சு சட்டமன்றத் தேர்தலில் லா ரிபப்ளிக் என் மார்ச்சே (LREM) என மறுபெயரிடப்பட்ட மக்ரோனின் கட்சி தேசியப் பேரவையில் பெரும்பான்மையைப் பெற்றது. எட்வார்ட் பிலிப்பை பிரதமராக நியமித்தார், 2020 இல் பிலிப் பதவி விலகியதை அடுத்து, சான் காசுடெக்சை பிரதமராக நியமித்தார். மாக்ரோன் 2022 அரசுத்தலைவர் தேர்தலில் இரண்டாவது முறையாக லெ பென்னைத் தோற்கடித்தார். இதன்மூலம் 2002க்குப் பிறகு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் பிரெஞ்சு அரசுத்தலைவர் வேட்பாளர் ஆனார்.[4]

மாக்ரோன் தனது பதவிக் காலத்தில், தொழிலாளர் சட்டங்கள், வரிவிதிப்பு, ஓய்வூதியங்கள் ஆகியவற்றில் பல சீர்திருத்தங்களை மேற்பார்வையிட்டார், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மாற்றத்தைத் தொடர்ந்தார். அவரது உள்நாட்டு சீர்திருத்தங்களுக்கு, குறிப்பாக முன்மொழியப்பட்ட எரிபொருள் வரி, 2018 மஞ்சள் அங்கி எதிர்ப்புகள் மற்றும் பிற எதிர்ப்புகள் உச்சக்கட்டத்தை அடைந்தது. 2020 முதல், கோவிடு-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி ஏற்றல் போன்றவற்றை வெற்றிகரமாக செயற்படுத்தினார். வெளியுறவுக் கொள்கையில், அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்தார், இத்தாலி, மற்றும் செருமனியுடன் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். ஆக்கசு பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக ஆத்திரேலியா மற்றும் அமெரிக்காவுடனான சர்ச்சையை அவர் மேற்பார்வையிட்டார், சிரிய உள்நாட்டுப் போரில் பிரெஞ்சுத் தலையீட்டைத் தொடர்ந்தார், 2022 உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பிற்கு எதிராகக் பன்னாட்டு சக்திகளுக்கு ஆதரவாகக் குரல் தந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "France's Macron joins presidential race to 'unblock France'". BBC. 16 November 2016. http://www.bbc.com/news/world-europe-37994372. பார்த்த நாள்: 26 April 2017. 
  2. "Emmanuel Macron se voit en "président des patriotes face à la menace nationaliste"". Le Parisien. 23 April 2017. http://www.leparisien.fr/elections/presidentielle/video-presidentielle-suivez-en-direct-le-discours-d-emmanuel-macron-22-04-2017-6877506.php. 
  3. l'Intérieur, Ministère de. "Résultats de l'élection présidentielle 2017". interieur.gouv.fr/Elections/Les-resultats/Presidentielles/elecresult__presidentielle-2017. பார்க்கப்பட்ட நாள் 6 August 2017.
  4. Spencer, Mimosa; Jabkhiro, Juliette; Foroudi, Layli (2022-04-24). "France's Macron beats Le Pen to win second term" (in en). Reuters. https://www.reuters.com/world/europe/macron-or-le-pen-france-faces-stark-choice-president-2022-04-24/. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்மானுவேல்_மாக்ரோன்&oldid=4145838" இலிருந்து மீள்விக்கப்பட்டது