உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கப்பூரின் பிரதமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூர் குடியரசு பிரதமர்
பிரதமரின் பட்டம்
தற்போது
லீ சியன் லூங்

12 ஆகத்து 2004 முதல்
வாழுமிடம்சிறீ டெமாசெக்
நியமிப்பவர்டோனி டேன் கெங் யம்
(சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்)
பதவிக் காலம்5 ஆண்டுகள் அல்லது முன்பாக, புதுப்பிக்கத்தக்கது.
சிங்கப்பூரின் நாடாளுமன்றம் ஐந்தாண்டுகளுக்கு அல்லது அதற்கு முன்னதாக பிரதமரால் கலைக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கட்சியின் தலைவர் பிரதமராகின்றார்.
முதலாவதாக பதவியேற்றவர்லீ குவான் யூ
உருவாக்கம்3 சூன் 1959
ஊதியம்ஆண்டுக்கு S$2.2 மில்லியன்
இணையதளம்www.pmo.gov.sg

சிங்கப்பூர் குடியரசின் பிரதமர் (Prime Minister of the Republic of Singapore, மலாய்: Perdana Menteri Republik Singapura; சீன மொழி: 新加坡共和国总理) சிங்கப்பூர் குடியரசின் தலைவராவார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நம்பிக்கைக்கு உரியவர் என குடியரசுத் தலைவர் கருதும் நபர் பிரதமராக நியமிக்கப்படுகின்றார்.

சிங்கப்பூரின் பிரதமர் பதவி 1959ஆம் ஆண்டிலிருந்து இருந்து வருகின்றது; பிரித்தானியப் பேரரசுக்குள்ளேயே தனிநாடாக தன்னாட்சி பெற்ற பின்னர் அப்போதைய சிங்கப்பூர் ஆளுநரால் லீ குவான் யூ பிரதமராக நியமிக்கப்பட்டார். மலாயா கூட்டமைப்பில் இணைந்து மலேசியாவின் மாநிலமாக 1963 முதல் 1965 வரை இருந்தபோதும் பின்னர் 1965இல் விடுதலை பெற்றபோதும் இப்பதவியின் பெயர் சிங்கப்பூரின் பிரதமர் என்றே நீடித்தது.

சிங்கப்பூரின் பிரதமராக லீ குவான் யூ 1959 முதல் 1990 வரை பதிவியிலிருந்தார். இவரைத் தொடர்ந்து கோ சொக் தொங் பதவியேற்றார்; இவருக்கு பிரதமர் அலுவலகத்தின் மூத்த அமைச்சர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. கோ ஆகத்து 12, 2004இல் பணி ஓய்வு பெற்றார். இவரைத் தொடர்ந்து லீ குவான் யூவின் மகன் லீ சியன் லூங் பதவியேற்றார். புதிய பிரதமருக்கு உதவிபுரிய கோ மூத்த அமைச்சராகவும் தந்தை லீ மதியுரை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இருவரும் 2011இல் பதவி விலகினர்.

சிங்கப்பூர் பிரதமர்களின் பட்டியல்

[தொகு]
எண் பிரதமர் பதவிக்காலம் மக்கள் ஆதரவு நாடாளுமன்றத் தொகுதி அரசியல் கட்சி
1 லீ குவான் யூ
李光耀
5 சூன் 1959 — 28 நவம்பர் 1990
11499 நாட்கள்
1968 94.34%
1972 84.08%
1976 89.03%
1980 92.74%
1988 81.60%
டான்ஜோங் பகார் (ஒற்றை உறுப்பினர் தொகுதி)
(1955–1991)
டான்ஜோங் பகார் (குழு சார்பாளர் தொகுதி)
(1991-)
மக்கள் செயல் கட்சி
2 கோ சொக் தொங்
吴作栋(吳作棟)
28 நவம்பர் 1990 — 12 ஆகத்து 2004
5006 நாட்கள்
1991 61.0%
1992 72.9%
1997 65.0%
2001 75.3%
மரைன் பரேடு (ஒற்றை உறுப்பினர் தொகுதி)
(1976-1988)
மரைன் பரேடு (குழு சார்பாளர் தொகுதி)
(1988-)
மக்கள் செயல் கட்சி
3 லீ சியன் லூங்
李显龙(李顯龍)
12 ஆகத்து 2004 — நடப்பில்
7287 நாட்கள்
2006 66.14%
2011 60.14%
டெக் கீ ஒற்றை உறுப்பினர் தொகுதி
(1984-1991)
ஆங் மோ கியோ குழு சார்பாளர் தொகுதி
(1991-)
மக்கள் செயல் கட்சி

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூரின்_பிரதமர்&oldid=1916054" இலிருந்து மீள்விக்கப்பட்டது