தர்மன் சண்முகரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மன் சண்முகரத்தினம்
Tharman Shanmugaratnam
2022 இல் தர்மன்
9-ஆவது சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்
பதவியேற்பு
14 செப்டம்பர் 2023
பிரதமர் லீ சியன் லூங்
முன்னவர் அலிமா யாக்கோபு
அமைச்சுப் பதவிகள்
சிங்கப்பூரின் மூத்த அமைச்சர்
பதவியில்
1 மே 2019 – 7 சூலை 2023
உடன் பணியாற்றுபவர் தியோ சீ கீன்
பிரதமர் லீ சியன் லூங்
முன்னவர் வெற்றிடம்
பின்வந்தவர் தியோ சீ கீன்
சமூகக் கொள்கைக்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர்
பதவியில்
1 அக்டோபர் 2015 – 7 சூலை 2023
பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள்: 1 அக்டோப்ர் 2015 – 30 ஏப்ரல் 2019
பிரதமர் லீ சியன் லூங்
முன்னவர் புதிய அலுவலகம்
பின்வந்தவர் கெங் சுவீ கேட்
சிங்கப்பூரின் துணைப் பிரதமர்
பதவியில்
21 மே 2011 – 1 மே 2019
உடன் பணியாற்றுபவர் தியோ சீ கீன் (2009–2019)
பிரதமர் லீ சியன் லூங்
முன்னவர் வொங் கான் செங்
பின்வந்தவர் கெங் சுவீ கீட்
நிதி அமைச்சர்
பதவியில்
1 திசம்பர் 2007 – 30 செப்டம்பர் 2015
பிரதமர் லீ சியன் லூங்
இரண்டாவது அமைச்சர் லிம் குவீ குவா
முன்னவர் லீ சியன் லூங்
பின்வந்தவர் கெங் சுவீ கீட்
மனிதவள அமைச்சர்
பதவியில்
21 மே 2011 – 31 சூலை 2012
பிரதமர் லீ சியன் லூங்
முன்னவர் கான் கிம் யொங்
பின்வந்தவர் தான் சுவான்-சின்]]
கல்வி அமைச்சர்
பதவியில்
1 ஆகத்து 2003 – 31 மார்ச் 2008
பிரதமர் கோ சொக் டொங்
லீ சியன் லூங்
இரண்டாவது அமைச்சர் இங் எங் கென்
முன்னவர் தியோ சீ கீன்
பின்வந்தவர் இங் எங் கென்
நாடாளுமன்றப் பதவிகள்
சுரோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
3 நவம்பர் 2001 – 7 சூலை 2023
முன்னவர் புதிய தொகுதி
பெரும்பான்மை 60,501 (49.24%)
தனிநபர் தகவல்
பிறப்பு தர்மன் சண்முகரத்தினம்
25 பெப்ரவரி 1957 (1957-02-25) (அகவை 66)[1]
சிங்கப்பூர் காலனி
அரசியல் கட்சி சுயேச்சை
பிற அரசியல்
சார்புகள்
மக்கள் செயல் கட்சி
(2001–2023)
வாழ்க்கை துணைவர்(கள்) சேன் யுமிக்கோ இத்தோகி
பிள்ளைகள் 4
கல்வி இலண்டன் பொருளியல் பள்ளி (BSc)
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (MPhil)
ஆர்வர்டு பல்கலைக்கழகம் (முதுகலை)
பணி
 • அரசியல்வாதி
 • பொருளியலாளர்
கையொப்பம்

தர்மன் சண்முகரத்தினம் (Tharman Shanmugaratnam, பிறப்பு: 25 பெப்ரவரி 1957) சிங்கப்பூர் அரசியல்வாதியும், பொருளியலாளரும், சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவரும் ஆவார். இவர் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு முன்னர் 2019 முதல் சிங்கப்பூரின் மூத்த அமைச்சராகவும், 2015 முதல் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும், 2011 முதல் சிங்கப்பூரின் நாணய ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி வந்துள்ளார். முன்னதாக 2011 முதல் 2019 வரை துணைப் பிரதமராகவும், 2003 முதல் 2008 வரை கல்வி அமைச்சராகவும், 2007 முதல் 2015 வரை நிதி அமைச்சராகவும்[2] பணியாற்றியிருந்தார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினராக உள்ள இவர், 2001 முதல் தமா சுரோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.[1][3]

