இந்திய 19 வயதிற்குட்பட்டோர் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய 19 வயதிற்குட்பட்டோர் துடுப்பாட்ட அணி (India national under-19 cricket team) சர்வதேச அளவில் 19 வயதிற்குட்பட்டோருக்கான துடுப்பாட்டப் போட்டிகளில் இந்தியாவினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்திய அணி நான்கு முறை உலகக் கிண்ணத்தினை வென்றுள்ளது மேலும் அதிக ஒருநாள்போட்டிகளில் (77%) சிறந்த வெற்றி சதவீதத்தைப் பெற்றுள்ளது. [1]

இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை நான்கு முறை வென்றுள்ளது மற்றும் மூன்று முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு முகமது கைஃப் தலைமையிலும், 2008 இல் விராட் கோலியின் தலைமையிலும், 2012 இல் உன்முக்த் சந்த் தலைமையிலும், 2018 இல் பிரித்வி ஷாவின் தலைமையிலும் வென்றது.

இந்த அணிக்கு தற்போது யாஷ் துல் தலைவராகவும், மேனாள் இந்திய துடுப்பாட்ட வீரர் ரிஷிகேஷ் கனித்கர் பயிற்சியாளராகவும் உள்ளார். [2]

ஐசிசி - துடுப்பாட்ட உலகக் கோப்பை சாதனை[தொகு]

U19 உலகக் கோப்பையில் இந்தியாவின் சாதனை
ஆண்டு இடம் முடிவு
1988  Australia 6வது இடம்
1998  South Africa இரண்டாவது சுற்று
2000  Sri Lanka வாகையாளர்
2002  New Zealand அரையிறுதிப் போட்டியாளர்கள்
2004  Bangladesh அரையிறுதிப் போட்டியாளர்கள்
2006  Sri Lanka இரண்டாம் இடம்
2008  Malaysia வாகையாளர்
2010  New Zealand 6வது இடம்
2012  Australia வாகையாளர்
2014  UAE 5வது இடம்
2016  Bangladesh இரண்டாம் இடம்
2018  New Zealand வாகையாளர்
2020  South Africa இரண்டாம் இடம்
2022  West Indies

ஆசிய கோப்பை சாதனை[தொகு]

U19 ஆசிய கோப்பையில் இந்தியாவின் சாதனை
ஆண்டு இடம் முடிவு
1989  Bangladesh வாகையாளர்
2003  Pakistan வாகையாளர்
2012  Malaysia வாகையாளர்
2014  United Arab Emirates வாகையாளர்
2016  Sri Lanka வாகையாளர்
2017  Malaysia குழு நிலை
2018  Bangladesh வாகையாளர்
2019  Sri Lanka வாகையாளர்
2021  UAE வாகையாளர்

கௌரவங்கள்[தொகு]

  • உலகக் கிண்ணம்:
    • வாகையாளர்(4): 2000, 2008, 2012, 2018
  • ஆசியக் கிண்ணம்:
    • வாகையாளர்(8): 1989, 2003, 2012, 2013-14, 2016, 2018, 2019, 2021

சான்றுகள்[தொகு]

  1. "Under-19s Youth One-Day Internationals / Team records / Results summary". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 June 2012.
  2. "Rahul Dravid replaced as India A India U19 coach". பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2020.