கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு (சிங்கப்பூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு
Ministry of Culture, Community and Youth
Logo mccy.jpg
துறை மேலோட்டம்
அமைப்பு நவம்பர் 1 2012
முன்னிருந்த {{{type}}} சமுதாய மேம்பாடு, இளையர் மற்றம் விளையாட்டு அமைச்சு
(Ministry of Community Development, Youth and Sports)
ஆட்சி எல்லை சிங்கப்பூர் அரசு
தலைமையகம் ஓல்டு ஹில் போலீஸ் ஸ்டேஷன், 140 ஹில் ரோடு, #01-01A, சிங்கப்பூர் 179369
பணியாட்கள் 4,939 (FY2015 கணக்கீடு) [1]
ஆண்டு நிதி Green Arrow Up Darker.svg$2.71 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி (FY2015 கணக்கீடு)[1]
பொறுப்பான அமைச்சர்கள் கிரேஸ் ப்ஃபூ ஹாய் இயீன் (Grace Fu Hai Yien), அமைச்சர்
சிம் ஆன், மூத்த இணை அமைச்சர்
பேய் யாம் கெங் (Baey Yam Keng), நாடாளுமன்றச் செயலர்
அமைப்பு தலைமைs யிஓ சீ யென் (Yeoh Chee Yan), நிரந்தரச் செயலர்
ரோசா டேனியல், துணைச் செயலர் (கலாச்சாரம்)
ஹூயூ லிம் (Hugh Lim), துணைச் செயலர் (சமூக, இளையர் மற்றும் விளையாட்டு)
வலைத்தளம்
www.mccy.gov.sg

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, (Ministry of Culture, Community and Youth - MCCY; மலாய்: Kementerian Kebudayaan, Masyarakat dan Belia; எளிய சீனம்: 文化、社区及青年部) சிங்கப்பூர் அமைச்சரகத்தின் ஓர் அம்சமாகும். கலை மற்றும் விளையாட்டு மூலம் சிங்கப்பூரை ஊக்குவித்து, சமூகப் பிணைப்பை அமைத்து, தொண்டூழியத்தையும் கொடைத்தன்மையையும் வளர்ப்பது இந்த அமைச்சின் நோக்கமாகும். 31 ஜூலை 2012-இல், சமூக அபிவிருத்தி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, சமூக மற்றும் குடும்ப அபிவிருத்தி அமைச்சாக அமைக்கப்பட்டது. விளையாட்டு, இளையர் மேம்பாடு போன்ற சில அம்சங்களும் இந்த அமைச்சுக்கு வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் சமுதாய மேம்பாடு, இளையர் மற்றம் விளையாட்டு அமைச்சு என்று அழைக்கப்பட்ட இவ்வமைச்சு,  அண்மைக்காலமாக கலாச்சாரம், சமூகம் மற்றும இளையர் அமைச்சு எனப் பெயர்மாற்றம் பெற்றது.

பொறுப்பு வகிப்பவர்கள்[தொகு]

  1. கிரேசஸ் ப்ஃபூ, கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சர்,
  2. சிம் ஆன், மூத்த அமைச்சர்,
  3. பேய் யம் கெங்,  பாராளுமன்ற செயலாளர்,
  4. யிஓ சீ யென், நிரந்தர செயலாளர்
  5. ரோசா டேனியல், கலாச்சாரம் துணை செயலாளர்,
  6. ஹியூ லிம், துணை செயலாளர், சமூக, இளையர் மற்றும் விளையாட்டு

நோக்கம்[தொகு]

மக்கள் மனநிறைவுடன் இருக்கும் நாடாகவும்,  பிணைப்பு மற்றும் அக்கறை கொண்ட சமுதாயமாகவும்,  தன்னம்பிக்கையுள்ள தேசமாகவும், வீடாக வாழக்கூடிய இடமாகவும் சிங்கப்பூர் விளங்க வேண்டும்

குறிக்கோள்[தொகு]

சமூக மூலதனத்தை அமைத்து சிங்கப்பூர் உணர்வை ஊக்குவிப்பது, சிங்கப்பூரை வீடாக அமைப்பது, கலை, கலாச்சாரம், விளையாட்டு ஆகியவற்றின் மூலம்  இளையர்களும் சமூகத்திற்கும் இடையே ஈடுபாட்டை வளர்ப்பது, கனவுகளை நிறைவேற்றும் சுற்றுச்சூழலை அமைப்பது, திருப்தியான வாழ்க்கைக்கு கனவுகளை நிறைவேற்றுவது,  ஒத்துழைப்பு, நம்பிக்கை ,கருணையுள்ள சமூகத்தை அமைப்பது “சிங்கப்பூர்-நம் நாடு” என்ற உணர்வை வளர்ப்பது ஆகியவையாகும்.[2][3]

கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சின் செயல்பாடு[தொகு]

கலைகள்[தொகு]

கலை சமுதாயப் பங்களிப்பினை ஊக்குவிக்கும். எங்கள் மக்கள் கலை அபிலாஷைகளை துணை, சிறந்த கலை மற்றும் கல்வி கலாச்சார துடிப்பும்மிக்க சிங்கப்பூர் கலை,  தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வளரும்.

