மகளிர் கல்லூரி, கொல்கத்தா
படிமம்:Women's College, Calcutta.jpg | |
வகை | இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1937 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
தலைவர் | பேராசிரியர் சவுகதா ராய் |
முதல்வர் | முனைவர் அனுபமா சவுத்ரி |
அமைவிடம் | பி -29, க்ஷிரோட் வித்யாவினோத் அவென்யூ, பாக் சந்தை, , , , 700003 , 22°36′24″N 88°22′07″E / 22.6065626°N 88.3686979°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | இணையதளம் |
மகளிர் கல்லூரி, கொல்கத்தா என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1937 [1] ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு இளங்கலை மற்றும் முதுகலை மகளிர் கல்லூரியாகும். உயர் கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்ற குறிக்கோளுடன் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் இணைக்கப்பட்டுள்ளது [2].
வரலாறு
[தொகு]இங்கிலாந்தின் இலண்டனில் முதுகலையும், முனைவர் பட்டமும் பெற்றுவிட்டு இந்தியா திரும்பிய திரேந்திர லால் தே என்பவரால் ஜூலை 2, 1937 துவங்கப்பட்ட இக்கல்லூரி, டிசம்பர் 1982 ஆம் ஆண்டில் தான், கல்லூரி தற்போது இயங்கும் பி-29, க்ஷிரோட் வித்யாவினோத் அவென்யூ,பாக்பஜார்,700003 என்ற கட்டிடத்திற்க்கு மாறியது. அதுவரை பல்வேறு தற்காலிக இடங்களிலேயே இயங்கி வந்துள்ளது.[3]
துறைகள்
[தொகு]அறிவியல் பிரிவு
[தொகு]- வேதியியல்
- கணிதம்
- புவியியல்
- உளவியல்
- உணவு மற்றும் ஊட்டச்சத்து
- விலங்கியல்
கலைப் பிரிவு
[தொகு]- வங்காளம்
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- ஹிந்தி
- வரலாறு
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- பொருளாதாரம்
- கல்வி
- பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு
- சமூகவியல்
- இசை.
அங்கீகாரம்
[தொகு]கொல்கத்தாவின் இந்த மகளிர் கல்லூரிக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) பி + + தரத்தை வழங்கி அங்கீகரித்துள்ளது.மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[4]
மேலும் காண்க
[தொகு]- கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்
- இந்தியாவில் கல்வி
- மேற்கு வங்காளத்தில் கல்வி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Colleges in West Bengal, University Grants Commission
- ↑ "Affiliated College of University of Calcutta".
- ↑ "மகளிர் கல்லூரி, கொல்கத்தாவின் வரலாறு".
- ↑ "Institutions Accredited / Re-accredited by NAAC with validity" (PDF). பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.