பெரிய மர அரணை
Appearance
பெரிய மர அரணை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | தா. கிரிசியா
|
இருசொற் பெயரீடு | |
தாசியா கிரிசியா கிரே, 1845 |
தாசியா கிரிசியா (Dasia grisea), சாம்பல் தாசியா, பெரிய மர அரணை அல்லது சாம்பல் மர அரணை என்றும் அழைக்கப்படுகிறது. இது மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளில் காணப்படும் ஒரு அரணைச் சிற்றினம் ஆகும்.[1] பகலாடி வகையினைச் சார்ந்த, இந்த அரணை, மெலிந்த உடலையும், நீளமான மூக்கையும் கொண்டது. தோலின் பின் பகுதி வெளிர் அல்லது அடர் பழுப்பு நிறத்தில் குறுகிய இருண்ட வளையங்களுடன் காணப்படும். முன் பகுதி பிரகாசமான பச்சை நிறத்தில் உள்ளது.[2] இது ஒரு அனைத்துன்னி வகையாகும். இது எறும்புகள், கரையான்கள், வண்டுகள், நத்தைகள் மற்றும் பழங்களை உட்கொள்கிறது. இது ஒரு நேரத்தில், இரண்டு முதல் ஆறு முட்டைகள் வரை இடும்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dasia grisea at the Reptarium.cz Reptile Database. Accessed 10 April 2020.
- ↑ Lee Grismer, L., Chan, K.O., Grismer, J.L., Wood Jr., P.L. & Norhayati, A. (2010). A Checklist of the Herpetofauna of the Banjaran Bintang, Peninsular Malaysia. Russian Journal of Herpetology 17 (2), 147-160. http://biodiversity.fbb.utm.my/izoo/sites/default/files/A%20checklist%20of%20the%20herpetofauna%20of%20Banjaran%20Bintang,%20Peninsular%20Malaysia.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Das, I. (2010). A Field Guide to the Reptiles of South-East Asia. New Holland Publishers (UK), England. pp. 369
- ↑ Das, I. & Norsham, S.Y. (2007). Status of Knowledge of The Malaysia Herpetofauna. In Chua, L.S.L., Kirton, L.G. & Saw, L.G. (Eds.), Status of Biological Diversity in Malaysia and Threat Assessment of Plant Species in Malaysia: Proceedings of the Seminar and Workshop, 28-30 June 2005. Forest Research Institute Malaysia (FRIM). pp. 31-81.