சமூக அமைப்பும்  அதன் சேவைகளும்[தொகு]

சமூக நல்லிணக்கமும் உறவுகளையும் வளர்ப்பது,  பல கலாச்சாரங்களை கொண்ட சமுதாயத்தில் தொண்டூழியமும் நேயத்துடனும் அன்புடைய,சுயநலமிக்க சமுதாயத்தை அமைப்பது, தொண்டு, கூட்டுறவு ஆகியவற்றை கவனித்து, இத்தகைய முஸ்லீம் விவகாரங்களை கவணித்துக்கொள்வது:  ஷரியா நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் திருமணப் பதிவகம் (முஸ்லீம் விவகார அமைச்சர்:அமைச்சர் யாக்கோப் இப்ராஹிம்) உள்ளிட்டவற்றைக் கவனிப்பது இதன் நோக்கமாகும்.

பாரம்பரியம்[தொகு]

நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின்மீதுள்ள பாராட்டை, தேசிய தொகுப்பு, பாரம்பரியம், பாதுகாப்பு மற்றும் கல்வி மூலம் வளர உதவுவது, தேசிய அருங்காட்சியகங்கள், பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள்  மூலம் சமுதாயத்தின் ஈடுபாடை வளர்ப்பது, ஆணித்தரமான விடாமுயற்சி, தேசிய அடையாளம், பகிர்ந்து கொள்ள வேண்டிய பண்புகள் மற்றும்  நாட்டின் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றை வளர்ப்பது, பொதுநலத்தையும் குடிமை பெருமையையும் வளர்ப்பது உள்ளிட்டவை பாரம்பரியம் சார்ந்த நோக்கங்களாகும்.

விளையாட்டு[தொகு]

சமுதாயத்தில் விளையாட்டின்மேல் ஈடுபாட்டை ஊக்குவிப்பது, மக்களின் விளையாட்டு ஆர்வம்,சிறப்பு,படிப்பு ஆகியவற்றுக்கு ஆதரவு அளிப்பது,  சிங்கப்பூரின் விளையாட்டுத் துறையையும் உள்கட்டமைப்பையும் அமைந்து,சிறந்த வாழ்க்கையையும் விளையாட்டு கலாச்சாரத்தையும் அமைப்பது விளையாட்டு சார்ந்த நோக்கங்களாகும்.

இளையர்[தொகு]

இளையர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது, இளைஞர்கள் சமுதாயத்திற்கு உதவியளிப்பதை ஊக்குவிப்பது,  இளைஞர் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பது போன்றவை இளையர் சார்ந்த நோக்கங்களாகும்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, சிங்கப்பூர் அமைச்சரகத்தின் ஓர் அம்சமாகும். கலை மற்றும் விளையாட்டு மூலம் சிங்கப்பூரை ஊக்குவித்து, சமூகப் பிணைப்பை அமைத்து, தொண்டூழியத்தையும் கொடைத்தன்மையையும் வளர்ப்பது இந்த அமைச்சின் நோக்கமாகும்.

31 ஜூலை 2012-இல், சமூக அபிவிருத்தி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, சமூக மற்றும் குடும்ப அபிவிருத்தி அமைச்சாக அமைக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள்முதல் விளையாட்டு, இளையர் மேம்பாடு போன்ற சில அம்சங்களும் இந்த அமைச்சுக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Head I: Ministry of Community Development, Youth and Sports" (PDF). Budget 2011: Revenue and Expenditure Estimates. Singapore Budget (February 2015). பார்த்த நாள் 21 December 2015.
  2. "Ministry of Culture, Community and Youth COS Factsheet 1". Budget 2015: COS Factsheets 1. பார்த்த நாள் 30 September 2015.
  3. "Ministry of Culture, Community and Youth COS Factsheet 2". Budget 2015: COS Factsheets 2. பார்த்த நாள் 30 September 2015.

வெளியிணைப்புகள்[தொகு]