உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தானில் சீனாவுக்கு எதிரான பயங்கரவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாக்கித்தானில் சீன நாட்டினர்களை குறிவைத்து பல பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதல்களை பலுசிஸ்தான் விடுதலைப்படை (BLA), பாக்கிஸ்தான் தலிபான் போன்ற பாக்கித்தான் பயங்கரவாத அமைப்புகள் நிகழ்த்தியுள்ளன. பிராந்தியத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால் சீனத்தில் உய்குர் மக்களை நடத்தும் விதம், பாக்கித்தானில் சீனத்தின் முதலீடு போன்றவை சீனாவை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பதற்கு காரணமாக ஆனது.

காரணம்

[தொகு]

2004 ஆம் ஆண்டு முதல் சீன நாட்டினரைக் குறிவைத்து பாக்கித்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.[1] சீனாவின் உலகளாவிய செல்வாக்கு அதிகரித்து வருவதால் இந்தத் தாக்குதல்கள் 2018 ஆம் ஆண்டு தொடங்கி அதிகரித்தன. மேலும் சீனக் குடிமக்கள் வேறு எந்த நாட்டையும் விட பாக்கித்தானில் பொதுவாக பயங்கரவாத தாக்குதல்களுக்கு பலியாகிறார்கள். ஆப்கானித்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதும், அமெரிக்க தலையீடு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பயங்கரவாதம் அதிகரித்ததும் தாக்குதல்கள் மேலும் அதிகரித்துள்ளன. சீன பிரஜைகளுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ளும் குழுக்களுடன் ஒத்துழைப்பை மட்டுப்படுத்த, ஆப்கானிஸ்தான் தாலிபான்களுடன் சீனா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. [2]

உலக அரங்கில் சீனத்தின் பங்கு அதிகரித்து வருவதால் தேசிய இயக்கங்கள் சீனத்தை "புதிய குடியேற்றவாதி" என்று அதிகளவில் விமர்சிகின்றன. சீன அரசால் உய்குர் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற கூற்றின் காரணமாக ஜிகாதி குழுக்களுக்கு சிஞ்சியாங்கில் உய்குர் மக்களில் நிலைமையைச் சுட்டிக் காட்டி சீனத்திற்கு எதிராக செயல்படுகின்றனர்.[2]

பலுச்சிசுத்தானம் பகுதியானது சீனா–பாக்கித்தான் பொருளாதார பாதையின் முக்கிய மையமாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சீனம் இந்த பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் அதிக முதலீடு செய்துள்ளது. மேலும் இப்பகுதியில் வணிகங்களை நிறுவியுள்ளது. இந்த திட்டங்களை முன்னெடுக்க சீன நாட்டினர் வருவதானது பலூச்சித்தான் விடுதலைப்படை போன்ற தேசிய, பிரிவினைவாத குழுக்களுடன் மோதலை ஏற்படுத்தியுள்ளது. பலூச்சித்தான் விடுதலைப்படையானது சீன வருகையை ஒரு "ஒடுக்குமுறையாளர்" என்று வர்ணித்துள்ளது. இனவாதிகள் பாக்கி்த்தான் அரசாங்கத்துடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் காரணதினால் பாக்கித்தான் அரசுடன் பொருளாதார ஒத்துழைப்பில் உள்ள சீன அரசினரும் அச்சுறுத்தப்படுகின்றனர். பாக்கித்தான் அதன் எல்லைகளுக்குள் செயல்படும் பல்வேறு தீவிரவாத குழுக்களினால் பல்வேறு பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளது, இந்த பிரச்சினைகள் பொதுவாக "சீன எதிர்ப்பு பயங்கரவாதம்" என்று வடிவமைக்கப்படவில்லை. மாறாக, இந்த சவால்கள் முதன்மையாக உள்நாட்டு பிரச்சினைகள், பிராந்திய மோதல்கள், தீவிரவாத சித்தாந்தங்களுடன் தொடர்புடையவையாக கருதப்படுகின்றன.[3]

எதிர்வினை

[தொகு]

அமெரிக்காவில், செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு, குறிப்பாக பாக்கித்தானுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை சீனா விரிவுபடுத்தியது.[4] பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தங்களில் பாக்கித்தான் ஒத்துழைத்த பல நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். மேலும் நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் பாதிப்படையாமல் தடுக்க பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அதிக அளவில் கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. 2009 இல், சீனக் குடியரசு தலைவர் ஹு ஜிண்டாவோ பாக்கித்தான் தனது பாதுகாப்புக் கொள்கையை மேம்படுத்துவதில் ஆதரவை வழங்கினார். சீனா மற்றும் பாக்கித்தானின் உள்துறை அமைச்சகங்களானது இரு நாடுகளையும் குறிவைக்கும் பயங்கரவாதத்தை எதிர்த்து நிபுணத்துவத்தையும், உளவுத்துறைத் தகவல்களையும் பரிமாற்றம் செய்துகொள்கின்றன.[1] 2015 ஏப்ரலில், நாட்டில் உள்ள சீனக் குடிமக்களைப் பாதுகாக்க 12,000 வீரர்களைக் கொண்ட பாக்கித்தான் இராணுவப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது.[5]

