எர்னெசுட் மாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்னெசுட் மாக்
Ernst Mach
பிறப்பு(1838-02-18)18 பெப்ரவரி 1838
பிர்னோ, மொராவியா, ஆத்திரியப் பேரரசு
இறப்பு19 பெப்ரவரி 1916(1916-02-19) (அகவை 78)
பவாரியா, செருமானியப் பேரரசு
குடியுரிமைஆசுத்திரியா
துறைஇயற்பியலறிஞர்
பணியிடங்கள்கிராசு பல்கலைக்கழகம்
சார்லசு-பெர்டினாண்ட் பல்கலைக்கழகம் (பிராகா)
வியென்னா பல்கலைக்கழகம்
கல்விவியென்னா பல்கலைக்கழகம்
(முனைவர், 1860; DPhil, 1861)
அறியப்படுவதுமாக் பட்டை
மாக் வைரங்கள்
மாக் எண்
மாக் தெறிப்பு
மாக் அலை
மாக் கோட்பாடு
அதிர்வலைகள்
கையொப்பம்

எர்னெசுட் உவால்டுபிரீடு யோசப் வென்செல் மாக் (Ernst Waldfried Josef Wenzel Mach, 18 பெப்ரவரி 1838 – 19 பெப்ரவரி 1916) என்பவர் ஓர் ஆத்திரிய/செக்[1] இயற்பியலறிஞரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் இயற்பியலில் அதிர்வலைகளின் பங்களிப்புக்காக அறியப்படுகிறார். ஒரு ஓட்டம் அல்லது பொருளின் வேகம் மற்றும் ஒலியின் விகிதம் அவரது நினைவாக மாக் எண் என்று அழைக்கப்படுகிறது. ஒலியின் விரைவுக்கும் பொருளின் வேகத்துக்குமான விகிதம் இவரது நினைவாக மாக் எண் என அழைக்கப்படுகிறது. அறிவியலின் மெய்யியலாளராக, இவர் தருக்க நேர்மறைவாதத்திலும், அமெரிக்க நடைமுறைவாதத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.[2] நியூட்டனின் இடம்-நேரம் பற்றிய கோட்பாடுகளை விமர்சித்ததன் மூலம், இவர் ஐன்சுடைனின் சார்புக் கோட்பாட்டை முன்னறிவித்தார்.[3]

மாக் நினைவாகப் பெயர்கள்[தொகு]

மாக்கின் நினைவாக இவரது பெயர் பின்வருவனவற்றிற்கு வழங்கப்பட்டது:

  • 3949 மாக், சிறுகோள்
  • மாக், நிலவில் உள்ள ஒரு குழி
  • மாக் பட்டைகள், ஒரு ஒளியியல் மாயை
  • மாக் வைரங்கள், சூப்பர்சோனிக் புகைபோக்கிகளில் காணப்படுகிறது
  • மாக் ஐந்து (Mach Five), விரைவுப் பந்தயத் தானுந்து
  • மாக் எண், ஒலியின் வேகத்துடன் தொடர்புடைய வேகத்திற்கான அலகு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ernst Mach". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். (2016). 
  2. Blackmore, John T. (1972). Ernst Mach. His Life, Work, and Influence. Berkeley and Los Angeles: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520018495. இணையக் கணினி நூலக மைய எண் 534406. திற நூலக எண் 4466579M.
  3. Sonnert, Gerhard (2005). Einstein and Culture (illustrated ed.). Humanity Books. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59102-316-6.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மாக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்னெசுட்_மாக்&oldid=3892158" இலிருந்து மீள்விக்கப்பட்டது