பேரேரிகள்
Appearance
உலகில் உள்ள மிகப்பெரிய ஏரிகள் பேரேரிகள் எனப்படுவன. இவற்றுள் அமெரிக்கப் பேரேரிகள், ஆப்பிரிக்க பேரேரிகள் முக்கியமானவை ஆகும்.
அமெரிக்கப் பேரேரிகள்
[தொகு]அமெரிக்காவின் ஐந்து பெரிய ஏரிகள்
- பெரிய ஏரி (Lake Superior) அமெரிக்க ஏரிகள் ஐந்திலும் தான் கொண்டுள்ள நீரளவில் மிகப்பெரியதும், மிக ஆழம் கிக்கதும் ஆகும். இதன் பரப்பு ஸ்காட்லாண்டைக்காட்டிலும் அல்லது தென் கரோலினாவைக் காட்டிலும் பெரியது.
- மிச்சிகன் ஏரி (Lake Michigan) (இது நீர் கொள் அளவில் ஐந்து ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரி).
- ஹியூரான் ஏரி (Lake Huron) (நீர் கொள் அளவில் மூறாவது பெரிய ஏரி; பரப்பளவில் இரண்டாவது பெரியது).
- ஈரி ஏரி (Lake Erie) (நீர் கொள் அளவால் மிகச் சிறியதும், ஆழம் மிகக் குறைந்ததும் ஆகும்)
- ஒண்டாரியோ ஏரி (Lake Ontario) (நீர் கொள் அளவால் நான்காவதும், பரப்பளவால் ஐந்தாவதாகவும் உள்ள ஏரி; பிற ஏரிகளைக் காட்டிலும் தாழ்வான உயரத்தில் இருப்பது )
ஆப்பிரிக்கப் பேரேரிகள்
[தொகு]- டாங்கனிக்கா ஏரி (Lake Tanganyika)
- விக்டோரியா ஏரி (Lake Victoria)
- ஆல்பெர்ட் ஏரி (Lake Albert)
- எட்வர்ட் ஏரி (Lake Edward)
- கீவு ஏரி (Lake Kivu)
- மலாவி ஏரி (Lake Malawi)
ஏனைய பேரேரிகள்
[தொகு]- டாஸ்மேனியப் பேரேரி (Great Lake, தாஸ்மேனியா, ஆஸ்திரேலியா)
- பைக்கால் ஏரி (Lake Baikal)
- கரடிப்பேரேரி (Great Bear Lake, கனடாவின் வடமேற்குப் பகுதிகள்)
- சிலாவ் பேரேரி (Great Slave Lake) கனடாவின் வடமேற்கு ஆட்சிப்பகுதியின் இரண்டாவது பெரிய ஏரி.
- உப்புப் பேரேரி (Great Salt Lake) அமெரிக்க யுட்டா மாநிலத்தின் மிகப்பெரிய உப்பு ஏரி.
- உப்பு வெளிப் பேரேரி (Great Salt Plains Lake) - ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் உள்ள ஓக்லஹாமாவில் உள்ள செயற்கை ஏரி
- சகேண்டகாப் பேரேரி (Great Sacandaga Lake) - அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள அடிரோண்டாக் மலைத்தொடரில் உள்ள ஏரி.
- கசப்புப் பேரேரி (Great Bitter Lake) - எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் உள்ளது.