மகம் அங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகம் அங்கா
அரசவையில் அக்பருக்கு மிக அருகில் அமர்ந்திருக்கும் மகம் அங்கா
இறப்பு25 சூன் 1562[1]
ஆக்ரா, உத்தரப் பிரதேசம், இந்தியா
பெற்றோர்பீபி முபாரிகா, பாபர்
வாழ்க்கைத்
துணை
நதீம் கான்
பிள்ளைகள்ஆதாம் கான்
குலி கான்
தில்லி நகரத்தின் மெக்ராலியில் மகம் அங்காவின் கல்லறை
தில்லி புராணா கிலா எதிரில் மகம் அங்கா கட்டிய கைரூல் மன்சில் மசூதி

மகம் அங்கா (Maham Anga) முகலாயப் பேரரசர் அக்பரின் செவிலித் தாய் ஆவார். மகம் அங்காவை அக்பர் இராஜமாதா மரியாதையுடன் நடத்தினார்.[2] மகம் அங்கா, பாபர்-பீபி முபாரிகா தம்பதியரின் மகள் ஆவார். இவரது மகன் ஆதாம் கான் அக்பரின் படைத்தலைவர்களில் ஒருவர் ஆவார்.[3]அக்பரின் அமைச்சரை கொன்ற குற்றத்திற்காக, ஆதாம் கானுக்கு, அக்பர் மரண தண்டனை விதித்தார். இதனால் மனம் உடைந்த ஆதாம் கானை பெற்ற தாயான மகம் அங்கா பித்து பிடித்து அரண்மனையில் மாண்டார். தில்லி நகரத்தின் மெக்ராலியில் உள்ள ஆதாம் கானின் கல்லறை வளாகத்தில், கல்லறை கட்டி மகம் அங்காவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகம்_அங்கா&oldid=3675328" இலிருந்து மீள்விக்கப்பட்டது