தாக்குதல்கள்

[தொகு]
  • 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பாக்கித்தானில் உள்ள சீனத் தூதர்களைக் கடத்த திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் சீனம் கூறியது.[4]
  • 23, நவம்பர், 2018 அன்று கராச்சியின் கிளிஃப்டனில் உள்ள சீனத் தூதரகம் மீது பலூச்சத்தான் விடுதலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மூன்று துப்பாக்கிதாரிகள் துணைத் தூதரகத்திற்குள் நுழைய முயன்று, காவல்துறையினரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், தாக்குதலில் இரண்டு காவல் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.[6]
  • பாகிஸ்தானுக்கான சீன தூதர் நோங் ரோங்கை குறிவைத்து குவெட்டாவில் 2021 ஏப்ரல் 21 அன்று பாக்கித்தான் தலிபான்களால் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டுவெடிப்பின் போது நோங் ரோங் தங்கு விடுதியில் இருந்தார், ஆனால் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.[7]
  • 14 சூலை 2021 அன்று கைபர் பக்துன்க்வாவில் நடந்த குண்டுவெடிப்பில் ஒன்பது சீனத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். சீன பொறியாளர்களை ஒரு கட்டுமான தளத்திற்கு ஏற்றிச் சென்ற பேருந்து மீது வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற ஊர்தி மோதி இந்த தாக்குதல் நிகழ்த்தபட்டது. இதில்இரண்டு பாக்கித்தான் படை வீரர்களும் கொல்லப்பட்டனர்.[8] இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை,[2] என்றாலும் பாக்கித்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆப்கானித்தான், இந்திய நாடுகளின் ஆதரவுடன் செயல்படும் பாக்கித்தான் தலிபான்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறினார்.[8]
  • 20 ஆகத்து 2021 அன்று குவாடாரில் சீன நாட்டினரை ஏற்றிச் சென்ற ஊர்தியை குறிவைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் பலூச்சித்தான் விடுதலைப்படையால் நடத்தப்பட்டது. தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர்..[9]
  • 26 ஏப்ரல் 2022 இல் கராச்சி பல்கலைக்கழகத்தின் கன்பூசியஸ் நிறுவனத்தில் பாலுச்சித்தான் விடுதலைப்படையால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் மூன்று சீன பயிற்றுனர்களும் அவர்களின் பாக்கித்தான் ஓட்டுநரும் கொல்லப்பட்டனர். ஒரு சீன பயிற்றுவிப்பாளர் காயமடைந்தார்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Khan, Rashid Ahmad (2012). "Pakistan and China: cooperation in counter-terrorism". Strategic Studies (Institute of Strategic Studies Islamabad) 32/33: 70–78. பன்னாட்டுத் தர தொடர் எண்:1029-0990. Khan, Rashid Ahmad (2012). "Pakistan and China: cooperation in counter-terrorism". Strategic Studies. 32/33. மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் இஸ்லாமாபாத்: 70–78. ISSN 1029-0990. JSTOR 48527626.
  2. 2.0 2.1 2.2 Pantucci, Abdul Basit, Raffaello (2021-08-27). "Why Terrorists Will Target China in Pakistan" (in en-US). https://foreignpolicy.com/2021/08/27/why-terrorists-will-target-china-in-pakistan/. 
  3. Editorial (2021-08-24). "Anti-China attacks". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-24.
  4. 4.0 4.1 Ali, Ghulam (2010-05-26). "China's Deepening Engagement with Pakistan on Counterterrorism". CACI Analyst (Central Asia-Caucasus Institute). https://www.cacianalyst.org/publications/analytical-articles/item/12061-analytical-articles-caci-analyst-2010-5-26-art-12061.html. 
  5. Shah, Saeed; Chin, Josh (2015-04-22). "Pakistan to Create Security Force to Protect Chinese Workers". The Wall Street Journal. https://www.wsj.com/articles/pakistan-to-create-security-force-to-protect-chinese-workers-1429701872. 
  6. "Pakistan hotel bomb: Deadly blast hits luxury venue in Quetta" (in en-GB). BBC News. 2021-04-21. https://www.bbc.com/news/world-asia-56834937. 
  7. "Pakistan hotel bomb: Deadly blast hits luxury venue in Quetta". BBC News. 2021-04-21. https://www.bbc.com/news/world-asia-56834937. 
  8. 8.0 8.1 Saifi, Sophia (2021-08-13). "Pakistan's foreign minister blames Afghanistan and India for suicide attack on Chinese workers". CNN. https://www.cnn.com/2021/08/12/asia/china-pakistan-india-afghanistan-intl-hnk/index.html. 
  9. Yousafzai, Gul (2021-08-20). "Two killed in suicide bombing targeting Chinese nationals in Pakistan". Reuters. https://www.reuters.com/world/asia-pacific/two-killed-suicide-bombing-targeting-chinese-nationals-southwest-pakistan-2021-08-20/. 
  10. Saifi, Sophia (2022-04-27). "Female suicide bomber behind Karachi attack that killed 3 Chinese citizens: police". CNN. https://www.cnn.com/2022/04/27/asia/pakistan-karachi-blast-chinese-nationals-killed-intl-hnk/index.html.