உள்ளடக்கத்துக்குச் செல்

அல் அக்சா பள்ளிவாசல்

ஆள்கூறுகள்: 31°46′34″N 35°14′09″E / 31.77617°N 35.23583°E / 31.77617; 35.23583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அல் அக்சா மசூதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அல் அக்சா பள்ளிவாசல்
அல் அக்சா பள்ளிவாசல் is located in Jerusalem
அல் அக்சா பள்ளிவாசல்
Location within the Old City of Jerusalem
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பழைய நகர்
புவியியல் ஆள்கூறுகள்31°46′34″N 35°14′09″E / 31.77617°N 35.23583°E / 31.77617; 35.23583
சமயம்இசுலாம்
தலைமைImam(s):
Muhammad Ahmad Hussein

அல் அக்சா பள்ளிவாசல் (அரபு:المسجد الاقصى, மஸ்ஜித் அல்-அக்ஸா) யெருசலேமிலுள்ள, மாஜெத் குன்று அல்லது அல்-ஹாரம் ஆஷ்-ஷெரிப் (Noble Sanctuary) எனப்படும், சமயக் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

இசுலாம்களின் மரபுப்படி முகமது நபி அவர்கள் மலை 621 இலிருந்து சுவர்க்கம் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த பள்ளிவாசல் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதமான பள்ளிவாசலாகக் கருதப்படுகிறது. பாறைக் குவிமாடம் இற்குப் பின்னர் (கிபி 690), கிபி 710 இல், உமயாட்டுகளால் மரத்தாலான முதலாவது அல் அக்ஸா பள்ளிவாசல் கட்டப்பட்டது. இது குறைந்தது 5 தடவையாவது மீளக்கட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால், ஒரு தடவையாவது, முற்றாக அழிந்துள்ளது. கடைசியாக, பெரிய மீளமைப்பு 1035 ஆம் ஆண்டு நடைபெற்றது.

அல் அக்சா பள்ளிவாசலே யெருசலேமிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசலாகும். 5000 பேர்வரை உள்ளேயும், வெளியிலுமிருந்து தொழக்கூடிய வசதிகள் உண்டு. இக்கட்டிடத்தில், சிலுவைபடையினர்களின் (Crusader) பாணியுட்பட பல பாணிகளின் கலவை காணப்படுகிறது. சிலுவைபடையினர் யெருசலேமைக் கைப்பற்றி வைத்திருந்தபோது, இந்த பள்ளிவாசல் ஓர் அரண்மனையாகப் பயன்படுத்தினார்கள். முற்காலத்தில் யூத ஆலயம் இருந்த இடத்தில் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையில், அப்பொழுது இது சொலமனின் ஆலயம் என அழைக்கப்பட்டது.[சான்று தேவை] அவ்வப்போது, அல்-அகசா ஆக்கிரமிப்பு யூத தேசமான இஸ்ரேலின் ராணுவ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காக இருந்தது எனினும், பெரும்பாலான தாக்குதல்கள், பாலஸ்தீன மற்றும் ஜோர்டான் பாதுகாப்புப் படைகளால் முறியடிக்கப்பட்டது

இம் பள்ளிவாசலின் சுற்றுமதிலின் ஒருபகுதியான மேற்குச் சுவர் யூதர்களின் வணக்கத்துக்குரியதாக இருப்பதால், யெரூசலத்தின் ஒரு சிறிய பகுதியான இது முசுலிம்கள், யூதர்களுக்கிடையேயான முறுகல் நிலைக்குக் காரணமாகக் கூடியது.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_அக்சா_பள்ளிவாசல்&oldid=3819137" இலிருந்து மீள்விக்கப்பட்டது