பாடிஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாடிஷா[1][2] என்பது இறையாண்மையுள்ள ஆட்சியாளரை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பாரசீக மொழிச் சொல்லாகும். இது பாட்ஷா என்றும் உச்சரிக்கப்படுகிறது. உயர் நிலையில் உள்ள பல முடியரசகர்களால் இப்பட்டம் பயன்படுத்தப்பட்டது. பண்டைக்கால பாரசீக பட்டமான "மகா மன்னர்" என்பதுடன் தோராயமாக இது ஒத்துப்போகிறது. பிற்காலத்தில் அகாமனிசியருக்குப் பிந்தைய பாரசீக மன்னர்கள் மற்றும் இந்தியாவின் முகலாயப் பேரரசர்கள் ஆகியோரால் இப்பட்டம் பயன்படுத்தப்பட்டது. சில நேரங்களில் ஆப்கானித்தானைச் சேர்ந்த சில சிறு இளவரசர்கள் கூட பாட்ஷா என்ற பட்டத்தை பயன்படுத்தினர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடிஷா&oldid=3774075" இலிருந்து மீள்விக்கப்பட்டது