கோடைக்கானல் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடைக்கானல் வட்டம் , தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக கொடைக்கானல் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 16 வருவாய் கிராமங்கள் உள்ளன.

இவ்வட்டத்தில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 30,771வீடுகளும், 115,250 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 57,884 ஆண்களும்,57,366 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் 60.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 79.59% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12238 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 976 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 22,819 மற்றும் 3,602 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 77.75%, இசுலாமியர்கள் 4.67%, கிறித்தவர்கள் 17.36% & பிறர் 0.13% ஆகவுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடைக்கானல்_வட்டம்&oldid=3098861" இலிருந்து மீள்விக்கப்பட்டது