மலாவி ஏரி
மலாவி ஏரி | |
---|---|
ஆள்கூறுகள் | 12°11′S 34°22′E / 12.183°S 34.367°E |
வகை | Rift lake |
முதன்மை வரத்து | ருகுகு |
முதன்மை வெளிப்போக்கு | ஷயர் ஆறு |
வடிநில நாடுகள் | மலாவி மொசாம்பிக் தான்சானியா |
அதிகபட்ச நீளம் | 560 கிமீ தொடக்கம் 580 |
அதிகபட்ச அகலம் | 75 km |
Surface area | 29,600 கிமீ |
சராசரி ஆழம் | 292 மீ[1] |
அதிகபட்ச ஆழம் | 706 மீ[1] |
நீர்க் கனவளவு | 8,400 கிமீ³[1] |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 500 மீ |
Islands | லிக்கோமா மற்றும் சிசுமூலு |
மலாவி ஏரி ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மலாவி, மொசாம்பிக், தான்சானியா ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இது நியாசா ஏரி, லாகோ நியாசா ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றது. இந்த ஏரி ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள ஏரிகளுள் மூன்றாவது பெரிய ஏரியும், உலகின் ஒன்பதாவது பெரிய ஏரியும் ஆகும். வெப்பவலய நீர்நிலையான இந்த ஏரியே உலகின் வேறெந்த ஏரியைக் காட்டிலும் அதிக மீன் வகைகளைக் கொண்டது ஆகும். புகழ் பெற்ற பயணியும், மிஷனரியும் ஆகிய ஸ்கொட்லாந்தினரான டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் இப்பகுதிக்குச் சென்றிருந்ததன் காரணமாக ஆங்கிலம் பேசுபவர்கள் சில சமயங்களில் இதை லிவிங்ஸ்டன் ஏரி எனவும் அழைத்தனர்.
புவியியல்[தொகு]
மாலாவி ஏரி, 560 - 579 கிமீ நீளமும், அதிகபட்ச அகலமாக 75 கிலோமீட்டரையும் கொண்டது. இதன் மொத்த மேற்பரப்பு அளவு 29,600 கிமீ² ஆகும். இவ்வேரி, மேற்கு மொசாம்பிக், கிழக்கு மலாவி, தான்சானியாவின் தலைநிலப் பகுதியான தென் தங்கனிக்கா ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதனுள் பாயும் பெரிய ஆறி ருகுகு ஆறு ஆகும். சம்பேசி ஆற்றின் துணை நதியான ஷயர் ஆற்றினூடாக நீர் இதிலிருந்து வெளியேறுகிறது.