அலோபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலோபா
அலோபா ஹசரென்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வாலற்றன
குடும்பம்:
டைகுரோகுளோசிடே
பேரினம்:
அலோபா

ஒக்லர் & துபாயிசு, 2006
மாதிரி இனம்
அலோபா ஹசரென்சிசு
துபாயிசு & கான், 1979
சிற்றினம்

2, உரையினைக் காண்க

அலோபா (Allopa) என்பது டைகுரோகுளோசிடே குடும்பத்தில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான சிற்றினங்களைக் கொண்ட தவளைப் பேரினமாகும். இவை இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்திலும் பாக்கித்தானிலும் மட்டுமே காணப்படுகின்றன. இந்த பேரினத்தின் தொகுதிப் பிறப்பு குறித்த மூலக்கூறு ஆய்வுகள் நடைபெறாத காரணத்தினால் இதனுடைய வகைப்பாட்டியல் நிலை நிச்சயமற்றதாக உள்ளது.[1]

சிற்றினங்கள்[தொகு]

அலோபா பேரினத்தின் கீழ் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் மட்டுமே உள்ளன:[1][2]

  • அலோபா பார்மோசென்சிசு (கான் மற்றும் தஸ்னிம், 1989)
  • அலோபா ஹசரென்சிசு (துபாயிசு மற்றும் கான், 1979)

அலோபா பார்மோசென்சிசு என்பது அலோபா ஹசரென்சிசுவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Frost, Darrel R. (2013). "Allopaa Ohler and Dubois, 2006". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 17 January 2014.
  2. "Allopaa Ohler and Dubois, 2006". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
  3. Frost, Darrel R. (2013). "Allopaa barmoachensis (Khan and Tasnim, 1989)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 17 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோபா&oldid=3936332" இலிருந்து மீள்விக்கப்பட்டது