உள்ளடக்கத்துக்குச் செல்

மாதவ்ராவ் சிந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதவராவ் சிந்தியா
Madhavrao Scindia
2005 இந்திய அஞ்சல் தலையில் சிந்தியா
விமானப் போக்குவரத்து அமைச்சர்
பதவியில்
1991–1993
பிரதமர்பி. வி. நரசிம்ம ராவ்
முன்னையவர்அர்மோகன் தவான்
பின்னவர்குலாம் நபி ஆசாத்
சுற்றுலாத்துறை அமைச்சர்
பதவியில்
1991–1993
பிரதமர்பி. வி. நரசிம்ம ராவ்
பின்னவர்குலாம் நபி ஆசாத்
மனிதவள மேம்பாட்டு அமைச்சர்
பதவியில்
1995–1996
பிரதமர்பி. வி. நரசிம்ம ராவ்
முன்னையவர்பி. வி. நரசிம்ம ராவ்
பின்னவர்பி. வி. நரசிம்ம ராவ்
இரயில்வே அமைச்சர்
பதவியில்
22 அக்டோபர் 1986 – 1 திசம்பர் 1989
பிரதமர்ராஜீவ் காந்தி
முன்னையவர்மோசினா கித்வாய்
பின்னவர்ஜார்ஜ் பெர்னாண்டஸ்
குவாலியர் மகாராசா
பதவியில்
1961–2001
முன்னையவர்சிவாஜிராவ் சிந்தியா
பின்னவர்ஜோதிராதித்யா சிந்தியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1945-03-10)10 மார்ச்சு 1945
மும்பை, மும்பை மாகாணம், இந்தியா
இறப்பு30 செப்டம்பர் 2001(2001-09-30) (அகவை 56)
மைன்புரி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மாதவிராஜி சாகிப் சிந்தியா
உறவுகள்பார்க்க: சிந்தியா
பிள்ளைகள்ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா
சித்ராங்கதா ராஜி சிந்தியா
வாழிடம்(s)செய் விலாசு மகால் (குவாலியர்), குவாலியர்

மாதவராவ் சிவாஜிராவ் சிந்தியா (Madhavrao Jivajirao Scindia, 10 மார்ச் 1945 – 30 செப்டம்பர் 2001)[1] என்பவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும் ஆவார். முன்னதாக, 1961 ஆம் ஆண்டில், இவருக்கு மராத்தியர்களின் சிந்தியா வம்சத்தின் சந்ததிப் பட்டம் வழங்கப்பட்டது. ஆனாலும், 1971 இல் அறிவிக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் 26-வது திருத்தச்சட்டத்தின் படி,[2] இந்திய அரசு சுதேசிய இந்தியாவின் அதிகாரபூர்வ சின்னங்களை இல்லாதொழித்தது.[3][4][5][6][7][8][9][10]

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

மாதவ்ராவ் குவாலியர் அரசின் கடைசி மகாராஜா சிவாஜிராவ் சிந்தியாவிற்குப் பிறந்தவர். இவர் தனது உயர்படிப்பை இலண்டன் வின்செசுட்டர் கல்லூரியிலும், ஆக்சுபோர்டு புதிய கல்லூரியிலும் கற்றார். இங்கிலாந்தில் இருந்து திரும்பியவுடன், தமது தந்தையைப் போலவே அரசியலில் ஈடுபடலானார். 1971 இல் தனது 26-வது அகவையில் குவாலியரில் இருந்து மக்களவைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1971 இல் இருந்து ஒன்பது தடவைகள் மக்களவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். எந்தத் தேர்தலிலும் இவர் தோற்றதில்லை. 1984 இல் இரயில்வே அமைச்சராக[11] ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார். 1990 முதல் 1993 வரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

இறப்பு

[தொகு]

2001 செப்டம்பர் 30 இல் மாதவ்ராவ் சிந்தியா உத்தரப் பிரதேசம், மெயின்புரி மாவட்டத்தில் இடம்பெற்ற வானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்தார். கிங் ஏர் ச்-90 வானூர்தியில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவரக்ளில் ஊடகவியலாலர்கள் சஞ்சீவ் சின்கா (இந்தியன் எக்சுபிரசு), அஞ்சு சர்மா (ஹிந்துஸ்தான் டைம்ஸ்), ஆகியோரும் அடங்குவர்.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Scindia Dynasty. Genealogy. Royal Ark. Retrieved on 14 November 2018.
  2. "The Constitution (26 Amendment) Act, 1971", indiacode.nic.in, Government of India, 1971, பார்க்கப்பட்ட நாள் 9 November 2011
  3. Ramusack, Barbara N. (2004). The Indian princes and their states. Cambridge University Press. p. 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-26727-4.
  4. {{cite book|last=Naipaul|first=V. S.|authorlink=[[வி. சூ. நைப்பால்|title=India: A Wounded Civilization|url=https://books.google.com/books?id=XYeWbmq7pkIC&pg=PT37%7Cdate= 2003|publisher=Random House Digital, Inc.|isbn=978-1-4000-3075-0|pages=37–38}}
  5. Schmidt, Karl J. (1995). An atlas and survey of South Asian history. M.E. Sharpe. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56324-334-9.
  6. Breckenridge, Carol Appadurai (1995). Consuming modernity: public culture in a South Asian world. U of Minnesota Press. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8166-2306-8.
  7. Guha, Ramachandra (2008). India After Gandhi: The History of the World's Largest Democracy. HarperCollins. p. 441. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-095858-9.
  8. Cheesman, David (1997). Landlord power and rural indebtedness in colonial Sind, 1865–1901. London: Routledge. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7007-0470-5. The Indian princes survived the British Raj by only a few years. The Indian republic stripped them of their powers and then their titles.
  9. Merriam-Webster, Inc (1997). Merriam-Webster's geographical dictionary. Merriam-Webster. p. 520. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87779-546-9.
  10. Ward, Philip (1989). Northern India, Rajasthan, Agra, Delhi: a travel guide. Pelican Publishing. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88289-753-0.
  11. Railway Ministers. Irfca. Retrieved on 14 November 2018.
  12. "Madha vrao Sindia killed in plane crash". The Times of India. 1 October 2001. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவ்ராவ்_சிந்தியா&oldid=2931337" இலிருந்து மீள்விக்கப்பட்டது