பொருளாதார நிபுணரான தர்மன், சிங்கப்பூருக்கான அரசு சேவையில், முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் தொடர்புடைய பணிகளில் பெரும் பங்காற்றியுள்ளார். பல்வேறு உயர்மட்டப் பன்னாட்டுப் பேரவைகளுக்குத் தலைமை தாங்கி செயற்பட்டார். தர்மன் தற்போது முப்பது நாடுகள் அடங்கிய பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதித் தலைவர்களின் உலகளாவிய பேரவையின் தலைவராக உள்ளார். ஐ.நா. தண்ணீரின் பொருளாதாரத்திற்கான உலகளாவிய ஆணையத்தின் இணைத் தலைவராகவும் உள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகளின் பன்முகத்தன்மைக்கான உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[4]

தர்மன் 2021 இல் ஜி-20 உயர்மட்ட சுயாதீனக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். அனைத்துலக நாணய நிதியத்தின் முக்கிய கொள்கை மன்றமான பன்னாட்டு நாணய மற்றும் நிதிக் குழுவின் தலைவராக நான்கு ஆண்டுகள் இருந்த முதலாவது ஆசியத் தலைவராக ஆனார். கூடுதலாக, இவர் தற்போது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் மனித மேம்பாட்டு அறிக்கைக்கான ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராகவும், உலகப் பொருளாதார மன்றத்தின் அறங்காவலர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

2001 பொதுத் தேர்தலில் தர்மன் அரசியலுக்கு அறிமுகமானார். 2006, 2011, 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் நான்கு முறை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 சூன் 8 அன்று, தர்மன் 2023 செப்டம்பரில் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அரசாங்கத்தில் உள்ள அனைத்து பதவிகளிலிருந்தும், மக்கள் செயல் கட்சியில் இருந்தும் 2023 சூலை 7 முதல் விலகுவதாக அறிவித்தார்.[5][6] 2023 செப்டம்பர் 1 இல் இடம்பெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தர்மன், தனக்கெதிராகப் போட்டியிட்ட எங் கோக் சாங், டான் கின் லியான் ஆகியோரைத் தோற்கடித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[7] இதன்மூலம், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு சிறுபான்மை இனத்திலிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ஆனார். 1993 ஆம் ஆண்டு ஓங் டெங் சியோங்கிற்குப் பிறகு பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெற்ற முதல் குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் இவரது 70.4% மற்றும் 1,746,427 வாக்குகள் சிங்கப்பூர் வரலாற்றில் குடியரசுத் தலைவர் வேட்பாளரின் மிகப்பெரிய வாக்குப் பங்கும் வாக்கு எண்ணிக்கையும் ஆகும்.[8]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தர்மன் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் பூர்வீகம் கொண்ட குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை சிங்கப்பூரர் ஆவார்.[9][10] சிங்கப்பூர் புற்றுநோய்ப் பதிவேட்டை நிறுவி, புற்றுநோய், நோயியல் ஆய்வு தொடர்பான பல பன்னாட்டு அமைப்புகளுக்குத் தலைமை தாங்கிய "சிங்கப்பூரில் நோயியலின் தந்தை" என்று அழைக்கப்படும் மருத்துவ அறிவியலாளர் பேராசிரியர் கனகரத்தினம் சண்முகரத்தினத்தின்[10] மூன்று பிள்ளைகளில் ஒருவர் தர்மன்.[11][12][13] 1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது தாய்-வழிப் பாட்டனார் ஆறுமுகம் விசுவலிங்கம் ஒரு பிரபலமான மருத்துவரும், அறிவியலாளரும் ஆவார். இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரில் இருந்து மலாயாவுக்குக் குடிபெயர்ந்தவர்.[14] ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் கல்வி கற்ற தர்மன் லண்டன் பொருளியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுமாணிப் பட்டமும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுப்பணித் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றார். தர்மன் சப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார்.[15] மனைவி ஜேன் சிங்கப்பூரில் சமூக நிறுவனங்களிலும், இலாப நோக்கற்ற கலைத் துறையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவர்களுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

அரசியலில்[தொகு]

தர்மன் சண்முகரத்தினம் பன்னாட்டு நாணய நிதியம், பன்னாட்டு நாணய மற்றும் நிதிக்குழு என்பவற்றின் பணிப்பாளராகவும் இருந்து வருகின்றார். 2001 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசியலில் நுழைந்த தர்மன் முதலில் வணிகத்துறை அமைச்சில் மூத்த மாநில அமைச்சராக நியமனம் பெற்றார். பின்னர் 2003 முதல் 2008 வரை கல்வி அமைச்சராக இருந்த இவர், 2006 மே முதல் கூடுதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் [16].

