உள்ளடக்கத்துக்குச் செல்

மோய் சாய் மாவட்டம்

ஆள்கூறுகள்: 20°25′41″N 99°53′1″E / 20.42806°N 99.88361°E / 20.42806; 99.88361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேய் சாய் மாவட்டம்
แม่สาย
மாவட்டம்
மோய் சாய் நகரத்தின் மியான்மர் - தாய்லாந்து பாலம்
மோய் சாய் நகரத்தின் மியான்மர் - தாய்லாந்து பாலம்
தாய்லாந்ந்து நாட்டின் சியாங் ராய் மாகாணத்தில் அமைந்த மோய் சாய் மாவட்டம்
தாய்லாந்ந்து நாட்டின் சியாங் ராய் மாகாணத்தில் அமைந்த மோய் சாய் மாவட்டம்
ஆள்கூறுகள்: 20°25′41″N 99°53′1″E / 20.42806°N 99.88361°E / 20.42806; 99.88361
மாகாணம்சியாங் ராய் மாகாணம்
தலைமையிடம்மோய் சாய்
பரப்பளவு
 • மொத்தம்285.0 km2 (110.0 sq mi)
மக்கள்தொகை
 (2005)
 • மொத்தம்86,298
 • அடர்த்தி302.8/km2 (784/sq mi)
நேர வலயம்ஒசநே+7 (UTC+07:00)
அஞ்சல் சுட்டு எண்57130
புவியியற் குறியீடு5709

மேய் சாய் மாவட்டம் (Mae Sai) (தாய் மொழி: แม่สาย, தாய்லாந்து நாட்டின் வடக்கில் உள்ள சியாங் ராய் மாகாணத்தின் வடகோடியில், தாய்லாந்து - மியான்மர் பன்னாட்டு எல்லையில் அமைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மோய் சாய் நகரம் ஆகும். பன்னாட்டு ஆசிய நெடுஞ்சாலை 2, மாயி சாய் நகரத்தின் வழியாக மியான்மருக்குச் செல்கிறது. 285 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 2005ல் 86,298 ஆக இருந்தது.

தங்க முக்கோணத்தில் அமைந்த மோய் சாய் மாவட்டம், சியாங் ராய் மாகாணத் தலைமையிடமான சியாங் ராய் நகரத்திற்கு வடக்கில் 259 கிமீ தொலைவிலும், தேசியத் தலைநகரமான பாங்காக்கிற்கு வடக்கே 850 கிமீ தொலைவிலும் உள்ளது. இம்மாவட்டத்தில் போதைப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. [1]

இம்மாவட்டத்தில் உள்ள தோய் நாங் நோன் மலைத்தொடரில் உள்ள தாம் இலுவாங் நாங் நோன் குகையில் 23 சூன் 2018 அன்று 12 சிறுவர்களும், ஒரு கால்பந்தாட்ட பயிற்சியாளரும் மழை வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை பன்னாட்டு மீட்பு குழுவினர் 10 சூலை 2018 குகையிலிருந்து மீட்டனர். [2]

சூன், 2018 அன்று தோய் நாங் நோன் மலைத்தொடரில் உள்ள தாம் இலுவாங் நாங் நோன் குகையில் சிக்கிய சிறுவர்கள்

நிர்வாகம்

[தொகு]

நிர்வாக வசதிக்காக இம்மாவட்டம் எட்டு துணை மாவட்டங்களாகவும், 92 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மோய் சாய் மற்றும் இரண்டு துணை மாவட்ட நகராட்சிகளையும் கொண்டது.

எண் துணை மாவட்டப் பெயர் தாய் மொழி: แม่สาย மொழியில் கிராமங்கள் மக்கள்தொகை     
1. மோய் சாய் แม่สาย 14 21,697
2. ஹுவாய் கிராய் ห้วยไคร้ 11 7,609
3. கோ சாங் เกาะช้าง 13 9,964
4. போங் பா โป่งผา 12 8,348
5. சி முயியாங் சும் ศรีเมืองชุม 9 5,090
6. வியாங் பாங் காம் เวียงพางคำ 13 19,945
8. பான் தாய் บ้านด้าย 8 4,117
9. பொங் நாம் โป่งงาม 12 9,528

இதனையும் காண்க

[தொகு]
மோய் சாய் மாவட்டத்தின் தோய் நாங் நோன் மலைத்தொடர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "240,000 ya ba pills seized in Mae Sai district following car chase". Archived from the original on 2017-09-24. பார்க்கப்பட்ட நாள் 2018-07-13.
  2. தாய்லாந்து குகை: சிறுவர்கள் சிக்கியது முதல் மீட்டது வரை

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mae Sai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோய்_சாய்_மாவட்டம்&oldid=3569139" இலிருந்து மீள்விக்கப்பட்டது