மடத்துப்பட்டி.

ஆள்கூறுகள்: Coordinates: Unable to parse latitude as a number:F5X5+6PH, Madathuppatti, Tamil Nadu 626105
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மடத்துப்பட்டி.
—  கிராமம்  —
<div style="position: absolute; z-index: 2; top: Expression error: Unrecognized word "f".%; left: Expression error: Unrecognized word "f".%; height:0; width: 0; margin:0; padding: 0">

<div style="position: absolute; top: Expression error: Unrecognized word "f".%; left: Expression error: Unrecognized word "f".%; height:0; width: 0; margin:0; padding: 0">

மடத்துப்பட்டி.
இருப்பிடம்: மடத்துப்பட்டி.

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் Coordinates: Unable to parse latitude as a number:F5X5+6PH, Madathuppatti, Tamil Nadu 626105
{{#coordinates:}}: invalid latitude
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மடத்துப்பட்டி கிராமம் (Madathupatti Village) என்பது தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இவ்வூரின் சிறப்பு[தொகு]

இங்கு விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்ட கண்ணப்பர் குல முத்தரையர் சமூகத்தினர் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, முக்கிய தொழிலாக உள்ளது. இக் கிராமத்தை சுற்றிலும் பூந்தோட்டங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

பூமலர்ந்த அம்மன், முனியாண்டி, விநாயகர், கிராம தெய்வங்களாக உள்ளனர். பூமலர்ந்த அம்மன் கோவில் புரட்டாசி மற்றும் பங்குனி திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காப்புகட்டி, முளைப்பாரி வளர்த்து, கரகம் எடுத்து,தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்ப விளையாட்டுடன் மூன்று நாட்கள் வெகு சிறப்பாக திருவிழாக்கள் நடைபெறுகிறது.

இக் கிராம முதியவர்களின் கூற்றுப்படி ... இக் கிராம மூதாதையர்கள் இக் கிராமத்தின் அருகில் அமைந்துள்ள குலசேகரநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தனர். சில காரணங்களால் அக் கிராமத்தில் இருந்து குடி பெயர்ந்து, தற்போது திருச்சுழி சாலையில் அமைந்துள்ள புளியூரான் விலக்கிற்கு அருகில் வாழ்ந்தனர். வீரசோழன் பகுதியில் இருந்து விருதுநகருக்கு விவசாய விளை பொருட்களை கொண்டு செல்பவர்களால் தொடர்ந்து இன்னல்கள் ஏற்ப்பட்ட காரணத்தினால் அங்கிருந்து இடம் பெயர்ந்து தற்போது இக் கிராமம் அமைந்துள்ள இடத்தில் வீடுகள் அமைத்து வாழத் தொடங்கினர்.

பூமலர்ந்த அம்மன்கோவில் வரலாறு[தொகு]

இக் கிராம மூதாதையர்கள் குலசேகரநல்லூரில் வாழ்ந்த காலத்தில் கண்மாய் வெட்டும்போது பூமலர்ந்த அம்மன் சிலை கிடைத்தது. குளத்தின் அருகிலேயே கோவில் கட்டி அம்மன் சிலையினை வைத்து வழிபட்டு வந்தனர். இக் கிராம மூதாதையர் குடிபெயர்ந்து வரும்போது அப் பூமலர்ந்த அம்மன் கோவிலில்இருந்து பிடி மண் எடுத்து தற்போதுள்ள மடத்துப்பட்டி கிராமத்திற்கு கொண்டு வந்து கோவில்கட்டி பூஜை செய்கின்றனர்.

இக் கோவில் திருவிழா நடைபெறுவதற்க்கு ஒரு வாரத்திற்கு முன் அம்மனிடம் உத்தரவினை பெற்று கொடி கட்டியவுடன் மழை பொழியும் என இக் கிராம மக்கள் நம்மபுகின்றர்..

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடத்துப்பட்டி.&oldid=3293033" இலிருந்து மீள்விக்கப்பட்டது