வேலாயுதம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலாயுதம்பாளையம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


வேலாயுதம்பாளையம் (Velayuthampalayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும் [3]. இக்கிராமம் புஞ்சை புகழூர் நகரப் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. முருகன் கோவில் அமைந்துள்ள ஆறுநாட்டன் மலை அடிவாரத்தில் வேலாயுதம்பாளையம் கிராமம் இருக்கிறது. கிராமத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் காவிரி ஆறு ஓடுகிறது. அருகில் டிஎன்பிஎல் காகிதபுரம், தோட்டக்குறிச்சி, கரப்பாளையம் போன்ற ஊர்கள் இக்கிராமத்திற்கு அருகிலுள்ள சில ஊர்களாகும்.

புவியியல்[தொகு]

11°4'48" வடக்கு 78°0'1" கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் வேலாயுதம்பாளையம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 125 மீட்டர் அதாவது 413 அடி உயரத்தில் அமைந்துள்ளது. [4]

காலநிலை[தொகு]

மே மாத தொடக்கத்தில் இருந்து சூன் மாதத் தொடக்கம் வரை பொதுவாக 34 ° செல்சியசு வரை அதிக வெப்பநிலை பெறப்படுகிறது. இருப்பினும் இது பொதுவாக சில ஆண்டுகளில் 38 ° செல்சியசு வெப்ப நிலையைக் காட்டிலும் அதிகமாக சிலநாட்கள் இருக்கும். சனவரி மாதத்தில் சராசரி தினசரி வெப்பநிலை சுமார் 23 ° செல்சியசு வெப்ப நிலையாகும். இருப்பினும் வெப்பநிலை அரிதாக 17 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு கீழேயும் போவதுண்டு.

சராசரி ஆண்டு மழை அளவு சுமார் 725 மி.மீ. ஆகும். செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து நவம்பர் நடுப்பகுதி வரை வடகிழக்கு பருவமழை காரணமாக அதன் பருவகால மழையின் பெரும் பகுதியை இக்கிராமம் பெறுகிறது.

புகழிமலை (ஆறுநாட்டன்மலை)[தொகு]

கரூரின் வடமேற்கே அமைந்துள்ள புகழூரில் உள்ள கோயில், பகவான் முருகனுக்கு வேலயுதம்பாளையத்திலுள்ள ஒரு சிறிய மலையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற சமணர்கள் குகை மற்றும் பழமையான தமிழ் பிராமி சிற்பம் போன்றவை இங்கு காணப்படுகின்றன [5].

எழுத்தறிவு[தொகு]

வேலாயுதம்பாளையத்தின் எழுத்தறிவு சதவீதம் ஆண்கள் 77.58% பெண்கள் 60.35% ஆகும். கிராமத்தில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்விச் சேவையாற்றுகின்றன :[6].

போக்குவரத்து[தொகு]

கரூர்- பரமத்தி வேலூர் நெடுஞ் சாலையில் வேலாயுதம்பாளையம் அமைந்துள்ளது. தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் போக்குவரத்து வசதியை அளிக்கின்றன. இக்கிராமத்திற்கு அருகில் உள்ள புகழூரில் இரயில் நிலையம் அமைந்துள்ளது. railway station பரணிடப்பட்டது 2008-02-16 at the வந்தவழி இயந்திரம். இந்நிலையம் தமிழகத்தின் தலைநகரமாம் சென்னை மற்றும் கோயம்பத்தூர், திருச்சி, ஈரோடு நகர இரயில் நிலையங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் இரயில் , விரைவு இரயில் சேவைகள் இங்கு வழங்கப்படுகின்றன. 87 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி விமானநிலையம் Trichy (87 km) அமைந்துள்ளது.

பொழுது போக்கு[தொகு]

வேலாயுதம்பாளையத்தில் பொழுது போக்கிற்கென்று திரையரங்குகள் ஏதும் கிடையாது. ஆனால் ஒரு காலத்தில் அங்கு புகழூர் அன்னை, வேலாயுதம்பாளையம் காவேரி போன்ற திரையரங்குகள் இருந்தன. திரைப்படத்திற்காக ஒருவர் 'கருர்' அல்லது 'பரமத்தி வேலூர்' செல்லவேண்டும். நகரவாசிகளில் பெரும்பாலோர் கிட்டத்தட்ட எல்லா தொலைக்காட்சி அலை வரிசைகளையும் இங்கிருந்து காணவியலும்.

விவசாயம்[தொகு]

வேலாயுதம்பாளையத்தின் பொருளாதாரம் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளது. கரும்பு, தேங்காய், வெற்றிலை பயிரிடுதல் உழவர்களின் முக்கியமான விவசாயத் தொழிலாகும்.

உடல் நலம்[தொகு]

வேலாயுதம்பாளையத்திற்காக புகழிமலை அடிவாரத்தில் ஓர் அரசு பொது மருத்துவமனை செயல்படுகிறது. இதை தவிற இரண்டு பெரிய தனியார் மருத்துவ மனைகள் கரூர் – வேலூர் நெடுஞ்சாலையில் மருத்துவ சேவையாற்றுகின்றன. மருத்துவர்கள் சொந்தமாக நடத்தும் சிறு மருத்துவமனைகள் பல இங்குள்ளன. அறுவை சிகிச்சை போன்ற பெரிய மருத்துவ சிகிச்சைகளுக்கு இக்கிராம மக்கள் பரமத்தி வேலூர், கரூர், ஈரோடு, கோயம்பத்தூர், திருச்சி போன்ற நகரங்களுக்குச் செல்கின்றனர்.

பொருளாதாரம்[தொகு]

உலக வங்கி நிதியுதவியுடன் தமிழக அரசால் ஊக்குவிக்கப்படும் TNPL காகிதத்தொழிற்சாலை இக்கிராமத்திற்கு அருகில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள புகழூரில் இயங்குகிறது. செய்திதாள் மற்றும் எழுத்து வகை காகிதங்கள் கரும்புச் சக்கையிலிருந்து இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இந்நிறுவனமானது சுற்றுச் சூழலை பாதிக்காதவண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் அதிக அளவு காகிதம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இது இரண்டாமிடம் பெறுகிறது .இந்நிறுவனம் ஆண்டுக்கு 4,00,000 டன் காகிதத்தை உற்பத்தி செய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Karur District, Government of Tamil Nadu | Land of Minerals | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-04.
  4. "Maps, Weather, and Airports for Pugalur, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2019-06-04.
  5. "Karur District - Places of Worship". Archived from the original on 2007-09-03. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.
  6. http://www.schools.tn.nic.in/DispSchoolsUrban.asp?DCODE=14&VTCODE=41403879&SCHCAT=01/[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலாயுதம்பாளையம்&oldid=3645279" இலிருந்து மீள்விக்கப்பட்டது