பணமோசடி தடுப்பு சட்டம், 2002
இந்த தொகுப்பு சம்பத்தப்பட்டது |
பண மோசடி தடுப்புச் சட்டம், 2002 |
---|
பண மோசடி தடுப்புச் சட்டம், 2002 |
பணமோசடி தடுப்பு சட்டம், 2002 என்பது இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகும், இது பணமோசடியைத் தடுக்கவும், பணமோசடியில் இருந்து பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் NDA அரசாங்கத்தால் இயற்றப்பட்டது.[1] பணமோசடி தடுப்பு சட்டம், 2002 மற்றும் அதன் கீழ் பிறப்பிக்கப்பட்ட விதிகள் ஜூலை 1, 2005 முதல் நடைமுறைக்கு வந்தன. இந்த சட்டம் மற்றும் விதிகளின் படி வங்கி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை சரிபார்க்கவும், பதிவுகளை பராமரிக்கவும் மற்றும் தகவல்களை நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் இந்தியாவின் நிதி புலனாய்வு பிரிவுக்கு வழங்கவும் கடமை விதிக்கப்பட்டுள்ளது.[2]
வரலாறு
[தொகு]இந்தசட்டம் 2002 ம் ஆண்டு நிறைவேற்றப்ப்பட்டது. ஆனால், 2005 ம் ஆண்டு தான் நடைமுறைப் படுத்தப்பட்டது.
இந்த சட்டம் 2005, 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது.
உச்ச நீதிமன்றம்
[தொகு]24 நவம்பர் 2017 அன்று, குடிமக்களின் சுதந்திரத்திற்கு ஆதரவான தீர்ப்பில், உச்சநீதிமன்றம் பணமோசடி தடுப்புச் சட்டத்தில் மூன்று வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அரசு பொது வழக்கறிஞர் எதிர்த்தால் ஜாமீன் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது எனும் ஒரு பிரிவை நீக்கியுள்ளது. இந்த சட்டத்தின் பிரிவு 45 ன்படி, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அரசு வக்கீல், அவரது ஜாமீனை எதிர்ப்பதற்கான வாய்ப்பைப் பெறாவிட்டால், எந்தவொரு நபருக்கும் இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு குற்றத்திற்கும் ஜாமீன் வழங்க முடியாது. பொது வக்கீல் ஜாமீனை எதிர்ப்பதற்குத் தேர்வுசெய்தால், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தில் குற்றவாளி அல்ல என்பதையும், கூடுதலாக ஜாமீனில் வெளியே வரும்போது எந்தவொரு குற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்பதையும் நீதிமன்றம் நம்ப வேண்டும்.(இந்த விதி இந்திய அரசியலமைப்பின் 14 மற்றும் 21 வது பிரிவுகளை மீறுவதாகக் காணப்பட்டது)
குறிக்கோள்கள்
[தொகு]இந்த சட்டம், இந்தியாவில் பணமோசடிகளை எதிர்க்க முயலுகிறது. மேலும் இது மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது:
- பணமோசடியைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும்.
- மோசடியால் பெறப்பட்ட பணத்திலிருந்து பெறப்பட்ட சொத்தை பறிமுதல் செய்தல்; மேலும்
- இந்தியாவில் பணமோசடி தொடர்பான மற்ற சிக்கல்களைச் சமாளிக்க.[3]
முக்கிய விளக்கங்கள்
[தொகு]- கைப்பற்றுதல்: பொருத்தமான சட்ட உத்தரவின் மூலம் சொத்து பரிவர்த்தனை செய்தல், மாற்றம்ல் செய்தல், மறைத்தொழித்தல் அல்லது இடமாற்றம் செய்தல் ஆகியவற்றை தடை செய்தல்.[4]
- குற்றத்தில் ஈட்டிய வருமானம்: திட்டமிடப்பட்ட குற்றம் தொடர்பான குற்றச் செயல்களின் விளைவாக எந்தவொரு நபராலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறப்பட்ட எந்தவொரு சொத்தும்.[5]
- பணமோசடி: குற்றத்தின் வருமானத்துடன் அதை கறையில்லா சொத்தாகக் காட்டுவது தொடர்புடைய எந்தவொரு செயலிலும் எவரேனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்ற நபரை ஈடுபடுத்தவோ அல்லது உதவவோ முயற்சிக்கிறார்களோ அல்லது உண்மையில் ஈடுபடுகிறார்களோ அது பண மோசடியாகும்.[6]
- கட்டண முறை: பணம் செலுத்துபவர் மற்றும் ஒரு பயனாளிக்கு இடையில் கட்டணம் செலுத்துதல், தீர்வு, கட்டணம் அல்லது தீர்வு சேவை அல்லது அவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பு. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பண பரிமாற்றம் அல்லது ஒத்த செயல்பாடுகளை இயக்கும் அமைப்புகள் இதில் அடங்கும்.[7]
முக்கிய அம்சங்கள்
[தொகு]பணமோசடிக்கு தண்டனை
