ஆம் ஆத்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆம் ஆத்மி (Aam Aadmi) என்பது சராசரி குடிமகன் அல்லது சாதாரண குடிமகன் எனப் பொருள்படும் இந்தி மற்றும் உருது மொழிகள் கலந்த வார்த்தை ஆகும். இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தியப் பொதுத்தேர்தல்களைக் கருத்தில் கொண்டு 2004 ஆம் ஆண்டில் தனது அரசியல் தீர்மானமாக "ஆம் ஆத்மி" முழக்கத்தை அறிமுகப்படுத்தியது. ஆம் ஆத்மியின் முக்கிய நோக்கம் இந்தியாவில் தகவல் பெறும் உரிமை சட்டத்தை பலப்படுத்துவது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் போன்ற நடுத்தர மக்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்யும் திட்டங்களை அறிமுகப்படுத்துவது ஆகும். ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சியை பிரபலப்படுத்த கட்சி நிர்வாகிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சியை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அந்த கட்சியினரிடம் உள்ளது. ஆனால் தமிழக மக்கள் டெல்லியில் காங்கிரஸ் கூட்டணியுடன் அமைத்து ஆட்சியை கைப்பற்றி உள்ள ஆம் ஆத்மியின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அதன் செயல்பாட்டை பொறுத்தே தமிழகத்தில் ஆம் ஆத்மி வளருமா? என்பது தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி வருகிறார்கள். இது வரை 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து இருக்கிறார்கள். ஆம் ஆத்மியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான பிரசாந்த்பூஷன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் இடிந்த கரைக்கு சென்றார். அங்கு அணு உலைக்கு எதிராக பேராடும் இயக்க தலைவர் உதயகுமாரை சந்தித்தார். அப்போது ஆம் ஆத்மி கட்சியில் இணையும் படி அழைப்பு விடுத்தார். பிரசாந்த்பூஷன், தமிழக அரசியல் சூழ்நிலைகளையும், ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவரிவான அறிக்கையை கட்சி தலைவர் கெஜ்ரிவாலிடம் அளிப்பார். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட செயல்திட்டம் வகுக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினாசாமி கூறும் போது, 12 மாவட்டங்களில் கட்சி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதமாக கட்சியை அனைத்து மாவட்டங்களிலும் பலப்படுத்தி வருகிறோம் என்றார். பாராளுமன்ற தேர்தலில் வாய்ப்புள்ள தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவும் தீர்மானித்துள்ளார்கள். தற்போதைய சூழ்நிலையில் ஆட்சிக்கு எதிரான அலை இல்லாத நிலையில் ஆம் ஆத்மி கட்சி வலுவாக கால் ஊன்றுவது கடினம் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். இன்னொரு சாரார், புது கட்சி மீது முதலில் நம்பிக்கை வரவேண்டும் அதன்பிறகுதான் ஆதரவு கிடைக்கும் என்கிறார்கள். தமிழகத்தை பொறுத்த வரை மக்கள் 3–வது அணியை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கட்சியோ, தலைவர்களோ உருவாகவில்லை. எனவே அந்த இடத்தை கைப்பற்றலாம் என்று ஆம் ஆத்மி நினைக்கிறது. ஆனால் அதற்கேற்ப ஆம் ஆத்மியில் கட்சியை வழி நடத்தவும், மக்களிடம் கொண்டு செல்லவும் பிரபலமான தலைவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்_ஆத்மி&oldid=1717758" இருந்து மீள்விக்கப்பட்டது