அனௌஷ்கா ஷங்கர்
| அனௌஷ்கா ஷங்கர் | |
|---|---|
Anoushka Shankar at the Global Rhythm 15th Anniversary Party in 2007
|
|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | சூன் 9, 1981 |
| பிறப்பிடம் | மும்பை, இந்தியா |
| இசை வகை(கள்) | இந்திய பாரம்பரிய இசை |
| தொழில்(கள்) | சித்தார் கலைஞர், இசையமைப்பாளர் |
| இசைக்கருவிகள் | சித்தார் |
| இசைத்துறையில் | 1998–இற்றை |
| வெளியீடு நிறுவனங்கள் | ஏஞ்சல் |
| வலைத்தளம் | AnoushkaShankar.com |
அனௌஷ்கா ஷங்கர் (Anoushka Shankar ) வங்காள: অনুষ্কা শংকর (பிறப்பு: 1981, ஜூன், 6) ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் ஒரு சித்தார் இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர். இவர் இந்திய சிதார்க் கலைஞரான ரவி ஷங்கர் மற்றும் ஒரு வங்கி ஊழியரான சுகன்யா ராஜன் ஆகியோரின் மகளும் கிராமி விருது வென்றவரான நோரா ஜோன்ஸ் (Norah Jones) என்பவருக்குத் தனது தந்தை வழியில் ஒன்று விட்ட சகோதரியுமாவார்.[1]
பொருளடக்கம் |
சொந்த வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
லண்டனில் பிறந்த ஷங்கர் தமது குழந்தைப் பருவத்தை லண்டன் மற்றும் டெல்லி ஆகிய இரு இடங்களிலும் கழித்தார். பதின்வயதில் அவர், கலிஃபோர்னியா என்சினிடாஸில் வசித்து, சான் டைகுட்டியோ அகாடமியில் பயின்றார். 1999வது வருடம் சிறப்புப் பட்டப்படிப்பு பயின்ற அவர், கல்லூரியில் சேருவதை விடவும், இசைத் துறையில் சாதனை புரிவதையே விரும்பினார்.[1]
தொழில் வாழ்க்கை[தொகு]
ஒரு சிறு குழந்தையாக இருக்கும்போதே, தமது தந்தையுடன் சிதார்ப் பயிற்சியைத் துவங்கிய ஷங்கர், தமது 13ஆம் வயதில் மேடை நிகழ்ச்சி ஒன்றை அளித்து, 16வது வயதில் இசைக்கான முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[1]
1998ஆம் ஆண்டில் அனௌஷ்கா என்ற தமது முதல் இசைத் தொகுப்பினை அவர் வெளியிட்டார். பின்னர், 2000ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்தில், கொல்கத்தாவின் ராமகிருஷ்ணா மையத்தில் நிகழ்ச்சி அளித்த முதல் பெண்மணியாக ஷங்கர் விளங்கினார். ஷங்கர் மற்றும் அவருடைய ஒன்று விட்ட சகோதரியான நோரா ஜோன்ஸ் ஆகிய இருவருமே 2003ஆம் ஆண்டு கிராமி விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.[1]
கார்ஷ் காலே என்பவருடன் இணைந்து, 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று, ப்ரீத்திங் அண்டர் வாட்டர் என்னும் இசைத்தொகுப்பினை ஷங்கர் வெளியிட்டார். இது பாராம்பரிய சிதார் மற்றும் மின்னணுத் தாளம் மற்றும் இன்னிசை ஆகியவற்றின் கலவையாகும். இதில் குறிப்பிடத்தக்க வகையில், நோரா ஜோன்ஸ், ஸ்டிங் மற்றும் தனது மகளுடன் சிதாரில் ஒரு இருவர் இசையை அளித்த ரவி ஷங்கர் ஆகியோரின் குரல் பங்களிப்புகள் இருந்தன.
2009ஆம் ஆண்டு அனௌஷ்கா இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஹெச்டி சிட்டி என்னும் வாழ்வு முறை துணையிதழில் பத்திகள் எழுதத் துவங்கினார். இந்தப் பத்திகள் தேசிமார்ட்டினி என்னும் சமூக வலையமைப்பினில் நேரடிக்-கணினி முறைமையில் காணக் கிடைக்கின்றன. [2]
ஆதரவு நிகழ்ச்சிகள்[தொகு]
2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 அன்று, அவர் லண்டன் நகரில் ராயல் ஆல்பர்ட் ஹால் என்னுமிடத்தில் ஜார்ஜிற்கான இசை நிகழ்ச்சி என்பதனை நிகழ்த்தி அதில் தாமும் பங்கேற்றார். அது ஜார்ஜ் ஹாரிசன் என்பவரின் நினைவாக, 1971ஆம் ஆண்டு ஹாரிசானுடன், ரவி ஷங்கர் அளித்த பங்களாதேஷிற்கான இசை நிகழ்ச்சி என்னும் ஆதரவு நிகழ்ச்சியின் வடிவில் அமைக்கப்பட்ட நிகழ்ச்சியாக அமைந்தது.
