இந்தியத் தங்க முதுகு தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியத் தங்க முதுகு தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராணிடே
பேரினம்:
இந்தோசில்விரானா
இனம்:
இ. இண்டிகா
இருசொற் பெயரீடு
இந்தோசில்விரானா இண்டிகா
பிஜூ மற்றும் பலர், 2014
வேறு பெயர்கள் [2]

கையலாரானா இண்டிகா பிஜூ மற்றும் பலர், 2014[1]

இந்தியத் தங்க முதுகு தவளை (Indosylvirana indica-இந்தோசில்விரானா இண்டிகா), இராணிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது முன்னர் இந்தோசில்விரானா டெம்போராலிசுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது, ஆனால் 2014 ஆய்வில் இது ஒரு தனித்துவமான சிற்றினமாகக் கண்டறியப்பட்டது.[1]

சொற்பிறப்பியல்[தொகு]

இண்டிகா என்ற சிற்றினத்தின் பெயர் இலத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. இது இந்தியாவில் இருந்து இச் சிற்றினத்தின் தோற்றத்தைக் குறிக்கிறது. [1]

பரவல்[தொகு]

இந்தியத் தங்க முதுகு தவளை, இந்திய மாநிலங்களான கருநாடகம் மற்றும் கேரளம் மாநிலங்களின் பாலக்காட்டுக் கணவாய் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2]

வாழ்விடம்[தொகு]

இந்தியத் தங்க முதுகு தவளை, இரண்டாம் நிலை மற்றும் முதன்மைக் காடுகளில் வாழ்கிறது. மேலும் காடுகளை ஒட்டிய ஈரநிலங்களுக்கு அருகில் காணப்படுகிறது. சில சமயங்களில் வற்றாத வேகமான நீரோடைகளுடன் தொடர்புடையது. இது கடல் மட்டத்திலிருந்து 40 மற்றும் 1,145 m (131 மற்றும் 3,757 அடி) வரையிலான உயரத்தில் காணப்படுகிறது.[1] 2019-ன் பிற்பகுதியில், இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட இனமாக மதிப்பீடு செய்யப்படவில்லை.[3]

விளக்கம்[தொகு]

வயது வந்த ஆண் தவளை 46–59 mm (1.8–2.3 அங்)உடல் நீளமும், பெண் தவளை 66–74 mm (2.6–2.9 அங்) நீளமும் உடையது. தலை அகலத்தை விட நீளமானது. முதுகுபுற பார்வையில் மூக்கு நீள்வட்டமாகவும் பக்கவாட்டுப் பார்வையில் வட்டமாகவும் இருக்கும். செவிப்பறை தனித்துவமானது. முன்கைகள் மிதமான குறுகிய மற்றும் மெல்லியதாகக் காணப்படும். விரல்கள் நீளமானவை மற்றும் நுனிகளில் மழுங்கிய கூர்மையான வட்டுகளைக் கொண்டுள்ளன. தோல் விளிம்புகள் உள்ளன. பின்னங்கால்கள் ஒப்பீட்டளவில் நீளமாகவும் மெல்லியதாகவும் இருக்கும். கால்விரல் நுனிகள் மழுங்கிய கூர்மையான வட்டுகளைக் கொண்டுள்ளன; கால்விரல்கள் மிதமான வலைப்பக்கத்தைக் கொண்டுள்ளன. முதுகுப் பகுதிகள் வெண்கல நிறத்திலும், கீழ்ப் பகுதி வெளிர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். செவிப்பறைப் பகுதி வெளிர் சாம்பல்-பழுப்பு நிறமாகவும், செவிப்பறை வெளிர் பழுப்பு நிறமாகவும் இருக்கும். மேல் உதடு மஞ்சள்-வெள்ளை பட்டையைக் கொண்டுள்ளது. இது கை செருகலுக்கு மேலே தொடர்கிறது. தொண்டை, மார்பு மற்றும் தொப்பை ஆகியவை சாம்பல்-வெள்ளை நிறத்தில் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Biju, S.D.; Garg, Sonali; Mahony, Stephen; Wijayathilaka, Nayana; Senevirathne, Gayani; Meegaskumbura, Madhava (2014). "DNA barcoding, phylogeny and systematics of Golden-backed frogs (Hylarana, Ranidae) of the Western Ghats-Sri Lanka biodiversity hotspot, with the description of seven new species". Contributions to Zoology 83 (4): 269–335. doi:10.1163/18759866-08304004. http://repository.naturalis.nl/document/550200. 
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2019). "Indosylvirana indica (Biju, Garg, Mahony, Wijayathilaka, Senevirathne, and Meegaskumbura, 2014)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 8 October 2019.
  3. "IUCN Red List of Threatened Species". பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.