மேஜிக் ஜான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்வின் "மேஜிக்" ஜான்சன்
அழைக்கும் பெயர்மேஜிக் (Magic)
நிலைபந்து கையாளு பின்காவல் (Point guard)
உயரம்6 ft 8 in (2.03 m)
எடை215 lb (98 kg)
பிறப்புஆகத்து 14, 1959 (1959-08-14) (அகவை 64)
லான்சிங், மிச்சிகன்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிமிச்சிகன் மாநிலம்
தேர்தல்1வது overall, 1979
லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்
வல்லுனராக தொழில்1979–1996
முன்னைய அணிகள் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (1979-1991, 1996)
விருதுகள்* 5x NBA Champion (1980, 1982, 1985, 1987-1988)


எர்வின் "மேஜிக்" ஜான்சன் ஜூனியர் (Earvin "Magic" Johnson, Jr., பிறப்பு - ஆகஸ்ட் 14, 1959) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1979 முதல் 1991 வரை லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியிலும் 1992ல் ஒலிம்பிக் தங்கம் பரிசு பெற்ற அமெரிக்க "ட்ரீம் டீம்" தேசிய கூடைப்பந்து அணியிலும் விளையாடினார். இவர் பெரும்பான்மையாக பந்துகையாளி பின்காவல் நிலையில் விளையாடினார், ஆனால் பல போட்டிகளில் இவர் ஐந்து கூடைப்பந்தாட்ட நிலைகளிலும் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேர்வதற்கு முன் இவர் இரண்டு ஆண்டுகளாக மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்தாட்டம் விளையாடி ஒரு என்.சி.ஏ.ஏ. பட்டத்தை வென்றுள்ளார். புகழ்பெற்ற பாஸ்டன் செல்டிக்ஸ் வீரர் லாரி பர்ட் உடன் இவருக்கு ஒரு புகழ்பெற்ற நட்பான எதிரிடை இருந்தது; 1980களில் ஜான்சனின் லேகர்சும் பர்டின் செல்டிக்சும் மொத்தத்தில் 7 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகளில் வென்றுள்ளன.

1992ல் இவர் எச்.ஐ.வி. நுண்மத்தை பெற்றார் என்று கூறி என். பி. ஏ.யிலிருந்து அகற்றினார். கூடைப்பந்து புகழவையில் உறுப்பினர் மேஜிக் ஜான்சன் தற்போது தொலைக்காட்சியில் ஒரு கூடைப்பந்து நிபுணரும் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியின் ஒரு அதிபரும் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேஜிக்_ஜான்சன்&oldid=3920781" இலிருந்து மீள்விக்கப்பட்டது