உள்ளடக்கத்துக்குச் செல்

ரசியா பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரசியத்துவுத் துன்யா வாவுத்தீன்
சுல்தான், பாடிஷா
5ஆம் தில்லி சுல்தான்
ஆட்சிக்காலம்1236 − 20 ஏப்ரல் 1240
முன்னையவர்உருக்னுத்தீன் பிரூசு
பின்னையவர்முயீசுத்தீன் பக்ரம்
இறப்பு15 அக்டோபர் 1240
கைத்தல், தில்லி சுல்தானகம்
புதைத்த இடம்
புல்புலி கானா, துருக்மென் வாயிலுக்கு அருகில், தில்லி
துணைவர்கிதியருத்தீன் அல்துனியா
பட்டப் பெயர்
சலாலதுத்தீன் ரசியா
மரபுஅடிமை அரசமரபு
தந்தைசம்சுத்தீன் இல்த்துத்மிசு
தாய்துர்கன் கதுன்
மதம்சன்னி இசுலாம்

ரசியா பேகம் கி.பி. 1236–1240 வரை டெல்லியை ஆண்ட ஒரு பெண் சுல்தான். (சுல்தான் என்பது ஆண்பால், சுல்தானா என்பதுதான் பெண்பால். நான் ஒரு ஆணுக்கு வீரத்திலும் விவேக்கதிலும் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை – என்னை சுல்தான் என்றே அழையுங்கள் என்று எல்லோருக்கும் ஆணையிட்டு இருந்தாள் ரசியா பேகம்.) இவர் இந்தியாவின் முதல் அரசி என்று அழைக்கப்படுகிறார். தில்லியை ஆண்ட மூன்றாவது சுல்தான் சம்சுத்தீன் இல்த்துத்மிசு இவரது தந்தையாவார். அவர் தில்லியை கி.பி. 1211 முதல் 1236 வரை ஆட்சி செய்தார். அவருக்கு பல மகள்களும் மகன்களும் இருந்தனர். ஆனால் இவர் ரசியா பேகத்தையே மிக அதிகமாக நேசித்தார். ஒரு பெண் கற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தார். இவர் ஒரு இளவரசியாகவே வளர்க்கப்பட்டார். கூடவே அரசியல் விவகாரங்களையும் நன்கு பழகிக் கொண்டார்.

குதிரை சவாரியிலும், வாள் வித்தையிலும் தனது சகோதரர்களையும் விட மிகச் சிறந்து விளங்கினார். அச்சமயத்தில் இவரது தந்தை ராஜபுத்திரர்களுக்கெதிராக படையெடுத்துச் சென்றார். தான் திரும்பி வர கால தாமதம் ஆகலாம் என கருதிய அவர் தனக்கு பதிலாக தனது மகள் ரசியா பேகத்தை ஆட்சி அதிகாரத்தில் நியமித்தார். சுல்தான் இல்த்துத்மிசு திரும்பி வர சுமார் ஆறு ஆண்டுகள் ஆனது. அக்கால கட்டத்தில் ரசியா பேகம் நன்முறையில் விவேகத்துடனும் ஆட்சிப் புரிந்தார்.

தனது தந்தை திரும்பி வந்ததும் ரசியா ஆட்சியை தந்தையிடமே ஒப்படைத்தார். கி.பி.1236 - ஆம் ஆண்டு இல்த்துத்மிசு மரணமடைந்தார். ஏற்கனவே அவர் தனது வாரிசாக ரசியா பேகத்தையே முடிவு செய்திருந்தார். ஆனால், அவரது மகன்களுள் ஒருவரான உருக்குன்- உத்-தின் பிரோசு ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் மிக மோசமான ஆட்சியின் மூலம் ஆறே மாதங்களில் மக்களிடம் செல்வாக்கை இழந்தார்.

பின் ரசியா பேகம் ஆட்சிப் பொறுப்பேற்று மக்கள் மத்தியில் தன் தந்தைக்கு நிகரான செல்வாக்கைப் பெற்றார். எனவே, இவர் இந்தியாவின் முதல் அரசி என்று அழைக்கப்படுகிறார்.[1][2][3][4][5][6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Peter Jackson 2003, ப. 46.
  2. Guida M. Jackson 1999, ப. 341.
  3. K. A. Nizami 1992, ப. 237.
  4. Minhaj-i-Siraj, Abu-'Umar-i-'Usman (1873). The Tabakat-i-Nasiri. Translated by Major H. G. Raverty. London: Asiatic Society of Bengal. p. 637.
  5. Saturday Review: Politics, Literature, Science and Art (in ஆங்கிலம்). Vol. 41. Saturday Review. 1876. p. 397. In the thirteenth century a woman, the celebrated Queen Raziya, ascended the throne of Delhi and reigned for the brief space of four years. She bore the title of Sultan and was sometimes called Badshah.
  6. A. V. Williams Jackson, ed. (1907). History of India (in ஆங்கிலம்). Vol. 5. Grolier Society. p. 104. It will be noted that Minhaj always speaks of the queen as "Sultan," since this title, or that of Padshah, "king," was given to her,
  7. Henry Miers Elliot. John Dowson (ed.). The History of India, as Told by Its Own Historians. Vol. 2. p. 332. The queen is always called "Sultán" and "Bádsháh," not Sultána, as by Briggs and Elphinstone.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசியா_பேகம்&oldid=3877236" இலிருந்து மீள்விக்கப்பட்டது