விக்கிப்பீடியா பேச்சு:ஆகஸ்ட் 28, 2017 மலையக விக்கிப்பீடியா - நூலகம் பட்டறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திட்டமிட்டபடி மலையக விக்கிப்பீடியா-நூலகம் பயிற்சிப் பட்டறை நிகழ்வுகள் நிகழ்ந்தன. ஒரு சில பகுதிகளைத் தவிர நிரல்படுத்திய விடயங்கள் பயிற்சியில் உள்வாங்கப் பட்டிருந்தன. பங்குபற்றியவர்களிடம் நிரம்பிய ஆர்வம் காணப்பட்டது. இணைய பயன்பாட்டு அறிமுகம் சிலருக்கு குறைவாக இருந்தமையும் அவதானிக்கப்பட்டது. கணினி இணைப்பு போதுமானதாக இல்லாமையால் செயன்முறைப் பயிற்சியை மெதுவாகவே நகர்த்த முடிந்தது. பலர் புதிய பயனர்களாக இணைந்தனர். அவர்களைத் தனிப்பட்டமுறையில் தொடர்வது அவர்களின் பங்களிப்புகளை அதிகரிக்கும் என நம்புகின்றேன். மலையகத்தில் ஆவணப்படுத்தப் படவேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன என்பது எனது சொந்த அனுபவமாக இருந்தது. மழை நாளாக இருந்தமையால் வெளியில் ஆவணப்படுத்தல்களைச் செய்ய முடியவில்லை. நாட்டரியல் வாய்ப்பாட்டிக் கலைஞர் ஒருவரின் குரல் பதிவு ஒன்றினையும் மேற்கொண்டோம். வாய்ப்புகள் பல இருப்பதை இருப்பதை உணருகின்றேன். படங்களை பிரசாந் விரைவில் இணைப்பார்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:04, 29 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:58, 30 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
அறிமுகப் பட்டறை சிறப்பாக நடைந்தேறியமை அறிந்து மகிழ்ச்சி. சில புகைப்படங்களைத் தரவேற்றுங்கள்.--Kanags \உரையாடுக 09:42, 30 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --கலை (பேச்சு) 10:36, 30 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

👍 விருப்பம் -- வழிபடுத்தியவர்களுக்கும், பயிற்றுவித்தவர்களுக்கும், பங்குபற்றியவர்களுக்கும் நன்றி--ப.விஜயகாந்தன் (பேச்சு) 15:33, 5 செப்டம்பர் 2017 (UTC)

பட்டறையை ஒழுங்குபடுத்தல் - பணிகள்[தொகு]

பட்டறையை ஒழுங்குபடுத்தல் - பணிகள் எனும் தலைப்பில் என்னென்ன விடயங்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன?--ப.விஜயகாந்தன் (பேச்சு) 15:34, 5 செப்டம்பர் 2017 (UTC)