போட்சா ஜான்சி லட்சுமி
Appearance
போட்சா ஜான்சி லட்சுமி | |
---|---|
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | தொகுதி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | அசோக் கஜபதி ராஜு |
தொகுதி | விஜயநகரம்[1] |
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் 2006–2009 | |
முன்னையவர் | கொண்டப்பள்ளி பைதிதல்லி நாயுடு |
பின்னவர் | தொகுதி கலைக்கப்பட்டது |
தொகுதி | பொப்பிலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
துணைவர் | போட்சா சத்யநாராயணா |
பிள்ளைகள் | 1மகன் , 1 மகள்[1] |
As of 20 நவம்பர், 2010 மூலம்: [1] |
போட்சா ஜான்சி லட்சுமி ( Botsa Jhansi Lakshmi) இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மக்களவைத் தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினருமாவார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஜான்சி லட்சுமி, 11 ஏப்ரல் 1964 அன்று ராஜமன்றியில் மஜ்ஜி ராமராவ் மற்றும் கலாவதிக்கு மகளாகப் பிறந்தார். முதுகலை (தத்துவம்), முனைவர் ஆகியவற்றை படித்தார். இவர் ஆந்திரப் பிரதேச முன்னாள் அமைச்சர் போட்சா சத்தியநாராயணாவை மணந்தார். இவருக்கு 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர்.
தொழில்
[தொகு]ஜான்சி 2001-2006 வரை விஜயநகர மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்தார்.[2] 2007-09 காலகட்டத்தில், இவர் மக்களவையில் பொப்பிலி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2009 ஆம் ஆண்டுவிஜயநகரம் மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Lok Sabha". 2013-02-01. Archived from the original on 1 February 2013. பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
- ↑ "Vizianagaram zp chairman race".