ரசியா பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Razia Sultan
Tomb of Razia Sultana 001.jpg
Grave of Razia Sultan in Bulbul-i-Khan near Turkmen Gate, Delhi
Sultan of Delhi
ஆட்சி10 November 1236 – 14 October 1240
முடிசூட்டு விழா10 November 1236
முன்னிருந்தவர்Rukn ud din Firuz
பின்வந்தவர்Muiz ud din Bahram
துணைவர்Malik Altunia mirza
வாரிசு(கள்)Zubrudin Mirza Rahil (1237–38); adopted son
அரச குலம்மம்லுக் வம்சம்
தந்தைசம்சுத்தீன் இல்த்துத்மிசு
தாய்Qutub Begum
பிறப்பு1205
பதாவுன், இந்தியா
இறப்பு14 October 1240 (aged 35)
தில்லி, தில்லி சுல்தானகம்
அடக்கம்Bulbul-i-Khan near Turkmen Gate, தில்லி
சமயம்இசுலாம்

ரஸியா பேகம் கி.பி. 1236–1240 வரை டெல்லியை ஆண்ட ஒரு பெண் சுல்தான். (சுல்தான் என்பது ஆண்பால், சுல்தானா என்பதுதான் பெண்பால். நான் ஒரு ஆணுக்கு வீரத்திலும் விவேக்கதிலும் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை – என்னை சுல்தான் என்றே அழையுங்கள் என்று எல்லோருக்கும் ஆணையிட்டு இருந்தாள் ரஸியா பேகம்.) இவர் இந்தியாவின் முதல் அரசி என்று அழைக்கப்படுகிறார். இவரது தந்தை பெயர் ஷம்ஸ்-வுட்-டின் அல்டமிஸ். இவர் டெல்லியை ஆண்ட மூன்றாவது சுல்தான் ஆவார். இவர் டெல்லியை கி.பி. 1211 முதல் 1236 வரை ஆட்சி செய்தார். இவருக்கு பல மகள்களும் மகன்களும் இருந்தனர். ஆனால் இவர் ரஸியா பேகத்தையே மிக அதிகமாக நேசித்தார். ஒரு பெண் கற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தார். இவர் ஒரு இளவரசியாகவே வளர்க்கப்பட்டார். கூடவே அரசியல் விவகாரங்களையும் நன்கு பழகிக் கொண்டார்.

குதிரை சவாரியிலும், வாள் வித்தையிலும் தனது சகோதரர்களையும் விட மிகச் சிறந்து விளங்கினார். அச்சமயத்தில் இவரது தந்தை ராஜபுத்திரர்களுக்கெதிராக படையெடுத்துச் சென்றார். தான் திரும்பி வர கால தாமதம் ஆகலாம் என கருதிய அவர் தனக்கு பதிலாக தனது மகள் ரஸியா பேகத்தை ஆட்சி அதிகாரத்தில் நியமித்தார். அல்டமிஸ் திரும்பி வர சுமார் ஆறு ஆண்டுகள் ஆனது. அக்கால கட்டத்தில் ரஸியா பேகம் நன்முறையில் விவேகத்துடனும் ஆட்சிப் புரிந்தார்.

தனது தந்தை திரும்பி வந்ததும் ரஸியா ஆட்சியை தந்தையிடமே ஒப்படைத்தார். கி.பி.1236 - ஆம் ஆண்டு அல்டமிஸ் மரணமடைந்தார். ஏற்கனவே அவர் தனது வாரிசாக ரஸியா பேகத்தையே முடிவு செய்திருந்தார். ஆனால், அவரது மகன்களுள் ஒருவரான ருகுன்-வுட்-டின் பெரோஸ் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் மிக மோசமான ஆட்சியின் மூலம் ஆறே மாதங்களில் மக்களிடம் செல்வாக்கை இழந்தார்.

பின் ரஸியா பேகம் ஆட்சிப் பொறுப்பேற்று மக்கள் மத்தியில் தன் தந்தைக்கு நிகரான செல்வாக்கைப் பெற்றார். எனவே, இவர் இந்தியாவின் முதல் அரசி என்று அழைக்கப்படுகிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசியா_பேகம்&oldid=2959733" இருந்து மீள்விக்கப்பட்டது