அஜனூர்

ஆள்கூறுகள்: 12°20′24″N 75°5′24″E / 12.34000°N 75.09000°E / 12.34000; 75.09000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜனூர்
Ajanur
பஞ்சாயத்து
கடற்கரைச் சாலை, காஞ்ஞங்காடு
கடற்கரைச் சாலை, காஞ்ஞங்காடு
அஜனூர் is located in கேரளம்
அஜனூர்
அஜனூர்
கேரளத்தில் அமைவிடம்
அஜனூர் is located in இந்தியா
அஜனூர்
அஜனூர்
அஜனூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°20′24″N 75°5′24″E / 12.34000°N 75.09000°E / 12.34000; 75.09000
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்காசர்கோடு
பரப்பளவு
 • மொத்தம்14.79 km2 (5.71 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்33,079
 • அடர்த்தி2,200/km2 (5,800/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
671 531
தொலைபேசி குறியீடு91 467
வாகனப் பதிவுKL-60
இணையதளம்kasaragod.nic.in

அஜனூர் (Ajanur) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், காசர்கோடு மாவட்டத்தில் இதே பெயரிலான கிராம ஊராட்சியைச் சேர்ந்த ஒரு ஊராகும். இது காசர்கோடு மாவட்டத்தில் ஐந்தாவது பெரிய நகராகும். [1]

அஜனூரும் காஞ்ஞங்காடும்[தொகு]

காஞ்ஞங்காடு நகரத்தின் சில பகுதிகள் அஜனூர் பஞ்சாயத்து நிர்வாக பிரிவின் கீழ் உள்ளன. அதேசமயம் இதன் புறநகர் பகுதிகளானது காஞ்ஞங்காடு நகரத்தின் ஒரு பகுதியாகவும் தொடர்கிறது.


அஜனூர் காஞ்ஞங்காடு நகருக்கு வடக்கே அமைந்துள்ளது. இது கன்னியாகுமரி-பனவேல் சாலையில் சுமார் 5 கி.மீ தூரத்திற்கு 28   கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த ஊரின் மொத்த மக்கள் தொகை 42,467 ஆக பதிவாகியுள்ளது, இங்கு மக்கள் தொகை அடர்த்தியானது ஒரு சதுர கி.மீட்டருக்கு 1,526 என்று உள்ளது.

உள்ளூர் நிர்வாக வார்டுகள்[தொகு]

அஜனூர் பஞ்சாயத்து பின்வரும் 23 கிராமங்கள் அல்லது "வார்டுகளை" கொண்டுள்ளது:

வார்டு பெயர் இடம் மக்கள் தொகை [2]
1 இராவணேஷ்வரம் 12°22′26″N 75°04′48″E / 12.374°N 75.080°E / 12.374; 75.080 2,546
2 இராமகிரி 2,377
3 வேலஸ்வரம் 12°21′14″N 75°05′10″E / 12.354°N 75.086°E / 12.354; 75.086 2,356
4 மடியன் 12°21′11″N 75°04′41″E / 12.353°N 75.078°E / 12.353; 75.078 2,678
5 மணிகோத் 1,775
6 அடோட் 1,908
7 பெல்லிகோத் 12°20′20″N 75°05′20″E / 12.339°N 75.089°E / 12.339; 75.089 2,326
8 கட்டுகுளங்கரா 2,190
9 மாவுங்கல் 12°20′24″N 75°06′14″E / 12.340°N 75.104°E / 12.340; 75.104 2,188
10 ராம்நகர் 2,128
11 பல்லட் 1,868
12 கிஷக்கும்காரா 12°19′52″N 75°05′31″E / 12.331°N 75.092°E / 12.331; 75.092 2,080
13 துலிச்சேரி 2,204
14 அதினல் 2,634
15 இத்தம்மல் 3,010
16 கோலவயல் 12°20′06″N 75°04′23″E / 12.335°N 75.073°E / 12.335; 75.073 3,015
17 அஜனூர் கடற்கரை
(அஜனூர் கடற்புரம்)
12°19′59″N 75°04′01″E / 12.333°N 75.067°E / 12.333; 75.067 3,370
18 முத்தும்தலா 3,200
19 மட்டுமல் 3,405
20 மல்லிகமட் 2,933
21 சித்தாரி 12°21′25″N 75°03′54″E / 12.357°N 75.065°E / 12.357; 75.065
22 பாரிக்காடு
23 முக்கூடு

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

அஜனூரானது கவிஞர் பி. குஞ்ஞிராமன் நாயரின் பிறப்பிடமாகும், அவரின் தம்பி பி. கிருஷ்ணன் நாயர் இந்த பஞ்சாயத்தின் முதல் தலைவராக இருந்தார்.

சோசலிச கட்சித் தலைவர் முதல்வர் பத்மநாபன் நாயருக்கும் அஜனூரில் வீடு இருந்தது.

வழிபாட்டு தலங்கள்[தொகு]

மடியன் கூலம் கோயில் என்ற கோயில் அஜனூரில் அமைந்துள்ளது ( 12°21′07″N 75°04′52″E / 12.352°N 75.081°E / 12.352; 75.081 ). கோயிலின் முதன்மைத் தெய்வம் பத்ரகாளி ஆவார். [3] இக்கோயிலில் தக்ஷயாகம், பலாழிமதனம், சீதாசுயம்வரம் போன்ற புராண காட்சிகள் மரவேலைப்பாடுகளில் செதுக்கபட்டுள்ளன. இக்கோயிலில்ல் ஆண்டு விழாவான பட்டுசத்சவம் ஒன்பது நாட்கள் நடக்கின்றன. அச்சமயம் பல பண்பாட்டடு நிகழ்வுகள் நடக்கின்றன. இந்த ஊரில் இந்தக் கோயிலைத்தவிர ஒரு தேவாலயமும், 13 பள்ளிவாசல்களும் உள்ளன.

கல்வி[தொகு]

அஜனூரில் அரசு. மேல்நிலைப்பள்ளி, இராவணேஷ்வரம், மகா கவி பி. குன்ஞ்ஞிராமன் நாயர் நினைவு உயர்நிலைப்பள்ளி, இக்பால் உயர்நிலைப்பள்ளி மற்றும் கிரசண்ட் ஆங்கில வழி நடுநிலைப் பள்ளி.

போக்குவரத்து[தொகு]

உள்ளூர் சாலைகள் தேசிய நெடுஞ்சாலை.66 ஐயுடன் இணைகின்றன. இது வடக்கில் மங்களூரையும் தெற்கில் கோழிக்கட்டையும் இணைக்கிறது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் மங்களூர்- பாலக்காடு பாதையில் உள்ள காஞ்ஞங்காடு தொடருந்து நிலையம் ஆகும். அருகில் உள்ள வானூர்தி நிலையங்கள் மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்றவை ஆகும்.

குறிப்புகள்[தொகு]

  1. List of Cities and Towns in Kasaragod district
  2. as of 2009, according to the Ministry of Drinking Water and Sanitation பரணிடப்பட்டது 2014-08-11 at the வந்தவழி இயந்திரம்
  3. "Tourism in Kasaragod". Archived from the original on 10 January 2012. பார்க்கப்பட்ட நாள் 14 March 2012.

காசர்கோடு மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜனூர்&oldid=3373207" இலிருந்து மீள்விக்கப்பட்டது