வீட்டுப்பாடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடிவியல் வீட்டுப்பாடம் செய்யும் ஒருவர்.

வீட்டுப்பாடம் (Homework) என்பது மாணவர்களுக்கு ஆசிரியர்களால் கொடுக்கப்படும் வகுப்பிற்கு வெளியே முடிக்கப்பட வேண்டிய பணிகளின் தொகுப்பாகும். பொதுவாக வீடுப்பாடத்தில் வாசித்தல், ஒரு எழுதுதல் அல்லது தட்டச்சு செய்தல், கணித பயிற்சிகள், ஒரு தேர்விற்கு முன் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டிய தகவல்கள் அல்லது பயிற்சி பெற வேண்டிய பிற திறன்கள் ஆகியன கொடுக்கப்படும்.

வெனிசு, இத்தாலியினைச் சேர்ந்த ராபர்டோ நெவிலிஸ் தனது மாணவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காக 1095 அல்லது 1905 இல் வீட்டுப்பாடங்களைக் கண்டுபிடித்தார் என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால் இதற்கு வரலாற்று ரீதியாக எந்தச் சான்றுகளும் இல்லாததால் இது கட்டுக்கதையாகக் கருதப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் அமெரிக்க அரசியல்வாதியும் கல்வி சீர்திருத்தவாதியுமான ஹொரேஸ் மான், வீட்டுப்பாடம் குறித்த நவீன கருத்தை கண்டுபிடித்து பள்ளிகளில் வீட்டுப்பாடம் என்பது தேவையான ஒன்று என்பதனை கருதச் செய்தார் என்றும் நம்பப்படுகிறது. புருசியாவில் உள்ள தி வோல்க்சுலென் ( மக்களின் பள்ளியில்) பள்ளி சென்று வந்த பிறகு அவருக்கு இந்த யோசனை வந்தது . அந்தப் பள்ளியில் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடம், அமெரிக்க கல்வி முறையில் அமல்படுத்த ஹோரேஸ் மானை ஊக்கப்படுத்தியது, பின்னர் அது உலகம் முழுவதும் விரைவில் பின்பற்றப்பட்டது. [1]

வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவது தற்போது வரை விவாதத்திற்கு உள்ளான ஒன்றாகவே கருதப்படுகிறது. பொதுவாக, வீட்டுப்பாடம் குழந்தைகளிடையே கல்வி செயல்திறனை மேம்படுத்தாது என்றும் (குறிப்பாக மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு) , வீட்டுப்பாடம் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது மற்றும் மாணவர்கள் வெளியில் செலவழிக்கக்கூடிய நேரம், உடற்பயிற்சி, விளையாடுவது, வேலை செய்வது, தூங்குவது அல்லது பிற செயல்பாடுகளில் செலவழிக்கக்கூடிய நேரத்தைக் குறைக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.

நோக்கங்கள்[தொகு]

மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்களை ஒதுக்குவதற்கான அடிப்படை நோக்கங்கள் பொதுவாக கற்றல் செயல்பாட்டிற்கான நோக்கங்கள் போலவே இருக்கின்றன: அறிவை அதிகரிப்பதற்கும் மாணவர்களின் திறன்களையும் திறமைளையும் மேம்படுத்துவதற்கும், [2] வரவிருக்கும் பாடங்களைத் தயார்படுத்துவதனையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்கள் ஏற்கனவே கற்றுக்கொண்டதை வலுப்படுத்தும் வகையில் வீட்டுப்பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. [3]

வீட்டுப்பாடங்களை ஒதுக்குவதற்கு ஆசிரியர்களுக்கு பல நோக்கங்கள் உள்ளன: [4]

 • பயிற்சி,
 • தயாரிப்பு,
 • பங்கேற்பு,
 • தனிப்பட்ட வளர்ச்சி,
 • பெற்றோர்-குழந்தை உறவுகள்,
 • பெற்றோர்-ஆசிரியர் தொடர்புகள்,
 • சக மாணவர்கள் தொடர்புகள்,
 • கொள்கை,
 • பொது உறவுகள், மற்றும்
 • தண்டனை.

சான்றுகள்[தொகு]

 1. https://www.througheducation.com/debunking-the-myth-of-roberto-nevilis-who-really-invented-homework/
 2. Synthesis of research on homework. H Cooper - Educational leadership, 1989 - addison.pausd.org
 3. Needlmen, Robert. "Homework: The Rules of the Game".
 4. Epstein, Joyce L.; Voorhis, Frances L. Van (2001-09-01). "More Than Minutes: Teachers' Roles in Designing Homework". Educational Psychologist 36 (3): 181–193. doi:10.1207/S15326985EP3603_4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0046-1520. 

மேலும் வாசிக்க[தொகு]

John Buell (2000)Alfie Kohn (2006)

 • டியூக் ஸ்டடி : வீட்டுப்பாடம் அதிகம் இல்லாதவரை மாணவர்களுக்கு பள்ளியில் வெற்றிபெற உதவுகிறது.
 • வீட்டுப்பாடத்திற்கு எதிரான வழக்கு: வீட்டுப்பாடம் நம் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும் சாரா பென்னட் & நான்சி கலிஷ் (2006) வீட்டுப்பாடம் பற்றிய ஆய்வுகள் பற்றிய விரிவான மதிப்பீடுகள்
 • அல்ஃபி கானின் (2006)தி ஹோம்வொர்க் மித்
 • ஜான் புவெல்லின் வீட்டுப்பாடத்தின் முடிவு:

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுப்பாடம்&oldid=3092942" இலிருந்து மீள்விக்கப்பட்டது