டிசம்பர் 2007 இல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர் கல்வி அமைச்சராகவும் மார்ச் 2008 வரையில் இருந்தார்[2]. 2002 ஆம் ஆண்டில் இவர் மக்கள் செயல் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகத் தெரிவானார்.

தர்மன் ஜுரொங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "MP | Parliament Of Singapore". https://www.parliament.gov.sg/mps/list-of-current-mps/mp/details/tharman-shanmugaratnam. 
 2. 2.0 2.1 Asha Popatlal (29 நவம்பர் 2007). "PM Lee to relinquish Finance Minister post, Tharman takes over". Channel News Asia (Singapore). Archived from the original on 30 நவம்பர் 2007. https://web.archive.org/web/20071130041800/http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/314525/1/.html. 
 3. May Wong (29 March 2008). "PM Lee unveils cabinet changes". Channel News Asia (Singapore). Archived from the original on 31 மார்ச் 2008. https://web.archive.org/web/20080331133643/http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/338040/1/.html. 
 4. "Note to Correspondents: Secretary-General's High-Level Advisory Board on Effective Multilateralism Comprises 12 Eminent Current or Former Global Leaders, Officials, Experts". 18 March 2022. https://www.un.org/sg/en/node/262514. 
 5. "Tharman Shanmugaratnam to run for President in Singapore, will resign from PAP". 8 June 2023. https://www.channelnewsasia.com/singapore/tharman-shanmugaratnam-singapore-presidential-election-candidate-3547586. 
 6. Goh, Han Yan (8 June 2023). "SM Tharman to run for president, will resign from Govt and PAP on July 7" (in en). https://www.straitstimes.com/singapore/politics/sm-tharman-to-run-for-president-will-resign-from-govt-and-pap-on-july-7. 
 7. Correspondent, Goh Yan HanPolitical (2023-09-02). "Landslide 70.4 per cent victory for president-elect Tharman" (in en). The Straits Times. https://www.straitstimes.com/singapore/politics/landslide-704-per-cent-victory-for-president-elect-tharman?utm_source=Telegram&utm_medium=Social&utm_campaign=STTG. 
 8. Wong, Tessa (1 September 2023). "Tharman Shanmugaratnam: Singapore picks a president who could've been much more". https://www.bbc.com/news/world-asia-66643667. "Although Singapore has had non-Chinese presidents in the past, Mr Tharman is the first one voted in by the public." 
 9. "Mutton munchy". 12 July 2015. http://www.straitstimes.com/lifestyle/food/mutton-munchy. 
 10. 10.0 10.1 "Tamils in Federated Malaya and Singapore". 19 February 2016. http://www.dailynews.lk/?q=2016/02/20/features/tamils-federated-malaya-and-singapore. 
 11. "Aiyoh! After 16 years, he still can't say 'lah". https://www.nuh.com.sg/news/media-articles_814.html. 
 12. "Interview with Emeritus Professor K Shanmugaratnam". https://www.sma.org.sg/sma_news/3805/Feature.pdf. 
 13. "Working Overtime.". https://www.nuh.com.sg/news/media-articles_167.html. 
 14. Tharman Shanmugaratnam of Jaffna Ancestry becomes first Singaporean of Sri Lankan Tamil Ethnicity to be Elected as President of Singapore; Wins 70.4 % of votes in Landslide Victory, DBSJEYARAJ.COM, செப்டம்பர் 2, 2023
 15. "Try discipline with love - Acting Education Minister Tharman: My kids, their Mandarin and their future in China". The New Paper (Singapore). 9 June 2004. Archived from the original on 22 ஜனவரி 2008. https://www.webcitation.org/query?url=http://newpaper.asia1.com.sg/printfriendly/0,4139,64319,00.html&date=2008-01-22. "(The canes) are for his three sons, aged 10, 12 and 13 and an 8-year-old daughter; His lawyer-wife, Madam Jane Yumiko Ittogi, is of Japanese-Chinese parentage and can speak Teochew; Mr Tharman revealed that the Chinese translation of his name, Shang Da Man, was given by a language specialist in 1995." 
 16. The Government of Singapore (21 June 2006). "The Cabinet - Mr Tharman Shanmugaratnam". http://www.cabinet.gov.sg/CabinetAppointments/Mr+Tharman+Shanmugaratnam.htm. 

வெளி இணைப்புகள்[தொகு]