ராஜேந்தர் கவுர்
ராஜேந்தர் கவுர் (Rajinder Kaur) (10 பிப்ரவரி 1931 - 5 பிப்ரவரி 1989) ஒரு இந்திய பத்திரிகையாளரும், பஞ்சாப்பைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார்.
கவுர், செயற்பாட்டாளர் தாராசிங்கின் மகளாவார். அமிருதசரசு, கால்சா கல்லூரியிலும், சண்டிகர், பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும், புது தில்லி முகாம் கல்லூரியிலும், தத்துவத்தில் முதுகலைப் பட்டமும், கற்பித்தலில் இளங்கலைப் பட்டமும், தத்துவத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் 1958–59ல் அமிர்தசரசு கல்சா கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். பின்னர் இவர் பத்திரிக்கை துறையிலும் அரசியலிலும் நுழைந்தார். இவர் பஞ்சாபி நாளேடான 'பர்பத்', அமிர்தசரசிலிருந்து வெளிவரும் மாதாந்திர பத்திரிக்கையான சாண்ட் சிபாஹி ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். சிரோமணி அகாலி தளத்தின் மகளிர் பிரிவின் தலைவராக இருந்தார். ஏப்ரல் 1978 இல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி 1989ஆம் ஆண்டில் பட்டிண்டாவில் நடந்த பஞ்சாப் கிளர்ச்சியில் சீக்கிய போராளிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1][2]