மாதவ்ராவ் சிந்தியா
மாதவராவ் சிந்தியா Madhavrao Scindia | |
---|---|
2005 இந்திய அஞ்சல் தலையில் சிந்தியா | |
விமானப் போக்குவரத்து அமைச்சர் | |
பதவியில் 1991–1993 | |
பிரதமர் | பி. வி. நரசிம்ம ராவ் |
முன்னையவர் | அர்மோகன் தவான் |
பின்னவர் | குலாம் நபி ஆசாத் |
சுற்றுலாத்துறை அமைச்சர் | |
பதவியில் 1991–1993 | |
பிரதமர் | பி. வி. நரசிம்ம ராவ் |
பின்னவர் | குலாம் நபி ஆசாத் |
மனிதவள மேம்பாட்டு அமைச்சர் | |
பதவியில் 1995–1996 | |
பிரதமர் | பி. வி. நரசிம்ம ராவ் |
முன்னையவர் | பி. வி. நரசிம்ம ராவ் |
பின்னவர் | பி. வி. நரசிம்ம ராவ் |
இரயில்வே அமைச்சர் | |
பதவியில் 22 அக்டோபர் 1986 – 1 திசம்பர் 1989 | |
பிரதமர் | ராஜீவ் காந்தி |
முன்னையவர் | மோசினா கித்வாய் |
பின்னவர் | ஜார்ஜ் பெர்னாண்டஸ் |
குவாலியர் மகாராசா | |
பதவியில் 1961–2001 | |
முன்னையவர் | சிவாஜிராவ் சிந்தியா |
பின்னவர் | ஜோதிராதித்யா சிந்தியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மும்பை, மும்பை மாகாணம், இந்தியா | 10 மார்ச்சு 1945
இறப்பு | 30 செப்டம்பர் 2001 மைன்புரி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா | (அகவை 56)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மாதவிராஜி சாகிப் சிந்தியா |
உறவுகள் | பார்க்க: சிந்தியா |
பிள்ளைகள் | ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா சித்ராங்கதா ராஜி சிந்தியா |
வாழிடம்(s) | செய் விலாசு மகால் (குவாலியர்), குவாலியர் |
மாதவராவ் சிவாஜிராவ் சிந்தியா (Madhavrao Jivajirao Scindia, 10 மார்ச் 1945 – 30 செப்டம்பர் 2001)[1] என்பவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும் ஆவார். முன்னதாக, 1961 ஆம் ஆண்டில், இவருக்கு மராத்தியர்களின் சிந்தியா வம்சத்தின் சந்ததிப் பட்டம் வழங்கப்பட்டது. ஆனாலும், 1971 இல் அறிவிக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் 26-வது திருத்தச்சட்டத்தின் படி,[2] இந்திய அரசு சுதேசிய இந்தியாவின் அதிகாரபூர்வ சின்னங்களை இல்லாதொழித்தது.[3][4][5][6][7][8][9][10]
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]மாதவ்ராவ் குவாலியர் அரசின் கடைசி மகாராஜா சிவாஜிராவ் சிந்தியாவிற்குப் பிறந்தவர். இவர் தனது உயர்படிப்பை இலண்டன் வின்செசுட்டர் கல்லூரியிலும், ஆக்சுபோர்டு புதிய கல்லூரியிலும் கற்றார். இங்கிலாந்தில் இருந்து திரும்பியவுடன், தமது தந்தையைப் போலவே அரசியலில் ஈடுபடலானார். 1971 இல் தனது 26-வது அகவையில் குவாலியரில் இருந்து மக்களவைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1971 இல் இருந்து ஒன்பது தடவைகள் மக்களவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். எந்தத் தேர்தலிலும் இவர் தோற்றதில்லை. 1984 இல் இரயில்வே அமைச்சராக[11] ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார். 1990 முதல் 1993 வரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
இறப்பு
[தொகு]2001 செப்டம்பர் 30 இல் மாதவ்ராவ் சிந்தியா உத்தரப் பிரதேசம், மெயின்புரி மாவட்டத்தில் இடம்பெற்ற வானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்தார். கிங் ஏர் ச்-90 வானூர்தியில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவரக்ளில் ஊடகவியலாலர்கள் சஞ்சீவ் சின்கா (இந்தியன் எக்சுபிரசு), அஞ்சு சர்மா (ஹிந்துஸ்தான் டைம்ஸ்), ஆகியோரும் அடங்குவர்.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Scindia Dynasty. Genealogy. Royal Ark. Retrieved on 14 November 2018.
- ↑ "The Constitution (26 Amendment) Act, 1971", indiacode.nic.in, Government of India, 1971, பார்க்கப்பட்ட நாள் 9 November 2011
- ↑ Ramusack, Barbara N. (2004). The Indian princes and their states. Cambridge University Press. p. 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-26727-4.
- ↑ {{cite book|last=Naipaul|first=V. S.|authorlink=[[வி. சூ. நைப்பால்|title=India: A Wounded Civilization|url=https://books.google.com/books?id=XYeWbmq7pkIC&pg=PT37%7Cdate= 2003|publisher=Random House Digital, Inc.|isbn=978-1-4000-3075-0|pages=37–38}}
- ↑ Schmidt, Karl J. (1995). An atlas and survey of South Asian history. M.E. Sharpe. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56324-334-9.
- ↑ Breckenridge, Carol Appadurai (1995). Consuming modernity: public culture in a South Asian world. U of Minnesota Press. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8166-2306-8.
- ↑ Guha, Ramachandra (2008). India After Gandhi: The History of the World's Largest Democracy. HarperCollins. p. 441. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-095858-9.
- ↑ Cheesman, David (1997). Landlord power and rural indebtedness in colonial Sind, 1865–1901. London: Routledge. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7007-0470-5.
The Indian princes survived the British Raj by only a few years. The Indian republic stripped them of their powers and then their titles.
- ↑ Merriam-Webster, Inc (1997). Merriam-Webster's geographical dictionary. Merriam-Webster. p. 520. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87779-546-9.
- ↑ Ward, Philip (1989). Northern India, Rajasthan, Agra, Delhi: a travel guide. Pelican Publishing. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88289-753-0.
- ↑ Railway Ministers. Irfca. Retrieved on 14 November 2018.
- ↑ "Madha vrao Sindia killed in plane crash". The Times of India. 1 October 2001. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
- 1945 பிறப்புகள்
- 2001 இறப்புகள்
- மத்தியப் பிரதேச நபர்கள்
- இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
- வானூர்தி விபத்துகளில் இறந்தவர்கள்
- 5வது மக்களவை உறுப்பினர்கள்
- 6வது மக்களவை உறுப்பினர்கள்
- 7வது மக்களவை உறுப்பினர்கள்
- 8வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- மத்தியப் பிரதேச அரசியல்வாதிகள்