ஆக்கஸ் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்கஸ் ஒப்பந்தம் AUKUS
சுருக்கம்ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடு
உருவாக்கம்15 செப்டம்பர் 2021; 2 ஆண்டுகள் முன்னர் (2021-09-15)
வகைஇராணுவக் கூட்டணி
நோக்கம்கூட்டுப் பாதுகாப்பு
உறுப்பினர்கள்

ஆக்கசு (AUKUS அல்லது Aukus) என்படும் ஆத்திரேலியா (A), ஐக்கிய இராச்சியம் (UK), ஐக்கிய அமெரிக்கா (US) ஆகிய நாடுகளின் முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பிற்காக 15 செப்டம்பர் 2021 அன்று செய்து கொள்ளப்பட்ட இராணுவக் கூட்டணி ஒப்பந்தம் ஆகும்.[1][2][3][4]பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வது இந்த உடன்பாட்டின் சிறப்பம்சம் ஆகும்.

ஆக்கஸ் திட்டப்படி, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் இராணுவப் பாதுகாப்பிற்கு அமெரிக்க ஐக்கிய நாடும், ஐக்கிய இராச்சியமும் அணுசக்தியால் இயகும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் உளவுத் தகவல்கள் வழங்கும்.[5]

ஆக்க்ஸ் திட்டத்திற்கான கூட்டு அறிவிப்பில் வேறு நாடுகளை இத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து குறிப்பிடவில்லை. இருப்பினும் அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பில், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ளவே ஆக்சஸ் திட்டம் உருவாக்கப்பட்டது எனக்கூறப்பட்டுள்ளது[6]

ஆக்கஸ் திட்டத்தின் படி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உளவுத் தகவல்கள், சைபர் பாதுகாப்பு, அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள், நீண்ட தூரம் எறியப்படும் ஏவுகணைகள், கடலடி பாதுகப்பை வலுப்படுத்தும் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றும், மேலும் திட்டம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய நலன்களுக்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்து மற்றும் கனடா நாடுகளின் உளவுத் துறைகளும் இத்திடத்திற்கு உளவு வேலைகள் பார்க்கும்.[7]

அக்கஸ் திட்டத்தின் செயல்பாடுகள்[தொகு]

ஆக்கஸ் திட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் கட்டப்பட உள்ளது. இதனை கட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனையை அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்க உள்ளது. ஆக்கஸ் உடன்பாட்டின்படி குறைந்தது 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Aukus: UK, US and Australia launch pact to counter China
  2. The AUKUS agreement to equip Australia with n-subs, and why it has upset France
  3. "இந்தோ-பசிபிக்கில் சீனாவின் நகர்வுக்கு செக்...மூன்று நாடுகள் சேர்ந்து ஆக்கஸ் திட்ட அறிவிப்பு". Archived from the original on 2021-09-17. பார்க்கப்பட்ட நாள் 2021-09-17.
  4. Ward, Alexander. "Biden to announce joint deal with U.K. and Australia on advanced defense-tech sharing" (in en). Politico. https://www.politico.com/news/2021/09/15/biden-deal-uk-australia-defense-tech-sharing-511877. 
  5. Sanger, David E.; Kanno-Youngs, Zolan (15 September 2021). "Biden Announces Defense Deal With Australia in a Bid to Counter China" (in en-US). The New York Times. https://www.nytimes.com/live/2021/09/15/us/political-news. 
  6. "Pact with U.S., Britain, will see Australia scrap French sub deal-media". ராய்ட்டர்ஸ் (in ஆங்கிலம்). 16 September 2021. பார்க்கப்பட்ட நாள் 16 September 2021.
  7. "Aukus: China denounces US-UK-Australia pact as irresponsible" (in en-GB). BBC News. 16 September 2021. https://www.bbc.com/news/world-58582573. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்கஸ்_திட்டம்&oldid=3606780" இலிருந்து மீள்விக்கப்பட்டது