வாழ்க்கை மரம் (பகுரைன்)
வாழ்க்கை மரம் | |
---|---|
வாழ்க்கை மரம் | |
ஷாஜரத்-அல்-ஹயாத் |
வாழ்க்கை மரம் (Tree of Life) என்பது பகுரைனில் 9.75 மீட்டர் (32 அடி) உயரமுள்ள ஒரு மணல் மேட்டின் உச்சியில் நிற்கும் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வன்னி மரமாகும். இது அரேபிய பாலைவனத்தின் தரிசு பகுதியில் உள்ள ஒரு மலையில், பகுரைனின் மிக உயரமான இடமான ஜெபல் துக்கானிலிருந்து 2 கிலோமீட்டர் (1.2 மைல்) தொலைவிலும், மனாமாவிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. [1]
பகுரைனில் ஆண்டு முழுவதும் மழை இருப்பதில்லை. இப்பகுதியில் ஒரு சொட்டு நீர் கூட இல்லாததால் பல மைல் தூரத்திற்கு ஒரு தாவரத்தையும் காண முடியாது. ஆனாலும், மரம் எவ்வாறு உயிர்வாழ்கிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை. இதன் வேர்கள் 50 மீட்டர் ஆழத்தில் உள்ளன. அவை தண்ணீரை அடைய போதுமானதாக இருக்கலாம். நீண்ட காலத்திற்கு முன்பு இங்கு ஏராளமான நீர் இருந்திருக்கலாம். மேலும் இப்பகுதி பசுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட வெப்பமண்டல சோலையாகவும் இருந்திருக்கலாம்.[2] ஒருசிலர் மரம் மணல் தானியங்களிலிருந்து ஈரப்பதத்தை எடுக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்கள். ஆனாலும் இதன் நீர் ஆதாரம் இன்னும் விசித்திரமாகவே உள்ளது. [3] விவிலிய காலங்களில் ஆதாமும் ஏவாளும் இந்த நிலங்களில் நடந்து சென்றதாகவும், தடைசெய்யப்பட்ட பழத்தை ருசித்ததாகவும் விவிலியம் சொல்கிறது. விவிலிய சொர்க்கமான ஏதேன் தோட்டம் ஒரு காலத்தில் இருந்தது என்று பகுரைனியர்கள் உறுதியாக நம்புகிறார்கள். வாழ்க்கை மரத்தைப் பார்வையிடும்போது இதை கற்பனை செய்வது கடினம்.
வரலாறு
[தொகு]தெற்கு பகுஹ்ரைனில் பாலைவனத்தின் நடுவில், ஒரு மணல் மேடின் உச்சியில், ஒரு தனி மரம் உயரமாக நிற்கிறது. இன்னும், அகலமான கிளை மரம் சுமார் 4 நூற்றாண்டுகளாக பிழைத்து வருகிறது. வாழ்க்கை மரம் ஒரு இயற்கை அதிசயம் என்று பஹ்ரைனியர்கள் நம்புகிறார்கள், மேலும் 10 மீட்டர் உயரமான மரம் இப்போது ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.
சுற்றுலா அம்சம்
[தொகு]பகுரைனின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றான 400 ஆண்டுகள் பழமையான இந்த வாழ்க்கை மரத்தின் அருகே ஒரு திறந்தவெளி ஒலி, ஒளி அரங்கத்தைக் கொண்ட விரிவான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. [4] $ 786,800 திட்டத்தில் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வளைகுடா டெய்லி நியூஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டில், மரம் இயற்கையின் ஏழு புதிய அதிசயங்களின் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அது பட்டியலில் இடம் பெறவில்லை.
மரத்தின் பயன்பாடு
[தொகு]மரம் ஏராளமாக பச்சை இலைகளால் மூடப்பட்டுள்ளது. அதன் வயது மற்றும் இப்பகுதியில் வளரும் ஒரே பெரிய மரம் என்பதால், இந்த மரம் உள்ளூர் சுற்றுலா தலமாக விளங்குகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 65,000 பேர் வருகை தருகின்றனர். இதிலிந்து எடுக்கப்படும் மஞ்சள் பிசின் மெழுகுவர்த்திகள், நறுமணப் பொருட்கள், பசை போன்றப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது; பீன்ஸ் உணவு, பழக்கூழ், வைன் ஆகியவற்றில் பதப்படுத்தப்படுகிறது. [2]
தொல்லியல் ஆராய்ச்சி
[தொகு]அக்டோபர் 2010 இல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மரத்தின் அருகே 500 ஆண்டுகள் பழமையான மட்பாண்டங்கள் மற்றும் பிற கலைப்பொருட்களைக் கண்டுபிடித்தனர். 1990 களில் நடத்தப்பட்ட ஒரு மண் மற்றும் மரகாலக் நிலையியல் பகுப்பாய்வு இந்த மரம் 1582 இல் நடப்பட்ட அகாசியா என்று முடிவு செய்தது. [5]
பிரபல கலாசாரத்தில்
[தொகு]இந்த மரம் 1991 ஆம் ஆண்டு வெளியான எல்.ஏ ஸ்டோரி என்றத் திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஸ்டீவ் மார்ட்டின் இதை பூமியின் மிக விசித்திரமான இடங்களில் ஒன்றாக குறிப்பிட்டார். [2]