உள்ளடக்கத்துக்குச் செல்

வாழைத்தண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழைத்தண்டு (Banana pith) என்பது வாழைமரத்தின் உள்ளே உள்ள நடுப்பகுதியினைக் குறிப்பதாகும். இது வாழைமரத்தின் மையத்தில் அமைந்துள்ள பொய்த் தாவரத்தண்டு வகையாகும். இதில் மாவு மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படும். இது உணவிற்காகப் பயன்படுத்தப்படும் ஓர் காய்கறி ஆகும். இது பிலிப்பீன்சு, மலேசியா, இந்தோசீனா, இலங்கை, தென்னிந்தியாவின் உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.[1][2]

வாழைத்தண்டு

மருத்துவப் பயன்பாடு

[தொகு]

வாழைத்தண்டு பலவகையான மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. வாழைத்தண்டில் பொட்டாசியம், உயிர்ச்சத்து பி6 நிறைந்து காணப்படும். வாழைத்தண்டினை பச்சையாகவோ, பொரியல் செய்தோ, சூப் வைத்தோ பயன்படுத்தலாம். இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர் பாதைத் தொற்று நோயினைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.[3]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Padam, Birdie Scott; Tin, Hoe Seng; Chye, Fook Yee; Abdullah, Mohd Ismail (December 2014). "Banana by-products: an under-utilized renewable food biomass with great potential". Journal of Food Science and Technology 51 (12): 3527–3545. doi:10.1007/s13197-012-0861-2. 
  2. Kennedy, Jean (2009). "Bananas and People in the Homeland of Genus Musa: Not just pretty fruit". Ethnobotany Research & Applications 7: 179-197. http://ethnobotanyjournal.org/era/index.php/era/article/view/360. 
  3. "வாழைத்தண்டு: சிறுநீரக கல் முதல் நீரிழிவு வரை! தம்மாத்தூண்டு தண்டுல இவ்வளவு விஷயம் இருக்காமே!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழைத்தண்டு&oldid=3395203" இலிருந்து மீள்விக்கப்பட்டது