முதலாம் சாபுர்
முதலாம் சாபுர் | |
---|---|
ஈரானிய அரசன் | |
1876 இல் சாபுரின் பிரம்மாண்டமான சிலையின் புனரமைப்பு, ஜார்ஜ் ராவ்லின்சன் | |
சாசானியப் பேரரசு | |
ஆட்சிக்காலம் | 12 ஏப்ரல் 240 – மே 270 |
முன்னையவர் | முதலாம் அர்தசிர் |
பின்னையவர் | முதலாம் ஹார்மிசித் |
இறப்பு | மே 270 பிசாப்பூர் |
இராணி | கவாரான்செம் அல்-மதிரா(?) |
மரபு | சாசானிய வம்சம் |
தந்தை | முதலாம் அர்தசிர் |
தாய் | முராத் அல்லது தேனாக் |
மதம் | சரதுசம் |
முதலாம் சாபூர் ( Shapur [1] ) ஈரானை ஆண்ட சசானிய மன்னர்களில் இரண்டாவது அரசராவார். இவர் மன்னர்களின் மன்னர் என அறியப்பட்டார்.[2] இவரது ஆட்சியின் தேதி சர்ச்சைக்குரியது, ஆனால் இவர் பொ.ச.240 முதல் 270 வரை ஆட்சி செய்தார். இவரது தந்தை அர்தசிர் 242 இல் இறக்கும் வரை அவருடன் இணை ஆட்சியாளராக இருந்தார் என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. இவரது இணை ஆட்சியின் போது, இவர் தனது வருங்கால மனைவி அல்-நதிராவின் செயல்களால் இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, அரபு நகரமான ஹத்ராவைக் கைப்பற்றி அழிக்க தனது தந்தைக்கு உதவினார். சாபூர், அர்தசிரின் பேரரசை ஒருங்கிணைத்து விரிவுபடுத்தினார். உரோமைப் பேரரசுக்கு எதிராகப் போர் தொடுத்து, உரோம சிரியா வரை முன்னேறி அதன் நகரங்களான நிசிபிஸ் மற்றும் கார்ஹேயைக் கைப்பற்றினார். 243 ஆம் ஆண்டில் உரோம பேரரசர் மூன்றாம் கோர்டியனால் ( ஆட்சி 238-244 ) ரெசனேப் போரில் தோறக்டிக்கப்பட்டார்.அடுத்த ஆண்டு அவர் மிசிச்சே போரில் வெற்றி பெற்றார். புபுதிய ரோமானிய பேரரசர் பிலிப் அரபு (ஆட்சி. 244-249) ஒரு சாதகமான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்தினார். இது உரோமானியர்களால் "மிகவும் அவமானகரமான ஒப்பந்தமாக கருதப்பட்டது.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Shahbazi 2002.
- ↑ Bonner 2020, ப. 49.
- ↑ Grishman, R. (1995). Iran From the Beginning Until Islam.
ஆதாரங்கள்
[தொகு]- Al-Tabari, Abu Ja'far Muhammad ibn Jarir (1985–2007). Ehsan Yar-Shater (ed.). The History of Al-Ṭabarī. Vol. 40 vols. Albany, NY: State University of New York Press.
- Bonner, Michael (2020). The Last Empire of Iran. New York: Gorgias Press. pp. 1–406. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1463206161.
- Brosius, Maria (2000). "Women i. In Pre-Islamic Persia". Encyclopaedia Iranica.