வெண்புருவக் கொண்டலாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்புருவக் கொண்டலாத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. luteolus
இருசொற் பெயரீடு
Pycnonotus luteolus
(Lesson, 1841)

வெண்புருவக் கொண்டலாத்தி (White-browed Bulbul) என்பது கொண்டை வகை பறவையாகும். இது இலங்கையிலும் இந்திய தீபகற்பத்திலும் வாழ்கிறது. மேற்பகுதி ஒலிவ நிறத்திலும், கீழ்ப் பகுதி வெண்மையாகவும் காணப்படும். இதன் கண் புருவம் மங்கலாகவும் பின்புறம் மஞ்சளாகவும் காணப்படும். இவற்றின் வாழ்விடம் அடர்த்தியான குறுங்காடுகள். இங்கே இவை மறைந்து வாழும் இவற்றை காண்பது கடினம். ஆயினும் இவற்றின் பலத்த ஒலி மூலம் இவற்றின் இருப்பை கண்டுபிடித்துவிடலாம்.

விவரம்[தொகு]

வெண்புருவக் கொண்டலாத்தியின் நீளம் 20 செ.மீ (7 அங்குலம் 8) ஆகும். இவற்றின் மேற்பகுதி ஒலிவ நிறமும் கீழ்ப் பகுதி வெண்மையாகவும் இருக்கும். இப் பறவைகளின் வெண் கண் புருவம், கண்ணுக்கு கீழான வெள்ளை நிற பிறை வடிவம் மற்றும் மீசை போன்ற கரிய கோடு என்பனவற்றால் அடையாளம் காணலாம். பின்புறம் மஞ்சள் தன்மையுடனும் முகவாய் மஞ்சலாகவும் காணப்படும். தொண்டைப் பகுதி வெண்மையானது. பிடரியில் மூன்று அல்லது நான்கு மயிர் போன்றன தென்படும். இறகின் அமைப்பில் ஆணும் பெண்ணும் ஒருமித்தவை. இவை பலத்த ஒலியினை புதரின் மேலிருந்து எழுப்பி, புதரின் உள் சென்று மறைந்துவிடும்.

பரம்பலும் உறைவிடமும்[தொகு]

இப்பறவை வட இந்தியா மற்றும் இலங்கைக்குரிய பறவையாகும். இவை உலர்ந்த பரந்த கிராமப்புற குறுங்காடுகளிலும், அடர்த்தியான புதர்களுள்ள குறுங்காடுகளிலும் தோட்டங்களிலும் காணப்படும்.[2]

பழக்கமுறையும் சூழலியலும்[தொகு]

வெண்புருவக் கொண்டலாத்தி தனியாகவும் இணையாகவும் காணப்படும். இவை பழங்கள், மலர்த்தேன், புழு, பூச்சி என்பவற்றை உணவாகக் கொள்ளும். பங்குனி முதல் புரட்டாதி வரையான காலப்பகுதியில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இவை வருடத்தில் இரு தடைவைகள் குஞ்சு பொரிக்கும். மாசியும் புரட்டாதியும் இனப்பெருக்கத்தின் உச்ச காலமாகும். இவை மரக்கிளையில் இலகுவான கிண்ணம் போன்ற கூட்டினைக் கட்டி இரண்டு முட்டைகள் வரை இடும்.[2][3] ஒரு பறவை 11 வருடங்களுக்கு மேல் வாழக் கூடியது.[2][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2011). "Pycnonotus luteolus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 3.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 2.2 Ali, S & SD Ripley (1996). Handbook of the Birds of India and Pakistan. Volume 6 (2 ). New Delhi: Oxford University Press. பக். 98–100. 
  3. Baker, EC Stuart (1922). Fauna of British India. Birds. Volume 1 (2 ). London: Taylor and Francis. பக். 417–418. http://www.archive.org/stream/faunaofbritishin01bake#page/417/mode/1up. 
  4. Vijayan, VS (1978). "Breeding biology of Bulbuls, Pycnonotus cafer and Pycnonotus luteolus (Class: Aves, Family: Pycnonotidae) with special reference to their ecological isolation". J. Bombay Nat. Hist. Soc. 75: 1090–1117. 
  5. Hume, AO (1889). The nests and eggs of Indian Birds. Volume 1 (2 ). London: R. H. Porter. பக். 189–190. http://www.archive.org/stream/nestseggsofindia01hume#page/189/mode/1up/. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pycnonotus luteolus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: