வெள்ளைப் பூனைப் பருந்து
வெள்ளைப் பூனைப் பருந்து | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. melanoleucos
|
இருசொற் பெயரீடு | |
Circus melanoleucos (Pennant, 1769) |
வெள்ளைப் பூனைப் பருந்து (Pied harrier) என அறியப்படும் இப்பறவை ஒரு ஊன் உண்ணிப் பறவையாகும். ஆசியப் பகுதியில் வாழும் இதன் குடும்பப்பெயர் அக்சிபிட்ரிடே ஆகும். இவை கிழக்கு ரஷ்யா, வட கொரியா, வட-கிழக்கு சீன மற்றும் அமுர் பள்ளத்தாக்கில் இடம்பெயர்ந்து இனப்பெருக்கம் செய்கிறது. பனிக்காலங்களில் பாக்கிஸ்தான் மற்றும் பிலிப்பீன்சு போன்ற நாடுகளில் சிலவற்றைக் காணமுடிகிறது. தற்போதைய காலங்களில் இதன் இனப்பெருக்கம் குறைந்து 10,000 எண்ணிக்கையில்தன் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இவற்றின் எண்ணிக்கை மிதமான சரிவில் இருப்பதாக கருதப்படுகிறது.[2]
உடல் அளவில் நடுத்தர தோற்றத்தைக்கொண்ட இவை வயல்வெளிகளிலும், ஈரநிலங்களிலும் முயல்களை கொன்று உண்ணும் பழக்கம் கொண்டுள்ளது. சாதாரண நிலையில் இதன் நீளம் 45 செ.மீட்டர்களும், சிறகுகள் விரிந்த நிலையில் 115 செ.மீட்டர்கள் கொண்டதாகவும் உள்ளது.[3] இவை புல்வெளிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஈரநிலங்களில் கூடு கட்டுகிறது. குளிர்காலத்தில் தனிப் பறவைகள் பெரும்பாலும் நெல்வயல்கள் மற்றும் சதுப்பு நிலங்களுக்கு மேலே வேட்டையாடுவதைக் காணலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Circus melanoleucos". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ BirdLife International (2009) Species factsheet: Circus melanoleucos. Downloaded from http://www.birdlife.org on 13/1/2010
- ↑ James Ferguson-Lees & David Christie (2005). Raptors of the world. Christopher Helm. London, UK