லாரன்சு வோங்
லாரன்சு வோங் Lawrence Wong | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
黄循财 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 இல் வோங் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
4-ஆவது சிங்கப்பூர் பிரதமர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 15 மே 2024 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | தர்மன் சண்முகரத்தினம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Deputy | கான் கிம் யோங் கெங் சுவீ கீட் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | லீ சியன் லூங் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிதி அமைச்சர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 15 மே 2021 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | லீ சியன் லூங் இவரே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | கெங் சுவீ கீட் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மார்சிலிங்-யூ டீ தொகுதி லிம்பாங் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 11 செப்டம்பர் 2015 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | புதிய தொகுதி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்குக் கரை தொகுதி பூன் லே பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 7 மே 2011 – 24 ஆகத்து 2015 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | லாரன்சு வோங் சியுன் த்சாய் 18 திசம்பர் 1972 சிங்கப்பூர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | மக்கள் செயல் கட்சி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவர் | லூ த்சே லூயி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கல்வி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வேலை | குடிமை அதிகாரி, அரசியல்வாதி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தொழில் | பொருளியலாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கையெழுத்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
லாரன்சு வோங் சியுன் த்சாய் (Lawrence Wong Shyun Tsai, பிறப்பு: 18 திசம்பர் 1972) சிங்கப்பூர் அரசியல்வாதியும், பொருளியலாளரும், மே 2024 முதல் சிங்கப்பூரின் பிரதமரும், 2021 முதல் அந்நாட்டின் நிதி அமைச்சரும் ஆவார். இவர் சிங்கப்பூரின் நாடாளுமன்ற உறுப்பினராக 2011 முதல் இருந்து வருகிறார்.
அரசியலில் நுழைவதற்கு முன்பு, வோங் வணிக, தொழில்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், சுகாதார அமைச்சகம் ஆகியவற்றில் பணியாற்றினார். 2005-2008 காலப்பகுதியில், பிரதம மந்திரி லீ சியன் லூங்கின் தனிப்பட்ட செயலாளராக இருந்தார். 2009-2011 காலப்பகுதியில் எரிசக்தி சந்தை ஆணையத்தின் தலைமை செயல் அலுவராகப் பணியாற்றினார்.[1] வோங் 2011 பொதுத் தேர்தலில் அரசியலிற்குள் நுழைந்தார். ஐந்து பேர் கொண்ட மக்கள் செயல் கட்சி அணியின் ஒரு பகுதியாக மேற்குக் கரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வோங் பின்னர் 2015, 2020 பொதுத் தேர்தல்களில் மார்சீலிங்-யூ தொகுதியில் போட்டியிடு, தனது நாடாளுமன்ற இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். வோங் 2012-2015 காலப்பகுதியில் கலாச்சாரம், சமூகம், இளையர்துறைகளுக்கான அமைச்சராகவும், 2014-2015 இல் இரண்டாவது தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சராகவும், 2015-2020 இல் தேசிய அபிவிருத்தி அமைச்சராகவும்,[2] பணியாற்றினார். 2016-2021 காலப்பகுதியில் நிதி அமைச்சராகவும், 2020-2021 இல் கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார்.
சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்றுநோயை நிர்வகிப்பதற்கு சனவரி 2020 இல் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பல-அமைச்சர் குழுவின் இணைத் தலைவராகவும் வோங் இருந்தார்.[3] நிதி அமைச்சராக இருந்தபோது, லீயின் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியின் அதிகரிப்பை செயல்படுத்தினார். ஏப்ரல் 2022 இல், அவர் ஆளும் மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, லீ-யின் வெளிப்படையான வாரிசு வரிசையில் வைக்கப்பட்டார்.[4] வோங் 2022 சூன் 13 அன்று கெங் சுவீ கீட் உடன் இணைந்து சிங்கப்பூரின் துணைப் பிரதமராகப் பதவி ஏற்றார்.[5] 2022 நவம்பர் 26 அன்று, வோங் புதிதாக உருவாக்கப்பட்ட மக்கள் செயல் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.[6]
வோங் 2021 மற்றும் 2023 க்கு இடையில் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் 2023 சூலை 8 அன்று அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். 2024 மே 15 அன்று, சிங்கப்பூரின் பிரதமராக வோங் பதவியேற்றார். இவர் நாட்டின் நான்காவது பிரதமராகவும், 1965 இல் சிங்கப்பூர் விடுதலை அடைந்த பிறகு பிறந்த முதலாவது பிரதமராகவும் ஆனார்.[7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MP | Parliament of Singapore". Archived from the original on 17 July 2020. பார்க்கப்பட்ட நாள் 17 July 2020.
- ↑ Au-Yong, Rachel (29 September 2015). "Lawrence Wong to lead National Development" (in en). The Straits Times இம் மூலத்தில் இருந்து 16 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170816152707/http://www.straitstimes.com/singapore/housing/lawrence-wong-to-lead-national-development.
- ↑ "7 ministries get new ministers in major Cabinet reshuffle". CNA (in ஆங்கிலம்). Archived from the original on 16 May 2021. பார்க்கப்பட்ட நாள் 23 April 2021.
- ↑ "Finance Minister Lawrence Wong endorsed as leader of 4G team: PM Lee". CNA (in ஆங்கிலம்). Archived from the original on 14 April 2022. பார்க்கப்பட்ட நாள் 14 April 2022.
- ↑ "Changes to Cabinet and Other Appointments (June 2022)". Prime Minister's Office Singapore (in ஆங்கிலம்). 6 June 2022. Archived from the original on 6 June 2022. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.
- ↑ "Lawrence Wong elected PAP deputy secretary-general in newly created role" (in en). 26 November 2022 இம் மூலத்தில் இருந்து 26 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221126232405/https://www.channelnewsasia.com/singapore/lawrence-wong-pap-deputy-secretary-general-new-role-3102626.
- ↑ "What we know about Singapore's fourth Prime Minister Lawrence Wong". CNA. 15 April 2024. Archived from the original on 15 April 2024. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
- ↑ "Commentary: With Lawrence Wong set to take over as PM, the clock starts on battle for hearts and minds". CNA (in ஆங்கிலம்). Archived from the original on 17 April 2024. பார்க்கப்பட்ட நாள் 17 April 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- Lawrence Wong on Singapore Prime Minister's Office
- Lawrence Wong on சிங்கப்பூர் நாடாளுமன்றம்