2008ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஷங்கரும் ஜெத்ரோ டுல் ஆகிய இருவரும் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி மும்பை நகரில் நிகழவிருந்த ஒரு நிகழ்ச்சியினை ஒத்தி வைத்தனர்.[3] அந்த நிகழ்ச்சியை அவர்கள் எ பில்லியன் ஹேண்ட்ஸ் கான்சர்ட் என்னும் பெயரில் தாக்குதல்களுக்குப் பலியானவர்களுக்கான ஒரு ஆதரவு நிகழ்ச்சியாக மாற்றியமைத்து 2008ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் நாள் நிகழ்த்தினர்.[4] இந்த முடிவைக் குறித்துப் பேசுகையில் ஷங்கர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்: " ஒரு இசைக் கலைஞராக, நான் இவ்வாறுதான் பேசுகிறேன்; என்னுள் இருக்கும் கோபத்தை நான் இவ்வாறுதான் வெளிப்படுத்துகிறேன் [...] இந்தச் சம்பவங்களால் எங்களது சுற்றுலா முழுவதுமே மாறுதலுக்கு உள்ளாகி விட்டது; நிகழ்ச்சியின் கட்டமைப்பு அதே போலவே இருப்பினும், உணர்வு பூர்வமாக நாங்கள் இன்னும் அதிகமாகவே கூற முயற்சிக்கிறோம்." [5]
விருதுகள்[தொகு]
பிரிட்டிஷ் மக்களவைக் கேடயம் 1998[1]
- ஆண்டின் பெண்மணி (2003வது ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கப்பட்ட இந்த விருதினை கரினா கபூர் , ரிது பெரி மற்றும் ரியா பிள்ளை ஆகியோருடன் இணைந்து பெற்றார்).[1]
செயற்பாடுகள்[தொகு]
ஷங்கர் விலங்கினத்தின் உரிமைகள் மற்றும் விலங்குகளை நன்முறையில் நடத்தும் மக்கள் (பிஈடிஏ) என்னும் குழு ஆகியவற்றிற்கான ஆதரவாளர். அவரும் மற்றும் அவரது தந்தையாரும் விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தயாரிக்கப்பட்ட 30 விநாடிகளுக்கான பொதுச் சேவை அறிவிப்பு ஒன்றில் தோன்றியுள்ளனர்.[6] ஷங்கர் முற்றிலுமாக சைவ உணவுப் பழக்கம்[7] கொண்டவர். *டிரிப்பிள் ஜே உடனான ஒரு வானொலிப் பேட்டியில் (ஞாயிறு இரவு சஃப்ரான்), தாம் ஒரு சைவ உணவுப் பழக்கம் கொண்டவர் அல்ல என்று அவர் கூறியுள்ளார். அனௌஷ்கா, ஐக்கிய நாடுகள் உலக உணவு நிரலின் அதிகாரபூர்வமான இந்தியத் தகவலாளர் ஆவார்.
இசை வரலாறு[தொகு]
ஒலித்தள இசைத் தொகுப்புகள்[தொகு]
- அனௌஷ்கா (1998)
- அனௌராக் (2000)
- ரைஸ் (2005)
- ப்ரீத்திங் அண்டர் வாட்டர் (2007)
நேரடி நிகழ்ச்சிகளும் தொகுப்புகளும்[தொகு]
- கார்னேஜி ஹால் என்னுமிடத்திலான நேரடி நிகழ்ச்சி (2001)
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Anoushka Shankar Biography". musicianguide.com. பார்த்த நாள் January 20, 2009.
- ↑ "Anoushka Shankar columns". Desimartini. பார்த்த நாள் 2008-10-24.
- ↑ அவரது உழைப்பின் குழல்
- ↑ எ பில்லியன் ஹேண்ட்ஸ் - பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஒரு சிறந்த நாளைய பொழுதிற்காகவும் இணைந்து கொள்ளுங்கள்
- ↑ பயங்கரமான தாக்குதல்களுக்குப் பிறகு, மும்பை முதல் இசை நிகழ்ச்சியைப் பெருந்திரளாக வரவேற்கிறது.
- ↑ [1]
- ↑ Sreelalitha, W. (2007-11-05). "Band vegan". The Hindu. http://www.hindu.com/mp/2007/11/05/stories/2007110550720300.htm. Retrieved 2009-11-10.
புற இணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Anoushka Shankar தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- அதிகாரபூர்வமான வலைத்தளம்
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் Anoushka Shankar
- நிகழ்ச்சி தொடரவேண்டும் - எ பில்லியன் ஹேண்ட்ஸ் கான்சர்ட் என்பதன் மீதான ஒரு ஒளிக்காட்சி பேட்டி
- அனௌஷ்கா ஷங்கர்: வேறுபட்ட உலகங்கள், ஒரே இசை மொழி- சிதார் மற்றும் இசைக் குழுவிற்காக ரவி ஷங்கர் அளித்த மூன்றாம் இசை நிகழ்ச்சி அளிப்பதைப் பற்றிய ஒரு ஒளிக்காட்சி பேட்டி.
- அனௌஷ்கா சுற்றுலா பற்றிய தகவல் @ லைவ்ஈஸ்பெட்டர்
|
||||||||||||||