பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலைக்கழகம்
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1 ஏப்ரல் 2017 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | http://bmtu.ac.in/ |
பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலைக்கழகம் (Birsa Munda Tribal University) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தின் தலைமையிடமான ராஜ்பிப்லாவில் உள்ள பொதுப் பல்கலைக்கழகம் ஆகும் . இப்பல்கலைக்கழகம் அக்டோபர் 4, 2014-ல் நிறுவப்பட்டது. அப்போதைய பழங்குடியினர் நலத்துறை அமைச்சரான ஷப்தாஷரன் தத்வி இதனை முறையாகத் தொடங்கி வைத்தார்.[1][2][3][4][5]
வரலாறு
[தொகு]பழங்குடியின போராளியான பிர்சா முண்டா நினைவாக, பழங்குடியினர் அதிகமாக உள்ள நர்மதா மாவட்டத்தின் தலைமையிடமான ராஜ்பிப்லாவில் பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இது அகமதாபாத் நகரத்திற்கு தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
கல்வி
[தொகு]கலை, வணிகம், அறிவியல், பாரம்பரிய கலை, திறன், மூலிகை மருத்துவ அறிவு, சமசுகிருதம் உள்ளிட்ட பல பாடங்களில் பட்டப்படிப்பு, முதுகலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Birsa Munda Tribal University Inaugurated In Narmada District".
- ↑ "Birsa Munda Tribal University inaugurated in Narmada district". m.indiatoday.in.
- ↑ "Gujarat Assembly passes bill for setting up Birsa Munda Tribal University at Rajpipla". 22 March 2017.
- ↑ India, Press Trust of (15 October 2017). "Birsa Munda Tribal University inaugurated" – via www.thehindu.com.
- ↑ "गुजरात में बिरसा मुंडा विश्वविद्यालय का उद्घाटन".