வெள்ளைப் பள்ளிவாசல், நாசரேத்து
வெள்ளைப் பள்ளிவாசல் | |
---|---|
வெள்ளைப் பள்ளிவாசல், நாசரேத்து | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | நாசரேத்து, இசுரேல் |
சமயம் | இசுலாம் |
வெள்ளைப் பள்ளிவாசல் (White Mosque) (அரபு மொழி: المسجد الأبيض, எபிரேயம்: המסגד הלבן בנצרת) இஸ்ரேல் நாட்டின் நாசரேத்து நகரில் உள்ள பழமையான மசூதி ஆகும் [1] நாசரேத்து நகரின் பழைய சந்தையில் மையத்தில் ஹரத் அல்காமா எனப்படும் பள்ளிவாசல் சதுக்கத்தில் உள்ளது.[2]
அமைப்பு
[தொகு]இப்பள்ளிவாசல் பென்சில் வடிவ மினார் கொண்டுள்ளது.[2] கிரீம் நிற சுவர்கள், பச்சை டிரிம் மற்றும் பச்சை குவிமாடம் ஆகியவை ஒட்டோமான் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
வரலாறு
[தொகு]பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எகிப்து ஆட்சியாளர் சுலைமான் பாஷா மூலம் நிதியுதவி, மற்றும் நாசரேத்து உயர் ஆணையாளர், ஷேக் அப்துல்லா அல்-பகூம் மேற்பார்வையில் பள்ளிவாசல் கட்டுமான பணிகள் நடைபெற்றன. [1] பள்ளிவாசல் 1804 மற்றும் 1808 இடையே நிறைவு பெற்றது. ஷேக் அப்துல்லா வக்ப் செய்தார்.1815 ல் அவர் இறக்கும் காலம் வரை அது நிர்வகிக்கப்பட்டது. ஷேக் அப்துல்லா மரணத்திற்கு பிறகு, பள்ளிவாசல் விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஷேக் அமீன் அல் பகூம்க்கு மாற்றப்பட்டது. தற்போது, மசூதி அல்-பகூம் குடும்ப வக்ப் பகுதியாக அமைக்க தொடர்ந்து வருகிறது.[1]
பெயர்க் காரணம்
[தொகு]நாசரேத்தில் தூய்மை, ஒளி மற்றும் அமைதி ஏற்படுத்த புதிய சகாப்தத்தை குறிப்பதாக வெள்ளைப் பள்ளிவாசல் என ஷேக் அப்துல்லா பெயர் சூட்டினார்.[2]
பயன்பாடு
[தொகு]வழக்கமான நாளில், 100 முதல் 200 பேர் தொழ வருவார்கள். வெள்ளிக்கிழமை குத்பா நாளில் 2000 முதல் 3000 பேர் கலந்து, நண்பகல் தொழுகைக்கு கலந்துகொள்வார்கள்.[1]
அருங்காட்சியகம்
[தொகு]பள்ளிவாசலில் நாசரேத்து வரலாற்றை ஆவணப்படுத்தும் காட்சிகள் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. .[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Chad F. Emmett (1995). Beyond the Basilica: Christians and Muslims in Nazareth. University of Chicago Press. pp. 136–138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-20711-0.
- ↑ 2.0 2.1 2.2 "Nazareth: The Mosque Quarter". Discover Israel. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2007-12-01.
- ↑ "Galilee:Nazareth". ThinkIsrael.com. Archived from the original on 2007-11-25. பார்க்கப்பட்ட நாள் 2007-12-01.