சிறப்பு நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்பு நீதிமன்றம் (ஆங்கில மொழி: Special court) என்பது குறிப்பிட்ட சட்டம் சார்ந்தோ, குறிப்பிட்ட பகுதி சார்ந்தோ அளவான அதிகார எல்லைக்குள் செயல்படும் ஒரு வகை நீதிமன்றமாகும்.

இந்தியா[தொகு]

இந்தியாவில் புலனாய்வு சிறப்பு நீதிமன்றம், பட்டியல் சாதியினர்/ பட்டியல் பழங்குடியினர் மீதான வன்முறை தடுப்புச் சிறப்பு நீதிமன்றம்[1] , கறுப்புப் பண மோசடி தடுப்புச் சிறப்பு நீதிமன்றம், மக்கள் பிரதிநிதிகளின் குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன.[2]

இந்தியாவின் சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுடன் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டலில் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, பீகார், கர்நாடகா, மேற்கு வங்கம், டில்லி, மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் மக்கள் பிரதிநிதிகளின் மீதுள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை மத்திய அரசின் நிதி உதவியுடன், மாநில அரசால் உருவாக்கப்படுகிறது, மாநில உயர்நீதிமன்றங்களுக்கு கட்டுப்படாது.[3] தமிழகத்தில் 2018 செப்டம்பரில் உருவான சிறப்பு நீதிமன்றம், தமிழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதுள்ள வழக்குகளை விசாரித்து வருகிறது.[4] 2018 டிசம்பரில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்கில் தி.மு.க அரசியல்வாதி சு. இராஜகுமாருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. 2019 ஜனவரியில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.[5]

இதர நாடுவாரியாக சிறப்பு நீதிமன்றம்[தொகு]

அமெரிக்கா[தொகு]

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறப்பு நீதிமன்றமானது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளைக் கையாளுகிறது. போதைபொருள் நீதிமன்றம், குடும்ப நீதிமன்றம், போக்குவரத்து நீதிமன்றம் போன்றவை பொதுவான சிறப்பு நீதிமன்றங்கள்.

சீனா[தொகு]

இராணுவம், தேசிய இரயில்வே அமைப்பு, கடல்சார் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன.

ஐக்கிய இராஜ்ஜியம்[தொகு]

சிறிய போக்குவரத்து மீறல்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ளன.[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Four more special courts to be set up to handle cases of atrocities against SCs, STs
  2. "What is special about special courts?". தி இந்து. https://www.thehindu.com/opinion/op-ed/What-is-special-about-special-courts/article16978952.ece. பார்த்த நாள்: 8 January 2019. 
  3. "Tamil Nadu sets up special court to try MLAs, MPs in criminal cases". டைம்ஸ் ஆப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/articleshow/65790717.cms. பார்த்த நாள்: 8 January 2019. 
  4. "Centre nudges Tamil Nadu, UP to form special courts for trying lawmakers with criminal cases". hindustantimes. https://www.hindustantimes.com/india-news/centre-nudges-tamil-nadu-up-to-form-special-courts-for-trying-lawmakers-with-criminal-cases/story-PKxN4Bk6IzQHVyw4JBG3XL.html. பார்த்த நாள்: 8 January 2019. 
  5. "10 நாள்களுக்குள் இரு அதிரடி தீர்ப்பு! - தமிழக அரசியல்வாதிகளுக்கு வில்லனான சிறப்பு நீதிமன்றம்". விகடன். https://www.vikatan.com/news/tamilnadu/146675-special-court-is-the-special-villain-for-tamilnadu-bad-politicians.html. பார்த்த நாள்: 8 January 2019. 
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-10. பார்க்கப்பட்ட நாள் 2019-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்பு_நீதிமன்றம்&oldid=3783082" இலிருந்து மீள்விக்கப்பட்டது