வெண்தலை மைனா
வெண்தலை மைனா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சுடுருனிடே
|
பேரினம்: | சுடுருனியா
|
இனம்: | சு. பிளைத்தீ
|
இருசொற் பெயரீடு | |
சுடுருனியா பிளைத்தீ (ஜெர்டான், 1845) |
வெண்தலை மைனா [Malabar starling (சுடுருனியா பிளைத்தீ)] அல்லது பிளைத் மைனா என்பது சாம்பல் தலை மைனாவின் ஓர் உள்ளினமாகக் கருதப்பட்டு வந்து, 2005க்குப் பிறகு தனிச் சிற்றினமாகக் கருதப்படும் இந்த மைனா வகைப் புள்ளானது தென்னிந்தியாவின் மலபார் பகுதிகளில் (குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி) மட்டுமே காணப்படும்[1] எனவே இது மலபார் நாகணவாய் எனவும் அழைக்கப்படுகின்றது. இது ஓர் அகணிய உயிரி ஆகும்.
உடலமைப்பு
[தொகு]தலை, தொண்டை, மார்பு இவையனைத்தும் பளிச்சிடும் வெண்ணிறம்; மேல்பகுதியும் பின்புறமும் சாம்பல் நிறம். வயிற்றுப்பகுதியும் வாலடிப் பகுதியும் அடர் செம்பழுப்பு நிறம்[2]. மற்ற உடலமைப்புக் கூறுகள் பெரும்பாலும் சு. ம. மலபாரிகாவினைப் போலவே இருக்கும்.
பரவல்
[தொகு]மலபார் வனப்பகுதிகளில் (குறிப்பாக வயநாடு, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள்) கடல் மட்டத்திலிருந்து 600 m உயரம் வரையிலும் காணப்படுகின்றது[2]; தற்காலத் தரவுகளின் படி, இப்பறவையின் பரவல் வடக்கே விரார் பகுதியிலிருந்து தெற்கே கீரிப்பாறை வரையுள்ள மலபார் பகுதி[1] (கிழக்கே தோராயமாக 760 E வரையுள்ள பரப்பு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Range Map (ebird -- Malabar starling)". பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
- ↑ 2.0 2.1 Jerdon. T.C. (1877). The Birds of India, Vol. II (Part II). p. 331 (689)