வெ. கிருட்டிணசாமி ராவ்
காஞ்சி கிருட்டிணசாமி ராவ் இந்தியப் பேரரசின் தோழர் | |
---|---|
கிருட்டிணசாமி ராவின் உருவப்படம் | |
திவிதாங்கூரின் திவான் | |
பதவியில் 1898–1904 | |
ஆட்சியாளர் | மூலம் திருநாள் |
முன்னையவர் | சங்கர சுப்பையர் |
பின்னவர் | வி. பி. மாதவ ராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1845 |
இறப்பு | 1923 |
வேலை | அரசு ஊழியர், நிர்வாகி |
தொழில் | அரசியல்வாதி |
திவான் பகதூர் காஞ்சி வெ. கிருஷ்ணசாமி ராவ் (Kanchi Krishnaswamy Rao) (1845-1923) இவர் ஓர் இந்திய அரசு ஊழியரும், நீதிபதியும் மற்றும் நிர்வாகியுமாவார். இவர் 1898 முதல் 1904 வரை திருவிதாங்கூரின் திவானாகப் பணியாற்றினார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]கிருட்டிணசாமி ராவ் 1845 செப்டம்பரில் தமிழ்நாட்டின் சேலத்தில் ஒரு தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவரது தந்தை காஞ்சி வெங்கட ராவ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமை வருவாய் கணக்காளராகப் பணியாற்றினார். இவர் தனது பதினாறு வயதில் மெட்ரிகுலேசனை முடித்தவுடன், அரசாங்க சேவையில் நுழைந்தார்.
தொழில்
[தொகு]கிருட்டிணசாமி ராவ் 1864 அக்டோபரில் நெல்லூர் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவறை எழுத்தராக ரூ. 20 ரூபாய் ஊதியத்தில் பணியில் சேர்ந்தார். 1867 ஆம் ஆண்டில், இவர் தனது திறமையினால் பதவி உயர்வு பெற்றார். பின்னர், 1870 சூலையில் ஒரு மாவட்ட ஆய்வாளர் ஆனார். 1883 இல், இவர் காக்கிநாடாவில் துணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மே 1894 இல், அப்போதைய மகாராஜாவால் திருவிதாங்கூர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 1898இல் திவானாக நியமிக்கப்பட்டார்.
நவம்பர் 1901 இல் இவர் இந்தியப் பேரரசின் தோழராக நியமிக்கப்பட்டார்.
இறப்பு
[தொகு]கிருட்டிணசாமி ராவ் 1923 இல் இறந்தார்.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ C. Hayavandana Rao. The Indian Biographical Dictionary, 1915 (Classic Reprint). Fb&c Limited. p. 238. பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
Krishnaswami Rao Kanchi, Dewan Bahadur, (1895), C.I.E, (1898), Dewan of Travsncore (retired), belongs to respectable Madhwa Deshastha Brahmin family; of late Mr. Kanchi Venkat Rao; b. 1845.
- ↑ The Indian review, Volume 24. G. A. Natesan. 1923.