[தொகு]பணமோசடிக்கு குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எந்தவொரு நபருக்கும் மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சட்டம் பரிந்துரைக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட குற்றத்தின் வருமானம் அட்டவணையின் பகுதி A இன் 2 வது பத்தியின் (போதை மருந்து மற்றும் மனமயக்க பொருள் சட்டம், 1985 இன் கீழ் குற்றங்கள்) கீழ் எந்தவொரு குற்றத்துடனும் தொடர்புடையது எனில் அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகளுக்கு பதிலாக 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.[8]
கறைபடிந்த சொத்தினை கைப்பற்றும் அதிகாரங்கள்
[தொகு]இயக்குநரின் அதிகாரத்துடன் துணை இயக்குநர் பதவிக்கு மேலே உள்ள இயக்குநர் அல்லது அதிகாரி 180 நாட்களுக்கு "குற்றத்தின் வருமானம்" என்று நம்பப்படும் சொத்தை தற்காலிகமாக கைப்பற்றுதல் செய்ய முடியும். அத்தகைய உத்தரவை ஒரு அதிகாரம் பெற்ற ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.[9]
தீர்மானிக்கும் அதிகார அமைப்பு
[தொகு]இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி மத்திய அரசு அரசாணையில் அறிவிக்கும் அதிகார எல்கை, அதிகாரம் மற்றும் அங்கீகாரத்திற்க்கு உட்பட்டு தீர்மானிக்கும் அதிகார அமைப்பானது செயல் படும். கைப்பற்றப்பட்ட அல்லது பறிமுதல் செய்யப்பட்ட எந்தவொரு சொத்தும் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதா என்பதை இது தீர்மானிக்கிறது.[10]
தீர்ப்பளிக்கும் அதிகாரம் 1908 ஆம் ஆண்டு சிவில் நடைமுறைக் கோட் வகுத்த நடைமுறைக்கு கட்டுப்படாது, ஆனால் இயற்கை நீதிக்கான கொள்கைகளால் வழிநடத்தப்படும் மற்றும் பண மோசடி சட்டத்தின் பிற விதிகளுக்கு உட்பட்டது. தீர்ப்பளிக்கும் அதிகாரசபைக்கு அதன் சொந்த நடைமுறையை ஒழுங்குபடுத்த அதிகாரங்கள் இருக்கும்.[11]
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பரிவர்த்தனைகளில் அனுமானம்
[தொகு]இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பரிவர்த்தனைகளை உள்ளடக்கியிருந்தால் அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் பணமோசடியில் ஈடுபட்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டால் மீதமுள்ள பரிவர்த்தனைகள் அத்தகைய பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக அமைகின்றன என்று அனுமானிக்கப்படும்.[12]
நிரூபண கடப்பாடு
[தொகு]பணமோசடி குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர், குற்றத்தின் மூலம் கூறப்படும் வருமானம் உண்மையில் சட்டபூர்வமான சொத்து என்பதை நிரூபிக்க வேண்டும்.[13]
மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
[தொகு]ஒரு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் என்பது இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமைப்பு. தீர்ப்பளிக்கும் அதிகாரசபையின் உத்தரவுகளுக்கும், சட்டத்தின் கீழ் வேறு எந்த அதிகாரத்திற்கும் எதிராக முறையீடுகளை கேட்க அதிகாரம் வழங்கப்படுகிறது.[14] தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை பொருத்தமான உயர்நீதிமன்றத்திலும் (அந்த அதிகார வரம்பிற்கு) மேல்முறையீடு செய்யலாம் மற்றும் இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம்[15]
சிறப்பு நீதிமன்றம்
[தொகு]பண மோசடி தடுப்பு சட்டம், 2002 இன் பிரிவு 43 ன் படி, உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து, ய அறிவிப்பு மூலம், பிரிவு 4 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை விசாரிக்க, அத்தகைய பகுதி அல்லது பகுதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அல்லது சிறப்பு நீதிமன்றங்களாக அமர்வு அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கு அல்லது வகுப்பு அல்லது வழக்குகளின் குழுக்களை விசாரணை செய்ய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீதிமன்றங்களை நியமிக்கும் என்று கூறுகிறது .
