விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகசுட்டு 30, 2009
- ஆப்பிரிக்க ஒன்றியம் ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்டுவருவதற்காக 53 ஆப்பிரிக்கா நாடுகளால் 2002 இல் உருவாக்கப்பட்டது.
- தென்னிந்திய மாநிலங்களில் கருவள வீதம் தமிழ்நாடு (1.8), ஆந்திரப் பிரதேசம் (1.8), கேரளம் (1.9), கர்நாடகம் (2.1) ஆகும், இவை அனைத்தும் இந்திய சாராசரி 2.7 அளவை விட குறைவானதாகும்.
- தான்னியக்கி பணம்செலுத்தி (self checkout) என்பது காசாளருக்குப் பதிலாக நுகர்வோரே காசைச் செலுத்தி பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்லத்தக்க ஏற்பாடு ஆகும்.
- அத்வைதம் அல்லது இரண்டன்மை (இரண்டற்ற நிலை) என்பது சீவன் என்பதும் இறைவன் என்பதும் ஒன்றுதான், வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் இந்து மெய்யியல் கொள்கை.
- 'அறுக்க மாட்டாதவன் இடுப்புல, அம்பத்தெட்டு அருவாளாம்' போன்று கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் சொலவடை எனப்படும்