பாடக் குறிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாடக் குறிப்பு (lesson plan) (பரவலாக பாடத் திட்டம்) என்பது ஒரு பாடத்திற்கான கற்பித்தல் அல்லது "கற்றல் பாதை" பற்றிய ஆசிரியரின் விரிவான விளக்கமாகும். வகுப்பறையில் எவ்வாறு கற்பித்தல் நடைபெறுகிறது என்பது தொடர்பாக ஆசிரியரால் தினசரி பாடக் குறிப்பு உருவாக்கப்படுகிறது. ஆசிரியரின் விருப்பம்,பாடத்தின் தன்மை மற்றும் மாணவர்களின் தேவைகளைப் பொறுத்து விவரங்கள் மாறுபடும். பள்ளிக்கூட அமைப்பால் சில கட்டாயத் தேவைகள் பாடக் குறிப்பில் இருக்கலாம். [1] ஒரு பாடக் குறிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பாடத்தை நடத்துவதற்கான ஆசிரியரின் வழிகாட்டியாகும், மேலும் அதில் இலக்கு (மாணவர்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்), இலக்கை எவ்வாறு அடைவது (வழிமுறை, செயல்முறை) மற்றும் எவ்வாறு இலக்கு அடையப்படும் என்பதை அளவிடும் வழி ஆகியவை அடங்கும் ( சோதனை, பணித்தாள், வீட்டுப்பாடம் போன்றவை. ) [2]

பாடக் குறிப்பிற்கான கூறுகள்[தொகு]

பாடக் குறிப்பில் பயன்படுத்தப்படும் பொதுவான கூறுகள் பின்வருமாறு:

  • பாடத்தின் தலைப்பு
  • நேரம்
  • கற்றல் துணைக்கருவிகள்
  • கற்றல் நோக்கங்கள்
  • கற்றல் விளைவுகள்
  • ஆர்வமூட்டுதல்/ அறிமுகம்
  • வாசித்தல்
  • புதிய வார்த்தைகள்
  • கருத்து வரைபடம்/மன வரைபடம்
  • தொகுத்தல்
  • வழங்குதல்
  • வலுவூட்டல்
  • மதிப்பீடு
  • குறைதீர் கற்பித்தல்
  • எழுதுதல்
  • தொடர்பணி[3]

ஹெர்பார்டியன் அணுகுமுறை: பிரெட்ரிக் ஹெர்பார்ட் (1776-1841)[தொகு]

ஹெர்பார்ட்டின் கூற்றுப்படி, "எதிர்கால பாடங்களுக்கான புரிதலை விரிவுபடுத்தும் அதே வேளையில் மாணவர்களின் தவறான புரிதல்களை அடையாளம் கண்டு அதனைத் திருத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட எட்டு நிலைகள் உள்ளன". அவையாவன

  1. அறிமுகம்
  2. ஆர்வமூட்டுதல்
  3. அறிவுக் கிளர்ச்சி
  4. புதிய தகவல்களின் அறிமுகம்
  5. தெளிவுபடுத்துதல்
  6. பயிற்சி மற்றும் மீளாய்வு
  7. சுயாதீன பயிற்சி
  8. முடிவு[4]

பாடத் திட்டங்கள் மற்றும் அலகுத் திட்டங்கள்[தொகு]

ஒரு சிறந்த பாடக் குறிப்பானது மாணவர்களின் நலன்களையும் தேவைகளையும் பிரதிபலிக்கிறது. இது கல்வித் துறைக்கான சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கியது. பாடத் திட்டம் ஆசிரியரின் கல்வித் தத்துவத்துடன் தொடர்புடையது, இது மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதன் முதன்மை நோக்கம் என்று ஆசிரியர் உணர்கிறார். [5]

மேலும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. O'Bannon, B. (2008). "What is a Lesson Plan?". Innovative Technology Center * The University of Tennessee. Archived from the original on July 29, 2011. பார்க்கப்பட்ட நாள் May 17, 2011.
  2. "What Is A Lesson Plan?". English Club. பார்க்கப்பட்ட நாள் 15 October 2014.
  3. "Writing Lesson Plans பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம்." Huntington University 15 Mar. 2009.
  4. Cunningham, Gini. "Lesson Plans and Unit Plans: The Basis for Instruction". ASCD (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.
  5. Mitchell, Diana, and Stephen Tchudi, "Exploring and Teaching the English Language Arts" (4th Ed.). Boston, MA: Allyn & Bacon, 1999.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடக்_குறிப்பு&oldid=3750683" இலிருந்து மீள்விக்கப்பட்டது