லீ சாங் வேய்
லீ சாங் வேய் | |
---|---|
நேர்முக விவரம் | |
நாடு | மலேசியா |
பிறப்பு | அக்டோபர் 21, 1982 சார்சுடவுன், பினாங்கு, மலேசியா |
உயரம் | 1.70 m (5 அடி 7 அங்) (5 அடி 7 அங்) |
எடை | 60 kg (130 lb; 9.4 st) |
கரம் | வலது |
பயிற்சியாளர் | மிசுபுன் சிதெக் |
ஆடவர் ஒற்றையர் | |
பெரும தரவரிசையிடம் | 1 (29 சூன் 2006 – 20 சூலை 2006, 24 ஆகத்து 2006 – 21 செப்டம்பர் 2006, 21 ஆகத்து 2008 –) |
இ. உ. கூ. சுயவிவரம் |
லீ சாங் வேய் (Lee Chong Wei) (பி. பீனாங், சீனா - அக்டோபர் 21, 1982), மலேசியாவைச் சேர்ந்த தொழில்முறை இறகுப்பந்தாட்ட வீரர். 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுகளில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்று தன் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்; அதன் காரணமாக மலேசிய பிரதமர் நசிப் துன் ரசாக் வேய்யிற்கு தாதுக் என்ற பட்டத்தை அளித்து பெருமைப்படுத்தினார். மேலும் இரு முறை ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக உலகத் தரவரிசையில் முதன்மையானவராக இருந்த ஒரே மலேசிய வீரர் இவர். மூக்கில் உருவான புற்றுநோயின் தாக்கத்தினால், விளையாடுவதிலிருந்து தன் ஓய்வினை 2019ல் அறிவித்தார்.