ஆஸ்திரேலியா நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆஸ்திரேலியா நாள்
Australia Day
ஆஸ்திரேலியா நாள்Australia Day
மாற்றுப் பெயர் நிறுவன நாள், நினைவு நாள்
அனுசரிப்பவர்கள் ஆஸ்திரேலியர்களால் பொது விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது
முக்கியத்துவம் 1788 இல் முதன் முதலாக ஜாக்சன் துறையில் ஆங்கிலேயர் வந்திறங்கியமை
நாள் ஜனவரி 26
அனுசரிப்புகள் அணிவகுப்புகள், குடியுரிமை வழங்கும் வைபவம், Order of Australia, ஆண்டின் சிறந்த ஆஸ்திரேலியர் விருதுகள் வழங்கல்
தொடர்புடையன அன்சாக் நாள்
Australia Day Picnic, Brisbane, 1908

ஆஸ்திரேலியா நாள் (Australia Day), என்பது ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளன்று ஆஸ்திரேலியா முழுவதும் தேசிய ரீதியாகக் கொண்டாடப்படும் நிகழ்வாகும். இது ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக பிரித்தானியக் குடியேறிகள் வந்திறங்கிய நாளை நினைவு கூரும் முகமாக கொண்டாடப்படுகிறது. 1788 இல் இந்நாளில் நியூ சவுத் வேல்ஸ், ஜாக்சன் துறையில் ஆளுநர் ஆர்தர் பிலிப் என்பவரால் முதலாவது குடியேற்ற நாடு அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா நாள் நாடு முழுவதும் ஒரு பொது விடுமுறை நாளாகும்.

முதலாவது ஆஸ்திரேலியா நாள் 1808 ஆம் ஆண்டில் கொண்டாடப்படட்து. அப்போது ஆளுநராக இருந்த லக்லான் மக்குவாரி இவ்விழாவை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்[1]. 2004 ஆண்டில், கிட்டத்தட்ட 7.5 மில்லியன் மக்கள் நாடெங்கும் நிகழ்ந்த வைபவங்களில் கலந்து கொண்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Australia Day History". Australia Day Council of New South Wales. பார்த்த நாள் 2007-10-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்திரேலியா_நாள்&oldid=1351051" இருந்து மீள்விக்கப்பட்டது