போஜ்பூர் மாவட்டம்
போஜ்பூர் மாவட்டம் भोजपुर ज़िला | |
---|---|
போஜ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு பீகார் | |
மாநிலம் | பீகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பட்னா கோட்டம் |
தலைமையகம் | அர்ரா |
பரப்பு | 2,474 km2 (955 sq mi) |
மக்கட்தொகை | 2,720,155 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,136/km2 (2,940/sq mi) |
படிப்பறிவு | 72.79 % |
பாலின விகிதம் | 900 |
மக்களவைத்தொகுதிகள் | அர்ரா |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 30, தேசிய நெடுஞ்சாலை 80 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 913 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
போஜ்பூர் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் அர்ரா நகரில் உள்ளது.
புவிப்பரப்பு
[தொகு]இது 2,395 சதுர கிலோமீட்டர்கள் (925 sq mi) பரப்பளவைக் கொண்டது.[1] கடல் மட்டத்தில் இருந்து 193 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
பிரிவுகள்
[தொகு]- மண்டலங்கள்:[2]
- சட்டமன்றத் தொகுதிகள்:[2] சந்தேஷ், பஃதரா, ஆரா, அகியாவ், தராரி, ஜகதீஷ்பூர், ஷாஹ்பூர்
- மக்களவைத் தொகுதிகள்:[2] ஆரா
பொருளாதாரம்
[தொகு]இது வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. அரசிடம் இருந்து பின்தங்கிய மாவட்டங்களுக்கான வளர்ச்சியைப் பெறுகிறது.[3] சோனி, கங்கை ஆற்று நீரைப் பயன்படுத்தி உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.
மக்கள் தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்ட போது, 2,720,155 மக்கள் வாழ்கின்றனர்.[4]
சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 1136 மக்கள் வசிக்கின்றனர்.[4] பால் விகிதக் கணக்கெடுப்பில் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் என்ற அளவு இருப்பதாகத் தெரிய வந்தது.[4] இவர்களில் 72.79% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[4]
மொழி
[தொகு]இங்கு வாழும் மக்கள் போச்புரி மொழியில் பேசுகின்றனர். இதை தேவநாகரி, கைதி எழுத்துமுறைகளில் எழுதுகின்றனர்.[5]
சான்றுகள்
[தொகு]- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Bihar: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. pp. 1118–1119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 11 October 2011.
{{cite book}}
:|last1=
has generic name (help) - ↑ 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-13.
- ↑ Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 4.2 4.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011.
- ↑ "Bhojpuri: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 30 September 2011.
இணைப்புகள்
[தொகு]- Bhojpur Information Portal பரணிடப்பட்டது 2012-03-23 at the வந்தவழி இயந்திரம்