நிதி புலனாய்வு பிரிவு - இந்தியா
[தொகு]நிதி புலனாய்வு பிரிவு - இந்தியா (FIU-IND) இந்திய அரசாங்கத்தால் நவம்பர் 18, 2004 அன்று மத்திய தேசிய நிறுவனமாக அமைக்கப்பட்டது. இது, சந்தேகத்திற்கிடமான நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களைப் பெறுதல், செயலாக்குதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றுக்கு பொறுப்பானது. பணமோசடி மற்றும் தொடர்புடைய குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளைத் தொடர தேசிய மற்றும் சர்வதேச உளவுத்துறை, விசாரணை மற்றும் அமலாக்க நிறுவனங்களின் முயற்சிகளை ஒருங்கிணைத்து பலப்படுத்துவதற்கும் FIU-IND பொறுப்பாகும்.. FIU-IND என்பது நிதியமைச்சர் தலைமையிலான பொருளாதார புலனாய்வு கவுன்சிலுக்கு (EIC) நேரடியாக அறிக்கை செய்யும் ஒரு சுய அதிகார அமைப்பாகும்.[16]
பிற நாடுகளிலும் இதே போன்ற சட்டங்கள்
[தொகு]1986 ஆம் ஆண்டின் பணமோசடி கட்டுப்பாட்டு சட்டம்
[தொகு]இது அமெரிக்க ஐக்கிய காங்கிரசின் ஒரு சட்டமாகும். இதன்படி, பணமோசடியானது ஒரு பெடரல் குற்றமாக கருதப்படுகிறது. இது அமெரிக்காவில் முதல் முறையாக பணமோசடியை குற்ற வழக்காக்கியது.[17]
- பெடரல் குற்றமாக பணமோசடி கருதப்பட்டது.
- ல்சி.டி.ஆர் தாக்கல்களைத் தவிர்ப்பதற்கு பரிவர்த்தனை கட்டமைப்பதை தடைசெய்தது
- பிஎஸ்ஏ மீறல்கள் மற்றும் பிற மீறல்களுக்காக சிவில் மற்றும் கிரிமினல் பறிமுதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- பிஎஸ்ஏவின் அறிக்கையிடல் மற்றும் பதிவு வைத்தல் தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் நடைமுறைகளை நிறுவவும் பராமரிக்கவும் வங்கிகளுக்கு உத்தரவிட்டது[18]
இதனையும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 12 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-04-25.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Section 12 of PMLA, 2002".
- ↑ "Department of Revenue |". dor.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-10-29.
- ↑ "Section 2(1)(d) in PMLA, 2002". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 10 October 2012.
- ↑ "Section 2(1)(u) in PMLA, 2002". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 10 October 2012.
- ↑ "Section 3 in PMLA, 2002". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 10 October 2012.
- ↑ "Section 2(1)(rb) of PMLA 2002". Indian kanoon.
- ↑ "PMLA 2002 - Section 4 - Punishment for Money Laundering". fiuindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-10-29.
- ↑ "Section 5 in PMLA, 2002". Kanoon. பார்க்கப்பட்ட நாள் 10 October 2012.
- ↑ "Section 6 of PMLA 2002". Indian Kanoon.
- ↑ "Sub-section 15 of Section 6 of PMLA, 2002". Indian Kanoon.
- ↑ "Section 23 of PMLA 2002". Indian kanoon.
- ↑ "Section 24 in PMLA, 2002". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 10 October 2012.
- ↑ "Section 25 in PMLA, 2002". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 10 October 2012.
- ↑ "Section 42 in PMLA, 2002". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 10 October 2012.
- ↑ "About FIU-IND - Overview". fiuindia.gov.in. Archived from the original on 8 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.
- ↑ Cassella, Stephan (September 2007). Money Laundering Laws. https://www.justice.gov/usao/eousa/foia_reading_room/usab5505.pdf. பார்த்த நாள்: 2 March 2011.
- ↑ "Money Laundering control Act 1986". Archived from the original on 2016-08-20. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.